பீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் & சிவப்பு தேங்காய் சட்னி - Perkankai /Ridge Gourd Oats Paniyaram and Red Coconut Chutney - Side Dish for Idly and Dosa - Oats Indian Recipe


பீர்க்கங்காயில் அதிக அளவு நார்சத்து (Dietary Fiber), விட்டமின் C, விட்டமின் B1(Vitamin B1), இரும்பு சத்து காணப்படுகின்றது.

பீர்க்கங்காய் உடலுக்கு அதிக குளிர்ச்சி என்பதால் இதனை இரவில் சாப்பிட தவிர்ப்பது நல்லது.

பீர்க்கங்காயில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால், உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         ஒட்ஸ் – 2 கப்
·         உப்பு , எண்ணெய் - தேவைக்கு

தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         உடைத்த உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி
·         பீர்க்கங்காய் பொடியாக நறுக்கியது – 1 கப்
·         பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கி கொள்ளவும்)

செய்முறை :
v  ஒட்ஸினை 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பின், மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

v  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு + சீரகம் தாளித்து, உளுத்தம் பருப்பினை சேர்த்து வறுத்து கொள்ளவும். அத்துடன், பீர்க்கங்காய் + பச்சைமிளகாயினை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

v  வதக்கிய பொருட்கள் + அரைத்த ஒட்ஸ் + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

v  குழிபணியார கடாயில், பணியாரங்களாக சுடவும்.

v  சுவையான சத்தான பீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் ரெடி.இதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து பரிமாற சுவையாக இருக்கும்.

சிவப்பு தேங்காய் சட்னி

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         தேங்காய் – 1/2 கப்
·         காய்ந்த மிளகாய் – 3
·         பூண்டு – 2 பல்
·         உப்பு – தேவைக்கு
கடைசியில் தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         உடைத்த உளுத்தம் பருப்பு – 1/2 தே.கரண்டி
·         கருவேப்பிலை – 4 இலை
·         பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :

v  தேங்காய் + காய்ந்த மிளகாய் + பூண்டு + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

v  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் கடைசியில் சேர்க்கவும். சுவையான சிவப்பு தேங்காய் சட்னி ரெடி.

36 comments:

Chitra said...

Totally new recipe...... with oats....wow! you are amazing!

Ann said...

Wow.. Paniyaram looks so good, Never trie with these ingredients. you always make interesting recipe.

Saranya Venkateswaran said...

Generally பீர்கங்காவுக்கு taste கொஞ்சம் கம்மி தானே. குழி பணியாரம் போல் கொஞ்சம் முறுகலாக வருமா?

பித்தனின் வாக்கு said...

முதலில் மன்னிக்கவும் ரொம்ப நாளாக உங்க பிலாக் பக்கம் வரவில்லை. என் ஸ்மையல் அறை தலைப்பில் நிறைய பிலாக் இருப்பதால் குழப்பம் இருக்கு.

பனியாரம் நல்லா இருக்குங்க. நாலு ஏடு எனக்கு பார்சல் அனுப்பி வையுங்கள். சட்னியில் புளி கொஞ்சம் சேர்க்கவில்லையா?
இதுபோல செய்து பார்க்கின்றேம்.

Asiya Omar said...

டேஸ்ட் சூப்பர்.என்னமா யோசிச்சு செய்றீங்க.குட்.

Pavithra Srihari said...

super geetha ... nalikku naan ithai panna poren .. enakku ridge gourd romba pidikkum ... ithu romba superaa irukku

Srividhya Ravikumar said...

மிகவும் அருமையான பனியாரம்..

Srividhya Ravikumar said...

மிகவும் அருமையான பனியாரம்..

மனோ சாமிநாதன் said...

கீதா!

அருமையான பலகாரம் இது! உங்களிடம் முன்பே சொன்னமாதிரி எனக்கு பீர்க்கை மிகவும் பிடிக்கும். ஓட்ஸ் சேர்த்து செய்திருக்கிறேன் பணியாரம், ஆனால் பீர்க்கங்காய் சேர்த்து செய்ததில்லை. விரைவில் செய்து பார்த்து விட்டு உங்களுக்கு சொல்கிறேன்.
சத்தான தானியங்களை வைத்து தொடர்ந்து சமையல் படிவுகள் கொடுத்து வரும் உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை! Hats off!

SathyaSridhar said...

Hey Geetha,,paniyaram nalla irukkae paa perfect ah vanthurukkae ipdi oats la paniyaram seitha kandipa bayamae illama diet persons kooda niraya saapdalaame,,,paniyaram thengai chutney nalla combination paa.

Unknown said...

வித்தியாசமான முயற்சி தான்.

சாருஸ்ரீராஜ் said...

புதுசு புதுசா எப்படிபா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க , ரொம்ப நல்லா இருக்கு டிரை பண்ணி பார்கிறேன்.

Dershana said...

puthusa irukku, geetha. kalakkureenge :-)

கொயினி said...

கீதா ஓட்ஸ்+பீர்க்கங்காய் பணியாரம் நல்ல டிஃப்பன் வகைதாங்க.எப்படி இப்படியெல்லாம் ஐடியா வருது.....ரொம்ப நல்லா இருக்கு கீதா.நன்றி.சட்னி காமினேஷனோட பார்க்க சாப்பிட ஆசையா இருக்கு.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...நன்றி பித்தன் அண்ணா...பர்சல் அனுப்பியாச்சு...விரும்பியவர்கள் புளி சேர்த்து கொள்வாங்க...நான் பூண்டு சேர்க்கும் பொழுது புளியினை சேர்க்க மாட்டேன்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சரண்யா...கண்டிப்பாக சூப்பராக முறுகலாக வரும்...வெளிபுறம் மிகவும் கிரிஸ்பியாகவும் உள்ளே மெத்தென்றும் இருக்கும்..கண்டிப்பாக சுவையாக இருக்கும்..விரும்பியவர்கள் அவரவர் சுவைக்கு ஏற்ப தேங்காயினை கூட இந்த பாணியாரத்தில் சேர்த்து கொள்ளலாம்..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ann, நன்றி ஆசியா அக்கா...நன்றி பவித்ரா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்ரீவித்யா...

GEETHA ACHAL said...

//அருமையான பலகாரம் இது! உங்களிடம் முன்பே சொன்னமாதிரி எனக்கு பீர்க்கை மிகவும் பிடிக்கும். ஓட்ஸ் சேர்த்து செய்திருக்கிறேன் பணியாரம், ஆனால் பீர்க்கங்காய் சேர்த்து செய்ததில்லை. விரைவில் செய்து பார்த்து விட்டு உங்களுக்கு சொல்கிறேன்.
சத்தான தானியங்களை வைத்து தொடர்ந்து சமையல் படிவுகள் கொடுத்து வரும் உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை! Hats off!//தங்களுடைய கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மனோ ஆன்டி..கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் சூப்பராக இருக்கும்...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சத்யா...நன்றி சாரு அக்கா...நன்றி ஜமால் அண்ணா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி தர்ஷினி...நன்றி கொயினி....

Gita Jaishankar said...

Geetha this is such a healthy one, looks so good and crispy too :)

Menaga Sathia said...

பீர்க்கங்காய் பணியாரம் சூப்பரா இருக்கு.அப்படியே அந்த தட்டோட சாப்பிடனும்போல் இருக்கு...

Raks said...

Red chutney sounds yumm! Love the idea of paniyaram too!

Cool Lassi(e) said...

Oats paniyaram romba nalla irukku geetha. Try pannanum! Very healthy and filling indeed!

தெய்வசுகந்தி said...

வாவ் பீர்க்கங்காயில பணியாரம். புதுசா இருக்குது கீதா!!!!!!!!!

Priya Suresh said...

Red chutney and paniyaram rendume paathathume yennaku saapidanam pola irruku...Brilliant idea of making out paniyaram with ridgegourd..looks fabulous..

Porkodi (பொற்கொடி) said...

shows your creativity in giving new recipes :)

Anonymous said...

different one geetha.

Valarmathi Sanjeev said...

Wow.... Healthy version of paniyaram, looks great and yummy.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...நன்றி கீதா..நன்றி ராஜி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சுகந்தி...நன்றி கூல்...நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி பொற்கொடி...நன்றி ஸ்ரீவிஜி...நன்றி வளர்மதி...

சசிகுமார் said...

சூப்பருங்க கலக்குறீங்க. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

பீர்கங்ககாய் ஓட்ஸ் பணியாரம் சூப்பர்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசிகுமார்...நன்றி ஜலிலா அக்கா...

Related Posts Plugin for WordPress, Blogger...