புதினா துவையல் - Mint Leaves / Pudina Thuvayal

புதினாவில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. புதினாவினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்,
·         ஜீரணம் எளிதில் செய்ய உதவுகின்றது.
·         பசியினை தூண்டுகின்றது.
·    இரத்ததினை சுத்தம் செய்து உடலினை ஆரோக்கியத்துடன் இருக்க செய்கின்றது.
·    வாய் தூற்நாற்றத்தினை அகற்றுகின்றது…(பல Chewing Gums புதினா சேர்த்து இருப்பதை பலரும் கவனித்து இருப்போம்…)
·         உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

புதினாவில், அதிக அளவு நார்சத்து, விட்டமின்ஸ் ஏ & சி(Vitamins A & C) காணப்படுகின்றது. அத்துடன், பிரோட்டின்(Protien), விட்டமின் பி1(Vitamin B1 - Thiamin), விட்டமின் பி3(Vitamin B3 – Niacin), விட்டமின் பி6 (Vitamin B6) மற்றும் Calcium, Iron, Phosphorous, Zinc போன்றவை இருக்கின்றது. புதினாவில் கொழுப்பு சத்து மற்றும் கொலஸ்டிரால் மிகவும் குறைவு.

விட்டமின்ஸ் B1, B3, B6 மற்றும் விட்டமின் C தண்ணீரில் கரையும் விட்டமின்ஸ்(Water Soluble Vitamins) என்பதால், இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது இதனை சாப்பிடுவது மிகவும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

உடல் எடையினை குறைக்க விரும்புவோர் புதினாவினை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

சரி, புதினாவினை பற்றி சிறிதளவு தெரிந்து கொண்டோம்..புதினாவை வைத்து நான் செய்து புதினா துவையலினையும் செய்து பார்த்து கருத்தினை தெரிவிக்கவும்.

பொதுவாக, புதினாவினை வதக்கி செய்யும் துவையல் மிகவும் ருசியாக சுவையாக இருக்கும்..ஆனால், புதினா வதக்கி செய்வதால் அதில் உள்ள சத்துகள் குறைந்துவிடுகின்றது…அதனால் புதினாவினை வதக்கி செய்வதினை தவிர்பது நல்லது….

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         சுத்தம் செய்த புதினா இலை – 1 கப்
·         கொத்தமல்லி + கருவேப்பில்லை – 1 கப்
·         தேங்காய் துறுவல் – 1/4 கப் (விரும்பினால் சேர்க்கவும்)
·         புளி, இஞ்சி – சிறிதளவு
·         உப்பு – தேவையான அளவு
வறுத்து கொள்ள வேண்டிய பொருட்கள் :
·         கடுகு – 1/2 தே.கரண்டி
·         உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி
·         கடலை பருப்பு – 2 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 4
·         பெருங்காயம் – 1/2 தே.கரண்டி
·         எண்ணெய் – 1 தே.கரண்டி

செய்முறை :
v  புதினா + கொத்தமல்லி + கருவேப்பில்லை சுத்தம் செய்து கொள்ளவும்.
v  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு + காய்ந்த மிளகாய் ,பெருங்காயம் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
v  வறுத்த பொருட்கள் + புதினா + கொத்தமல்லி ,கருவேப்பில்லை + தேங்காய் துறுவல் + புளி, இஞ்சி + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
v  சுவையான சத்தான புதினா துவையல் ரெடி.இதனை தயிர் சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

35 comments:

எல் கே said...

உங்களுக்கு "ஆரோக்கிய சமையலரசி" பட்டம் கொடுக்கலாம்

Chitra said...

மணம், குணம், காரம் நிறைந்த நல்ல துவையல். நன்றி.

பாத்திமா ஜொஹ்ரா said...

ரொம்ப அருமையா இருக்கு,சாப்பிட்டு நாளாச்சு,நன்றி அக்கா

ஜெய்லானி said...

புதினா மேட்டர் அருமை , நான் தினமும் டீயில் கலந்து குடிப்பது வழக்கம். துவையல் டபுள் ஓகே...

Shobana senthilkumar said...

Geetha...thovayal super...thx for giving lot of useful info..

Kanchana Radhakrishnan said...

சாதத்துடன் புதினாவை நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Saranya Venkateswaran said...

இதே போல் புதினா சாதம் செய்து சாப்பிடலாம். அல்லது துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

ஸாதிகா said...

புதினாதுவையலும் அழகு.பிரஷண்டேஷனும் அழகு.

Pavithra Srihari said...

naanum idhae polathaan seiven .. but neenga superaa photo eduthu irukeenga

SathyaSridhar said...

Geetha,,,pudhina thuvayal rombha nalla irukku paa nalla seithurukkeenga,,ennala weekends la regular ah comments kodukka mudiyathu dear,,athala ungaludaya shrimp varuval kku ippa thaan paarthen rombha nalla seithurukkeenga,,,white colour shrimp nethu shop la paarthen aana naan athu seitha thillai epdi taste irukkumnu teriyathala vaangalai ungaluthu paartha apram kandipa adutha murai vaanganum paa,,,

சாருஸ்ரீராஜ் said...

hai very nice thokayal , with excellent presentation.

Menaga Sathia said...

ப்ரெசண்டேஷனும்,துவையலும் சூப்பர்ர்ர் கீதா!!.அதனுடன் தேங்காய்க்கு பதில் வடகம் சேர்த்து அரைத்து பாருங்கள்.சுவை தூக்கலா இருக்கும்....

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கார்த்திக்...நன்றி சித்ரா...

GEETHA ACHAL said...

பாத்திமா, எப்படி இருக்கின்றிங்க...அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க...தங்கள் கருத்துக்கு நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...டீயில் புதினாவினை சேர்த்து குடிப்பதால், உடல் ஆரோகியத்துடன் இருக்கின்றது என பல ஆய்வுகள் நிருபிக்கின்றது...நன்றி..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஷோபனா...நன்றி கஞ்சனா...நன்றி சரண்யா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஸாதிகா அக்கா...நன்றி பவித்ரா...நன்றி சாரு அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சத்யா...கண்டிப்பாக செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்...நேரம் கிடைக்கும் பொழுது பார்வையிடுங்க...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...

Padhu Sankar said...

Nice thogayal .But what I do is after switching off the gas I saute the pudina leaves slightly in the heat aand prepare it in the same way

Ammu Madhu said...

அக்கா நானும் இதே போல் தான் செய்வேன்.எனக்கு புதினா தொகையால் சாதம்மும் அதன் பக்க உணவாக சௌ-சௌ கூட்டு அல்லது கீரை கூட்டு ரொம்ப பிடிக்கும்.cute presentation.உங்க சௌ சௌ ப்ரையும் சூப்பர்.அதே போல் உங்க பல்கர் உப்மா நேத்து செஞ்சு பாத்தேன் சூப்பரா இருந்துச்சு.கொஞ்சம் அரிசி உப்மா ருசி இருந்துச்சு.Yum.

Valarmathi Sanjeev said...

Nice thuvayal.

Gita Jaishankar said...

Nice pictures Geetha...I prepare pudina chutney like this only, this is my hubby's favorite, he will have this chutney with anything, even puris :)

M.S.R. கோபிநாத் said...

நல்ல ரெசிப்பி. துவையல் வேற துகையல் வேறையா? சில மெனுவுல துகையல்னு சொல்றாங்க..அதான் கேட்டேன்.

Priya Suresh said...

Thuvayal looks tempting...naan appadiye saapiduven...

Unknown said...

சஷிகா கொடுத்த அறிமுகத்தில் (ஓட்ஸ் பாயாசம்) இங்கு வந்தேன்.
சாலட்டில் நிறைய ஐட்டம்ஸ் பார்த்தேன். நல்லாயிருக்கு..!
புதினா துவையலும் புதினாவின் ஊட்டச்சத்துக் குறிப்பும் அருமை!!
ஓ... ​இளைக்கவும் உதவுதா இது..
Mind the mint..என்று புரியுது.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பத்மா...

GEETHA ACHAL said...

பல்கர் உப்புமா செய்து பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி அம்மு...எனக்கு இந்த துவையிலினை சாத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் பிடிக்கும்...இதனை சிறீது தண்ணீர் சேர்த்து சட்னியாகவும் கலக்கிவிடுவேன்...நன்றி அம்மு...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி வளர்மதி...நன்றி கீதா...

GEETHA ACHAL said...

//துவையல் வேற துகையல் வேறையா? சில மெனுவுல துகையல்னு சொல்றாங்க..அதான் கேட்டேன்//தங்கள் கருத்துக்கு நன்றி கோபிநாத்...துவையல் தான் கரெக்டான தமிழ் வார்த்தை..துகையல் என்பதும் துவையிலினை தான் குறிக்கின்றது...

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெகநாதன்...அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வாங்க...நன்றி..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா

கொயினி said...

நல்லா இருக்கு.நன்றி.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கொயினி...

poornima said...

thanks for saving me from mother in law

Related Posts Plugin for WordPress, Blogger...