கோதுமை ரவா இட்லி - Cracked Wheat Rava Idly - Indian Wheat Rava Recipe / Idly Varieties

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கோதுமை ரவை – 3 கப்
·         உளுத்தம் பருப்பு – 1/2 கப்
·         வெந்தயம் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
செய்முறை :
·         உளுத்தம்பருப்பு + வெந்தயம் சேர்த்து 1 - 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
·         ஊறவைத்த பருப்பினை மைய அரைத்து கொள்ளவும்.
·         அரைத்த மாவு + கோதுமை ரவை + உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
·         இந்த மாவினை குறைந்த்து 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு இட்லியினை சுடவும். சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி ரெடி.
கவனிக்க:
ரவையினை தனியாக தண்ணீரில் ஊறவைக்க கூடாது.
அரைத்த மாவுடன் தான் ரவையினை சேர்த்து ஊறவைக்கவும். அப்பொழுது தான் இட்லி வரும்.
மிக்ஸியில் அரைப்பதானால் 1/2 கப் உளுந்து சேர்த்து கொள்ளவும். இதுவே grinderயில் அரைத்தால் 1/2 கப்பிற்கும் குறைவாக உளுத்தம்பருப்பினை சேர்த்து கொள்ளவும்.

37 comments:

Mahi said...

சூப்பரா இருக்கு இட்லி! கோதுமை ரவை-னா.. இண்டியன் ஸ்டோர்ல இருக்கும் crackeld wheat -ஆ கீதா?

Unknown said...

Idly Luks very soft and delicious!Perfect recipe...

Chitra said...

looks very good. Is it ok to use cream of wheat?

Raks said...

Very nice method to make wheat rawa idly,should try sometime!

Life is beautiful !!! said...

Hai Geetha, unga blog enaku romba pidichiruku. Niraya healthy recipes iruku. Ellathukum mela unga profile pic arumai. Shall we be friends? :)

Pavithra Elangovan said...

Nice one geetha.. never tried this I am bookmarking this to try soon.. looks soft too.

Niloufer Riyaz said...

pudumayana recipe. Nice work

Priya dharshini said...

vadai mega nandraga seithu ullergal...enga idly yum healthy and good texture...

ஜெய்லானி said...

பாக்கும் போதே கேக்குது.

Priya Suresh said...

Wat a healthy idli, prefect for breakfast..yumm!

Menaga Sathia said...

சூப்பர்ர் இட்லி,அருமையாக இருக்கு.நீங்கள் சொல்லியபடி செய்தேன் நன்றாக வந்தது.இந்த இட்லிக்கு சின்ன வெங்காய சட்னி ரொம்ப பொருத்தமா இருந்தது.நன்றி கீதா!!

SathyaSridhar said...

Geetha, rombha nalla vidhyasamana idli ithu varaikkum naan engaum paarthathe illa pa kandippa naan try pandren next time enna nethu thaan arisi maavu idli kku araichu vechen.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி...ஆமாம் மகி, இந்தியன் கடைகளில் கிடைக்கும் உடைத்த கோதுமை தான்...

அதாவது இரண்டு விதம் இருக்கும்..ஒன்று பெரியதாக உடைத்தது...இன்னொன்று பொடியாக ரவையை விட சிறிது பெரிசாக இருக்கும்...இதில் நான் உபயோகித்து இருப்பது இரண்டவது வகை...

முதல் வகையில்...கோதுமை ஒன்றும் பாதியுமாக கிடைக்கும்..அதனை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து,கொரகொரவென மாவாக அரைத்து, உளுத்தம்மாவுடன் சேர்த்து புளிக்கவைத்து இட்லி செய்யவும்.

இரண்டாம் வகை கோதுமை ரவையினை உளுத்தம்மாவுடன் சேர்த்து ஊறவைத்தால் போதும்..தனியாக ஊறவைக்கவேண்டாம்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...உங்கள் விருப்பம் போல cream of wheat, grits என்று எதவேண்டுமானாலும் உபயோகிக்கலாம்...எல்லாம் அருமையாக வரும்...


உளுத்தம்மாவுடன், இதனை சேர்த்து புளிக்கவைத்து பின் இட்லி செய்யவும்..அருமையாக வரும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ராஜி..கண்டிப்பாக செய்து பாருங்கள்...


தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தோழி மஞ்சு....கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வரவேண்டும்...

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நிலோபர்...

தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...

நன்றி ஜெய்லானி....

நன்றி ப்ரியா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சத்யா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் அருமையாக இருக்கும்...நன்றி...

Shama Nagarajan said...

nice cute idli..healthy choice

vanathy said...

Geetha, idli looks very healthy and yummy.

Vijiskitchencreations said...

nice & healthy idly.

Nithu Bala said...

Superb healthy Idly..nanum seidhu pakkaren..konja naala ungha recipes selathu miss paniten nu nenikaren..elathayum pakkaren..thansk for sharing this wonderful recipe..

சசிகுமார் said...

நல்ல சத்தான உணவை பகிர்ந்து கொண்டு உள்ளீர்கள் அக்கா சொல்லிடுங்க , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

simple and soft.

ஸாதிகா said...

கோதுமையில் இட்லி..சஃப்டாக வருமா?

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஷாமா...நன்றி வானதி...நன்றி விஜி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி...நன்றி ஆசியா அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஸாதிகா அக்கா...கோதுமை ரவையில் இட்லி மிகவும் சூப்பராக வரும்...சாதரண ரவா இட்லியைவிட இந்த இட்லி சூப்பராக இருக்கும்...நன்றி..

Gita Jaishankar said...

Nice idli preparation Geetha...this is new to me ulundu...will try your healthy version soon :)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா..கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி

ஹுஸைனம்மா said...

//முதல் வகையில்...கோதுமை ஒன்றும் பாதியுமாக கிடைக்கும்..அதனை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து,கொரகொரவென மாவாக அரைத்து, உளுத்தம்மாவுடன் சேர்த்து புளிக்கவைத்து இட்லி செய்யவும்.//

கீதா, இங்கயும் இதுதான் கிடைக்கும். இதுக்கும் இதே அளவுதானா? இந்த ரவையைத் தனியாக ஊறவைக்காமல், உளுந்தோடு சேர்த்து ஊற வைக்கலாமா?

GEETHA ACHAL said...

////முதல் வகையில்...கோதுமை ஒன்றும் பாதியுமாக கிடைக்கும்..அதனை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து,கொரகொரவென மாவாக அரைத்து, உளுத்தம்மாவுடன் சேர்த்து புளிக்கவைத்து இட்லி செய்யவும்.//

கீதா, இங்கயும் இதுதான் கிடைக்கும். இதுக்கும் இதே அளவுதானா? இந்த ரவையைத் தனியாக ஊறவைக்காமல், உளுந்தோடு சேர்த்து ஊற வைக்கலாமா?// இதற்கும் அதே அளவு தான் போதுமனது...ரவையினை எப்பொழுதும் உளுந்துடன் ஊறவைக்க கூடாது....உளுந்தினை மைய அரைக்க வேண்டும்..ரவையினை கொரகொரவென அரைக்க வேண்டும்..அதனால் தனி தனியாக ஊறவைக்கவும்...நன்றி ஹுஸைனம்மா....

nandhini said...

HI geetha
i ve tried ur wheat rava idly(today's breakfast),every one in my family liked it, even my daughter (who is very choosy in foods) ,said super idly ma...and i made ur vengaya kara chatney...came out very well.thank u..

swastika said...

nice..

Anonymous said...

What's the exact proportions when grinding in grinder

SURIYA said...

Healthy food, tomorrow i will prepare it. Thank you. All recipe are superb.....

Related Posts Plugin for WordPress, Blogger...