பேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை - Baked Cabbage Green Dal Vadaiசமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         முட்டைகோஸ் – 1/4 கிலோ
·         பச்சைபயிறு – 1 கப் ( 3 மணி நேரம் ஊறவைக்கவும்)
·         எண்ணெய் – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         சீரகதூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         பச்சைபயிறினை சுமார் 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். முட்டைகோஸினை பொடியாக நறுக்கி வைக்கவும். அவனை 400Fயில் மூற்சூடு செய்யவும்.
·         ஊறவைத்த பச்சைபயிறினை மிக்ஸியில் போட்டு ஒன்றும்பாதியுமாக அரைத்து கொள்ளவும்.
·         கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள முட்டைகோஸ் + அரைத்த பச்சைபயிறு + தூள் வகைகள் சேர்த்து 5 – 6 நிமிடங்கள் வதக்கி சிறிது நேரம் ஆறவைக்கவும்.
·         இதனை சிறிய சிறிய வடைகளாக தட்டி, அவன் ட்ரேயில் அடுக்கி , அதன்மீது சிறிது எண்ணெயினை Spray செய்யவும். மூற்சூடு செய்யபட்ட அவனில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
·         ஒருபக்கம் நன்றாக வெந்தபின் ட்ரேயினை வெளியில் எடுத்து வடைகளை திருப்பிவிடவும்.
·         திரும்பவும் ட்ரேயினை அவனில் மேலும் 5 நிமிடங்கள் வைக்கவும்.சுவையான சத்தான வடை ரெடி.

கவனிக்க:
முட்டைகோஸினை சிறிது வதக்கினால் தான் வடை நன்றாக வரும்.
முட்டைகோஸினை வதக்குவதால் வடையாக தட்ட எளிதில் வரும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

28 comments:

Chitra said...

very nice idea. Thank you for the recipe. :-)

ஜெய்லானி said...

கேப்பேஜ்ல கூட வடை , புதுமை + இனிமை

மனோ சாமிநாதன் said...

மறுபடியும் ஒரு சத்தான புதுமையான வடை!
மறுபடியும் உங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டு, கீதா!

ஸாதிகா said...

அடடா..வடையை பேக் பண்ணி..டிரை பண்ணிப்பார்க்கிறேன்.புது முயற்சிதான்.

சசிகுமார் said...

பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது தோழி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Raks said...

SOunds really good! I should try this soon! Baked version makes it a guilt free snack!

SathyaSridhar said...

Geetha,,rombha nalla health aana vadai paa naan ithu varaikkum pachai payar poetu vadai seiyanum nu yosichathe illai rombha nallathu kadalai parupuu vida.. nalla recipe paa.

Shama Nagarajan said...

nice vadai..yummy

Unknown said...

முட்டை கோஸுக்கு பதிலா சிக்கன், பிஷ் முட்டை என வெரைட்டி கொடுக்கலாம் போல ...

:)

Menaga Sathia said...

முட்டைகோஸில் பச்சைபயிறு சேர்த்து செய்த வடை அருமையாக இருக்கு,படங்கள் சூப்பர்ர்!!

vanathy said...

Geetha, Looking yummy and healthy. Baked snacks really sounds good. I will try this very soon.

தெய்வசுகந்தி said...

super healthy vadai!!!!!!!!

Cool Lassi(e) said...

What a healthy beautiful vadai. Never heard of a baked version. Got to try this!Bookmarked!

Unknown said...

Very innovative recipe...Love the version of baked vadai.

Gita Jaishankar said...

Vadai looks so crispy...so healthy and delicious :)

Ann said...

Wow.. very healthy and tasty! love this recipe.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...நன்றி ஜெய்லானி...நன்றி மனோ ஆன்டி....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி ராஜி....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி...நன்றி ஷாமா....நன்றி நட்புடன் ஜமால்...கண்டிப்பாக இதில் சிக்கன், பிஷ்,முட்டை என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல செய்து சாப்பிடலாம்...அருமையாக இருக்கும்...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி சுகந்தி...நன்றி கூல்..கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...நன்றி கீதா...

பிஞ்சுக் கவிஞர்:) அதிரா:) said...

சூப்ப்பர் ரெசிப்பி கீதாச்சல். உண்மையிலயே எனக்கு பிடித்திருக்கு, செய்துபார்க்கிறேன். பிள்ளைகள் விரும்புவார்கள் என்றே நினைக்கிறேன்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ann...நன்றி அதிரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும்...

Mahi said...

புதுசா இருக்கு..சீக்கிரம் ட்ரை பண்ணிப் பாத்திடறேன்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி..கண்டிப்பாக செய்து பாருங்கள்...

Asiya Omar said...

அருமையாக இருக்கு,கீதா,இது எப்படி என் கண்ணில் மாட்டாமல் போச்சு.செய்து பார்க்கவேண்டும்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி...

ambiga said...

pasipayarla super healthy vadai.very taste

Related Posts Plugin for WordPress, Blogger...