பார்லி இட்லிமாவு போண்டா - Barley Idly Batter Bonda / Indian Barley Recipe / Idly Varieties
மிகவும் எளிதில் செய்ய கூடிய போண்டா இது….வீட்டில் கண்டிப்பாக எப்பொழுதும் இட்லி மாவிற்கு பஞ்சம் இல்லை என்று பெரும்பாலும் அனைத்து வீட்டிலும் உண்மை…

இட்லி/தோசைக்கு அரைத்த கடைசி மாவில்(மாவு அரைத்து 2 – 3 நாட்கள் மாவினை உபயோகித்த பிறகும் பாத்திரத்தில் அடியில் இருக்கும் கொஞ்சம் மாவு இருக்குமே…) …அந்த மாவில் இட்லியோ அல்லது தோசையியோ செய்தால் அவ்வளவாக யாரும் விரும்பி சாப்பிடமாங்க…

அதற்காக அந்த மாவில், வெங்காயம்+ பச்சைமிளகாய் + கொத்தமல்லி + கருவேப்பில்லை போட்டு ஊத்தாப்பம் ஸ்டைலில் தோசையினை ஊற்றுவோம்…

அதே மாதிரி தான்…இந்த போண்டாவிற்கும்…இட்லிமாவுடன் சிறிது மைதாவும் கலந்து , எண்ணெயில் பொரித்து காரமகவோ அல்லது இனிப்பாகவோ செய்து குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பி சாப்பிடுவார்கள்…

தீடீர் விருந்தாளிக்கும் இதனை செய்து கொடுத்து அசத்தலாம்… நான் இதனை பார்லி இட்லிமாவில் செய்து இருக்கின்றேன்…பார்லி இட்லி செய்முறையினை இங்கே க்ளிக் செய்து பாருங்கள்…(இதனை எந்தவித இட்லிமாவில் செய்யலாம்...நான் பார்லி செய்து இருக்கின்றேன்...)...

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பார்லி இட்லி மாவு – 2 கப்
·         மைதா மாவு – 1/2 கப்
·         சோடாமாவு – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
·         எண்ணெய் - பொரிப்பதற்கு

பொடியாக நறுக்கி கொள்ள :
·         வெங்காயம் – 1
·         பச்சைமிளகாய் – 2
·         கொத்தமல்லி, புதினா,கருவேப்பில்லை – சிறிதளவு
·         தேங்காய் – சிறிய துண்டு ( விரும்பினால் )


செய்முறை :
v  மைதாமாவு + சோடாமாவு + உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். நறுக்க வேண்டிய பொருட்களை பொடியாக வெட்டி வைக்கவும்.
v  மைதாவுடன், நறுக்கிய பொருட்கள் + இட்லி மாவு சேர்த்து நன்றாக , வடைமாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

v  கடாயில் எண்ணெயினை காயவைத்து, சிறிய சிறிய போண்டாகளாக சுடவும்.
v  சுவையான போண்டா எளிதில் தயார்….இதனை சட்னி, சாஸ் போன்றவைகளுடனும் பரிமாற சுவையாக இருக்கும்.

குறிப்பு :
·         போண்டாமாவில் உப்பினை பார்த்து சேர்க்கவும்…(ஏற்கனவே இட்லிமாவில் உப்பு சேர்த்து இருப்போம்….)
·         இட்லிமாவில் தண்ணீர் இருக்கும் என்பதால், தண்ணீர் சேர்க்க அதிகமாக தேவையில்லை…

36 comments:

Cool Lassi(e) said...

Ore kalakkal thaan ponga! Barley Idli bondo sounds delish! Nice way to make use of leftover maavu!

vanathy said...

mmm.. very delicious.

Aruna Manikandan said...

hmmmmm..
Healthy crispy bonda's :-)

Chitra said...

very good idea. I usually add rava to the left over batter and make rava dosais. But this seems to be a delicious snack. I am going to try it soon. Thank you for the recipe.

Raks said...

Looks so appetizing! I am hungry now :)

எல் கே said...

அருமை :)

Gita Jaishankar said...

Very healthy bondas Geetha...looks so good and crispy :)

Menaga Sathia said...

சூப்பர் போண்டா!! நல்ல க்ரிஸ்பியாக இருக்கு...

Porkodi (பொற்கொடி) said...

screenkulla kaiy vittu edukanum pola aasaiya irukku! :)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி வானதி...நன்றி கூல்...நன்றி அருணா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...நன்றி ராஜி...நன்றி கார்திக்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கீதா...நன்றி மேனகா...நன்றி பொற்கொடி...

ஜெய்லானி said...

சின்ன சின்னதா அழகா பாக்கும் போதே கேக்குதே!!!!

Asiya Omar said...

கீதா நானும் இந்த இட்லி மாவு மீதி வந்தால் அடிக்கடி குழிப்பணியாரம் தான் செய்வேன்.இனி இப்படி போண்டா செய்யலாம்.அருமை.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி...உங்கள் ஐடியா தான் எல்லாம்...நன்றி ஜெய்லானி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா....கண்டிப்பாக செய்து பாருங்கள்....நன்றி...

Priya Suresh said...

Crispy bonda super aa irruku Geetha...fantastic snacks..

சசிகுமார் said...

வழக்கம் போல நல்ல பதிவு அக்கா.உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

கீதா நானும் இட்லி மாவு மீதி வந்தால் குழிப்பணியாரம் தான் செய்வேன்.இனி இப்படி போண்டா செய்யலாம்.super.

SathyaSridhar said...

Bonda super ah irukku Geetha,, nalla easy aana sathaana bonda ..enakku oru sandhegam paa,,naan idli maavu serthu ithe poela bonda seithen aana ennai konjam izhukkuthu athe thavirkka enna seiyanum..

SathyaSridhar said...

Bonda super ah irukku Geetha,, nalla easy aana sathaana bonda ..enakku oru sandhegam paa,,naan idli maavu serthu ithe poela bonda seithen aana ennai konjam izhukkuthu athe thavirkka enna seiyanum..

Unknown said...

சட்னியோடு சூடா சாப்பிட்டா யம்மி தான்

koini said...

Barley vaiththee kalakkureenga....bonda superbaa irukku ...seythu saappidanum.Thanks.

ஸாதிகா said...

இதுபோல் நானும் அடிக்கடி செய்வேன்.ஆனால் சாதாரண இட்லி மாவில்

தெய்வசுகந்தி said...

Good!!!!!!!

Malar Gandhi said...

Very healthy bonda,addition of barley sounds terrific.

athira said...

கீதா ஆச்சல் மிக நல்ல குறிப்பு. மிகுதி மாவை வேஸ்ட் ஆக்கிடாமல் நல்ல முறையில் பயன்படுத்தலாம். வடைபோலவே இருக்கும்போல இருக்கு.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...நன்றி சசிகுமார்....நன்றி கஞ்சனா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சத்யா...மாவு தண்ணீயாக இருந்தால் எண்ணெய் அதிகமாக இழுக்கும்...அதனால மாவு கொஞ்சம் கொட்டியாக வடைமாவு பதத்திற்கு இருந்தால் எண்ணெய் இழுக்காது...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால் அண்ணா...நன்றி koini....நன்றி ஸாதிகா அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சுகந்தி...நன்றி மலர்....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும்..நன்றி

Sukanya Yogesh said...

Superb bondas....great recipe

Jaleela Kamal said...

பார்லி இட்லி மாவில் போண்டாவா?

சூப்பர், எல்லாத்துக்கும் ஓட்டு போட்டாச்சு, இப்போதைக்கு தங்கை தான் பார்லி சமையல் சொல்லிடவேண்டியது தான்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சுகன்யா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலா அக்கா...தங்கள் ஒட்டுக்கு மிகவும் நன்றி,,,கண்டிப்பாக செய்து பார்க்கசொல்லுங்க...நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...