பழுத்த வாழைக்காயில் என்ன செய்யலாம்???????
வாழைக்காயினை வாங்கி வந்ததில் இருந்து அதனை கவனிக்காமல் விட்டுவிட அது பழுத்துவிட்டது….சரி இதனை வைத்து பொரியலோ அல்லது வறுவலோ எது செய்தாலும் தித்திப்பாக இருக்கும் என்பதால் எதுவும் செய்யாமல் வைத்து இருக்கின்றேன்….


இதனை வைத்து எதாவது செய்ய முடியுமா?....எண்ணெயில் பொரிப்பதை தவிர்த்து எதாவது சொல்லுங்களேன்இன்னும் இரண்டு வாழைக்காய் இருக்கின்றதுஒன்றினை வைத்து பாயசம் செய்துவிட்டேன்இன்னொன்று இருக்கின்றது….

இந்த பழுத்த வாழைக்காயினை வைத்து நான் செய்த வாழைக்காய் பாயசம்……

சமைக்க தேவைப்படும் நேரம்: 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பழுத்த வாழைக்காய் – 1
·         பால் – 3 கப்
·         சக்கரைதேவையான அளவு
·         வறுத்த முந்திரி, திரட்சைசிறிதளவு
·         நெய் – 1 தே.கரண்டி
·         ஏலக்காய் – 1

செய்முறை :
·         வாழைக்காயினை துண்டுகளாக வெட்டி தண்ணீரில் தோலுடன் 7 – 8 நிமிடங்கள் வேகவைக்கவும். 3 கப் பாலினை 2 கப் பாலாக மாறும் வரை கொதிக்கவிடவும்.
·         வாழைக்காயில் இருக்கும் தோலினை நீக்கிவிட்டு அதனை துறுவி கொள்ளவும்.
·         துறுவிய வாழைக்காயினை பாலில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
·         கடைசியில் சக்கரை, நெய், ஏலக்காய்,முந்திரி, திரட்சை எல்லாம் சேர்த்து கலக்கவும்.
·         சுவையான சத்தான வாழைக்காய் பாயசம் ரெடி.

44 comments:

Chitra said...

ஆஹா, இந்த பாயாச ஐடியா நல்லா இருக்கே....... :-)

அடுத்த வாழக்காய் - இனிப்பு பஜ்ஜிக்கு ரெடியா?

ஜெய்லானி said...

காய் பழுத்தா பழம் தாங்க, அப்படியே சாப்பிட வேண்டியதுதான். பாயாசம் செய்வது புதிய முறை. சூப்பர்...

Unknown said...

gud idea! vazhakai payasam yummy! will try...

Cool Lassi(e) said...

Payasam sounds like a fabulous way to use up ripe vazhakkai!

ஸாதிகா said...

வாவ்..வாழைக்காயில் பாயாஸம்..டிரை பண்ணிடுவோம்

Pavithra Srihari said...

supernga ... eppadi eppadi ngren ..

But i doubt if anybody could find if it was banana payasam . I like the idea of grating instead of mashing. Super superrrr suuupppeerrr

SpicyTasty said...

Wow!! that's a good idea. Thanks for sharing.

Raks said...

Superb recipe! thanks for the idea Geetha!

SathyaSridhar said...

Vazhaikkai payasam hmm rombha pudhumaiyana idea nga,,,innoru vazhaikai enna seiya saaptudunga avloe thaan matter finish.

Life is beautiful !!! said...

Geetha, nice way of using them. Another way is to just gulp them :)

Shama Nagarajan said...

very creative dear

Menaga Sathia said...

அருமையாக இருக்கு!! துருவிய வாழைக்காயினை நெய்யில் வதக்கி போட்டிருந்தால் இன்னும் சுவையாக் இருந்திருக்கும்...

Malar Gandhi said...

Nice payasam, will keep this in mind.:)

I make Ramzaan Sweet with ripe vazhaikai. That is called unnakaye in Malayalam. Hope this tip will help you.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...அடுத்த வாழைக்காய் இன்னும் காத்து கொண்டுதான் இருக்கின்றது...எதாவது செய்ய வேண்டியது தான்...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...//காய் பழுத்தா பழம் தாங்க, அப்படியே சாப்பிட வேண்டியதுதான்//அப்படியே சாப்பிட பிடிக்கவில்லை...அதனால் தான் இப்படி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...நன்றி கூல்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...இத்துடன் சிறிது சேமியாவும் சேர்த்து செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்பைசி...நன்றி ராஜி....நன்றி மஞ்சு...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சத்யா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா..அடுத்த முறை செய்யும் பொழுது அப்படி செய்து பார்க்கிறேன்...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மலர்...//I make Ramzaan Sweet with ripe vazhaikai. That is called unnakaye in Malayalam. Hope this tip will help you.//கண்டிப்பாக செய்து பாருங்கள்.........

Gita Jaishankar said...

Hi Geetha may be you can cut the banana into thick slices and try frying them in some jaggery or brown sugar, kind of like Mexican fry...payasam sounds interesting :)

Mahi said...

நானும் பழத்தை அப்படியே சாப்பிட்டுதான் பழக்கம்! பாயசம் புதுசா இருக்கு. :)

vanathy said...

looking yummy!

kousalya raj said...

வாழைக்காயை இப்படி துருவி செய்வது ரொம்பவே வித்தியாசம்தான். புது புதுசா கண்டுபிடிக்கிறீங்க கலக்குங்க!

Asiya Omar said...

பனானா பாயாசம் அருமையாக இருக்கும்,பாலும் பழமும் டேஸ்ட் ரிச்சாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Asiya Omar said...

பழுத்த வாழைக்காயை கார்ன் ஃப்லோர் பேஸ்டில் டிப் செய்து சிறிது எண்ணெய்,நெய் கலவையில் பொரித்து ஹனி விட்டு சாப்பிடலாம்.

சசிகுமார் said...

வழக்கம் போல நல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Niloufer Riyaz said...

pazhutha vazhaikayil payasam, mikavum arumaiyana recipe.

sridevi said...

Nice idea of payasam with semi ripened Banana...

Unnga blog roomba nalla irruku..Spring pictures super..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா....நன்றி மகி....நன்றி வானதி....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கெளசல்யா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி...நன்றி நிலோப்பர்....நன்றி ஸ்ரீதேவி...

Padmajha said...

This is an innovative payasam!!!

Priya Suresh said...

Wat a fabulous payasam Geetha..wat a innovative sweet..Kalakitinga ponga..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி PJ...நன்றி ப்ரியா....

கவி அழகன் said...

அருமை...அருமை...வாழ்த்துகள்!

Priya dharshini said...

slighty raw banana payasam miga arumai...unmayana banana payasam thigattum....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி யாதவன்...

goma said...

நானும் வாழைக்காயை வாங்கிய பின் “இன்னைக்கு செய்யலாம் நாளைக்கு செய்யலாம்ன்னு “பழுக்க வைப்பேன்....
இனிமேல் கவலை இல்லை

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...ஆமாம் நீங்கள் சொல்வது போல வாழைப்பழத்தினை சேர்த்தால் அதிகம் திகட்டும்..சுவையும் வித்தியாசம் இருக்கும்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கோமா...கண்டிப்பாக இப்படி செய்து பாருங்கள்...அப்புறம் என்ன...சில சமயம் இதற்காகவே வாழைக்காயினை பழுக்க வைத்துவிடுவோம்...

Related Posts Plugin for WordPress, Blogger...