பார்லி மாவு தோசை & தக்காளி புதினா சட்னி - Barley Flour Dosai & Tomato Pudina Chutney

பார்லி மாவு தோசை மிகவும் சுவையாக இருக்கும். எப்பொழுதும் கோதுமை மாவு தோசை என்று சாப்பிடாமல் இப்படி பார்லியினை மாவாக அரைத்து வைத்து கொண்டால், விரும்பிய பொழுது அத்துடன் தேவையான அளவு தண்ணீர் + உப்பு சேர்த்து சுவையான சத்தான தோசை சுட்டு சாப்பிடாலாம்….உடலிற்கும் நல்லது…டயட்டில் இருப்பவர்கள் இந்த பார்லி தோசையினை சாப்பிடுவது நல்ல பயனை தரும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·         பார்லி மாவு – 1 கப்
·         உப்பு – சிறிதளவு
செய்முறை :
v  பார்லி மாவு + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
v  தோசைகல்லினை காயவைத்து, தோசைகளாக சுடவும். சுவையான சத்தான பார்லி மாவு தோசை ரெடி.
குறிப்பு : பார்லி மாவினை கரைத்து 5 – 10 நிமிடங்கள் கழித்து தோசை ஊற்றினால், தோசை மிகவும் மெல்லியதாக, அரிசி மாவு தோசை போல வரும். ( கோதுமை மாவு தோசை மாதிரி மிகவும் கஷ்டப்பட்டு தோசை சுட தேவையில்லை.)
தக்காளி புதினா சட்னி
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
தக்காளி - 3
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு – 4 பல் தோல் நீக்கியது
இஞ்சி - சிறு துண்டு
புதினா, கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 மேஜை கரண்டி

கடைசியில் தாளித்து சேர்க்க :
கடுகு- தாளிக்க
உடைத்த உளுத்தம் பருப்பு1 தே.கரண்டி
எண்ணெய் – 1 தே.கரண்டி
கறிவேப்பில்லை – 4 இலை (பொடியாக நறுக்கி வைக்கவும்)
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:
v  புதினா, கொத்தமல்லி தண்ணீரில் மண் இல்லாமல் சுத்தம் செய்து வைக்கவும். தக்காளி + இஞ்சியினை நறுக்கி வைக்கவும்.
v  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும், காய்ந்த மிளகாய் + தக்காளி + இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
v  கடைசியில் புதினா+ கொத்தமல்லியும் சேர்த்தும் நன்றாக வதக்கவும்.
v  வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆறவிட்டு, இத்துடன் உப்பு + தேங்காய் துறுவல் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.
v  கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையாக எளிதில் செய்ய கூடிய சட்னி ரெடி.

30 comments:

எல் கே said...

நல்லா இருக்குங்க. அம்மா ஒரு முறை செஞ்சு இருக்காங்க

Shama Nagarajan said...

healthy dosa

Gita Jaishankar said...

Good one Geetha...very healthy dosas...looks so crispy and tasty with the pudina chutney...lovely presentation :)

Pavithra Elangovan said...

Yummy dosai with yummy chutney.. nice idea of using barley flour for dosai..looks yummy geetha.. really seeing this feel like having it as I did not do my BF yet.

Menaga Sathia said...

பார்லி மாவு தோசை நல்ல க்ரிஸ்பியாக இருக்கு...என்னுடைய குறிப்பினை செய்து பார்த்ததற்க்கு மிக்க நன்றி கீதா!!

Chitra said...

சட்னி பார்த்ததுமே, நாவில் நீர் ஊருது.... சூப்பர்!

ஸாதிகா said...

தோசையும்,சட்னியும் பார்க்கவே ரொம்ப நல்ல இருக்கு கீதா ஆச்சல்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்துறீங்க அக்கா .........

Ammu Madhu said...

தோசை சூப்பர்.சட்னி அதைவிட சூப்பர்.நானும் இதே மாறி தான் சட்டினி செய்வேன்.yum.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கார்த்திக்...நன்றி ஷாமா....நன்றி கீதா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா...பார்லி மாவில் செய்து பாருங்கள்...இங்கு உள்ள எல்லா இந்தியன் கடைகளிலும் பார்லி மாவு கிடைக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...இந்த பார்லி தோசையுடன் உங்களுடைய சட்னியினை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது....சூப்பர்ப் சட்னியும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...நன்றி ஸாதிகா அக்கா...நன்றி ஸ்ரீ...

vanathy said...

Looking yuumy and very healthy. Where did you buy barley flour?

puduvaisiva said...

பார்லி மாவு கடைகளில் கிடைக்குமா ? அல்லது வீட்டில் அறைத்து கொள்ள வேண்டுமா?

நன்றி !

Jaleela Kamal said...

சத்தான டயட் தோசை அருமை

Aruna Manikandan said...

Healthy delicious dosa...
Thx. for sharing :-)

Vijiskitchencreations said...

கீதா சூப்பர் தோசை ஆமாம் எனக்கு ஒரு டவுட் பார்லி மாவாக கடைகளில் கிடைக்கிறதா எந்த கடையில் வாங்கறிங்க. என் அம்மாவிடம் கூட சொல்வேன் உங்க ரெசிப்பிகளில் பார்லி ஒட்ஸ் போன்றவையில் செய்து அசத்துவாங்க. டேஸ்ட் மைதாவு அல்லது ராகிமாவு போல் இருக்குமா இல்லை அரிசிமாவு டேஸ்ட் போல் இருக்குமா? நிறய்ய சந்தேகங்களோட ஒரு பெரிய பதிவு.

SathyaSridhar said...

Geetha,,super aana dosai gamagama pudina thakkali chutney kalakareenga...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...பார்லி மாவில், எல்லா இந்தியன் கடைகளிலும் கிடைக்கும்...Barley Flour என்று எழுதி இருக்கும்...தேடிபாருங்கள்...கண்டிப்பாககிடைக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சிவா...நாங்கள் USயில் இருப்பதால் இந்தியன் கடைகளில் இது கிடைக்கின்றது...இந்தியாவில் என்னுடைய அம்மா, இதனை மெஷினில் கொடுத்து அரைத்து கொள்கின்றாங்க...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலா அக்கா...நன்றி அருணா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சத்யா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி விஜி...ஆமாம் விஜி..இங்கு எல்லா Indian groceryயிலும் இந்த மாவு கிடைக்கும்..டேஸ்ட் மிகவும் நன்றாக இருக்கும்..மைதா அல்லது ராகிமாதிரி இருக்காது...கொஞ்சம் அரிசி + கோதுமை டேஸ்ட கலந்தமாதிரி தான் இருக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...தங்களுடைய அம்மாவினையும் மிகவும் விசாரித்தாக சொல்லவும்...நன்றி

Priya Suresh said...

Woww wat a healthy dosai, chutney pakkura pothey appadiye saapidanam pola irruku..

koini said...

barley dosa nalla idea....idhellaam enga naabagam varudhu....ore maadhiri araiththa maavaiye araiththu araiththu palaki pochchu....idhaiyellaam naabagapaduthi seythu kaatti kurippu koduppadharku nijamaagave Ungalukku romba Thanks.Menaga vin kurippugalaiyum,unga kurippugalaiyum paarththudhaan Oatsai dosa,adai ena seyyave aarambiththen.ippo barleyaiyum serththukollavendiyadhudhaan.Thanks Geethaa.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி koini...கண்டிப்பாக இதனையும் செய்து பாருங்கள்...மிகவும் அருமையாக இருக்கும்...உடலிற்கு மிகவும் நல்லது...

Anisha Yunus said...

Geethakka,

I tried the chutney today. Was very nice. But I had substitue=ted green chillies...the taste was ok...not great...net time shud try with red chillies itself. Thanks once againkka :)

GEETHA ACHAL said...

நன்றி அன்னு...எப்படி இருக்கின்றிங்க...ஆமாமா, காய்ந்த மிளகாய் சேர்க்கும் பொழுது ஒரு சுவை இருக்கும்..அதே பச்சைமிளகய் சேர்க்கும் பொழுது வேறு சுவையுடன் இருக்கும்...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...நன்றி..

Related Posts Plugin for WordPress, Blogger...