டோஃபு பொடிமாஸ் - Tofu Podimas

டோஃபுவில் அதிக அளவு Magnesium, இரும்பு சத்து, புரோட்டின், கல்சியம் சத்துகள் இருக்கின்றது. இதனை பன்னீருக்கு பதிலாக உபயோகிக்கலாம்.
சோயாவின் பாலில் இருந்து எடுக்கபடுவது தான் டோஃபு. டோஃபுவினை soft tofu, silken tofu, firm tofu, Extra firm tofu என பலவகைகளில் கிடைக்கின்றது.
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         டோஃபு – 1 பக்கட்
·         வெங்காயம் – 2 பெரியது
·         பூண்டு – 1
·         கருவேப்பில்லை – 5 இலை
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         சீரக தூள் – 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்புதேவைக்கு

செய்முறை :


v  டோஃபுவுடன் + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
v  பூண்டு + வெங்காயம் + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி வைக்கவும்.


v  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும், கடுகு தாளித்து பூண்டினை சேர்க்கவும்.
v  பூண்டு வதங்கியதும், வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.


v  பின்னர், டோஃபுவினை இத்துடன் சேர்த்து நன்றாக 10 – 15 நிமிடங்கள் வதக்கவும்.
v  கடைசியில் சீரக தூள் சேர்த்து மேலும் 1 – 2 நிமிடங்கள் வதக்கிவும். இதனை சுடாக பரிமாறவும். சுவையான சத்தான டோஃபு பொடிமாஸ் ரெடி.

34 comments:

Unknown said...

டோஃபு என்றால் ...

Unknown said...

கொத்து புரோட்டோ மாதிரி செமையா இருக்கும் போல ...

எல் கே said...

arumai :)

Srividhya Ravikumar said...

மிகவும் சத்தான பொடிமாஸ்.. நன்றி..

Menaga Sathia said...

டோஃபு பொடிமாஸ் மிக அருமையாக இருக்கு!!

Aruna Manikandan said...

Sounds healthy and very interesting..
Thx. for sharing

Chitra said...

Tofu வைத்து இவ்வளவு அருமையாக சமைக்க முடியுமா?
I never thought beyond Tofu and soya sauce (from the restaurant menu items)
You are amazing!

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு கீதா..

எல் கே said...

//நட்புடன் ஜமால் said...

டோஃபு என்றால் .//
enakkum athe doubt .. engaluku engipees teriyathu tamila sollunga

GEETHA ACHAL said...

டோஃபு என்பது சோயா பயிறின் பாலில் இருந்து எடுப்பது...பார்ப்தற்கு பன்னீர் போலவே இருக்கும்..பன்னீர் உபயோகித்து செய்யும் அனைத்து உணவுகளை டோஃபுவினை வைத்து செய்யலாம்..உடலிற்கும் மிகவும் நல்லது...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால் அண்ணா...நன்றி கார்த்திக்...நன்றி ஸ்ரீவித்யா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்....நன்றி அருணா...நன்றி சாரு அக்கா...

SathyaSridhar said...

Geetha,, tofu podimas nalla vanthurukkae neenga nalla samaichurukeenga paa,,nalla uthiri uthiri ya irukku,,,migavum arumaiyana podimas migavum sathaana oru unavu..

vanathy said...

Geetha, I make this same recipe with out adding chili powder. Very healthy recipe.

Raks said...

Nice recipe looks good! Healthy way to include tofu!

Asiya Omar said...

கீதா பொடிமாஸ் அருமையாக இருக்கு.நான் இதுவரை செய்ததில்லை.

Cool Lassi(e) said...

Podimas looks great!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றீ சத்யா...நன்றி வானதி...நன்றி ஆசியா அக்கா....நன்றி ராஜி...நன்றி கூல்

Gita Jaishankar said...

Tofu scramble looks very delicious Geetha...I too make a similar preparation for breakfast for sometimes :)

ஜெய்லானி said...

புளிக்குமா ?

Priya dharshini said...

Mega arumai..tofu vil podimas health kum nallathu..

Priya Suresh said...

Wat a healthy bhurji, super delicious..

Ann said...

Tofu podimas pakkavea rombha nalla irukku, bet it tasted great too.

Kanchana Radhakrishnan said...

டோஃபு பொடிமாஸ் அருமையாக இருக்கு.

Kanchana Radhakrishnan said...

looks tempting

Veggie Belly said...

great idea! i use frozen, thawed tofu for a meatier texture.

malar said...

கடையில் டோஃபு என்றே கேட்க்க வேண்டுமா?பன்னீர் மாதிரி இருக்கும் என்று சொல்றேங்க அப்போ இது ஃப்ரோஜன் ஐட்டமா?

கேள்வி பட்டது இல்லை...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா...நன்றி ப்ரியா...நன்றி Ann....நன்றி கஞ்சனா...நன்றி வெஜ்ஜி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய்லானி...இது புளிப்பாக எல்லாம் இருக்காது...பன்னீர் மாதிரி இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மலர்...ஆமாம்பா, tofu என்று கேட்டு பாருங்கள்..கண்டிப்பாக கிடைக்கும்...இது frozen item எல்லாம் கிடையாது...இது freshஆக கிடைக்கும்..அப்படி தான் நான் பார்த்து இருக்கின்றேன்...(இதனை நான் frozen sectionயில் தேடியது கிடையாது...)

M.S.R. கோபிநாத் said...

அருமையான ரெசிப்பி.நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி கோபிநாத்...

Unknown said...

is this tofu available in oman. any one can tell me.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி mukthabar...

Related Posts Plugin for WordPress, Blogger...