க்ரிட்ஸ் பொங்கல் & அவசர சாம்பார் - Grits Pongal & Sambar


பொங்கல் என்றால் பெரும்பாலும் அனைவருக்கும் விருப்பமான காலை நேர சிற்றுண்டி. எப்பொழுதும் அரிசியினை வைத்து தான் பொங்கல் செய்ய வேண்டுமா என்ன…அரிசி அதிகம் சேர்த்து கொள்வது உடலிற்கு நல்லது அல்ல என்பதால் கோதுமை ரவையில் தான் அடிக்கடி பொங்கல் செய்வேன்…ஒரு மாறுதலுக்காக இன்று செய்த க்ரிட்ஸ் பொங்கல்…அருமையோ அருமை…

அரிசி ரவா பொங்கலிற்கும் இதற்கும் சிறிது கூட வித்தியாசம் தெரியவில்லை…நீங்கள் செய்து பார்த்து உங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும். க்ரிட்ஸினை பற்றி மேலும அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 25 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         க்ரிட்ஸ்(White Grits) – 2 கப்
·         பாசிப்பருப்பு – 1 கப்
·         உப்பு – தேவையான அளவு
கடைசியில் தாளித்து சேர்க்க :
·         நெய் – 2 மேஜை கரண்டி
·         மிளகு – 1 தே.கரண்டி
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
·         கருவேப்பில்லை – 4 இலை
·         பச்சை மிளகாய் – 2
·         முந்திரி – சிறிது
·         கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது 1 தே.கரண்டி

செய்முறை :
·         பாசிப்பருப்பினை நன்றாக கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். (பிரஸுர் குக்கரில் வைத்தால் 2 – 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.)
·         க்ரிட்ஸினை கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். க்ரிட்ஸுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         இத்துடன் பாசிபருப்பு + தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் 5 – 6 நிமிடங்கள் வேகவிடவும்.


·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில் கொத்தமல்லியினை தவிர்த்து அனைத்து சேர்த்து தாளித்து பொங்கலில் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லியும் சேர்த்து நன்றாக கிளறவும்.


·         சுடான சுவையான சத்தான க்ரிட்ஸ் பொங்கல் ரெடி. இதனை சாம்பார், சட்னியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.


அவசர சாம்பார்
எளிதில் செய்ய கூடிய சாம்பார்…அவரவர் விருப்பதற்கு ஏற்றாற் போல காய்களை சேர்த்து கொண்டும் செய்யலாம்…இந்த சாம்பாரில் பாசிப்பருப்பு சேர்ப்பதால் மிகவும் நன்றாக இருக்கும்….நீங்களும் செய்து பாருங்கள்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         துவரம் பருப்பு – 1/4 கப்
·         பாசிப்பருப்பு – 1/4 கப்
·         வெங்காயம் , தக்காளி – 1
·         பச்சை மிளகாய் – 2
·         கொத்தமல்லி - சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு , சீரகம், வெந்தயம் – தாளிக்க
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பெருங்காயம் – சிறிதளவு


செய்முறை :
·         துவரம் பருப்பு + பாசிப்பருப்பினை நன்றாக கழுவி வைக்கவும். வெங்காயம் + தக்காளி நடுத்தர அளவில் நறுக்கி வைக்கவும்.
·         பிரஸர் குக்கரில் பருப்பு + வெங்காயம், தக்காளி , பச்சைமிளகாய் + தூள் வகைகள் எல்லாம் சேர்த்து அத்துடன் 3 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும வரை வேகவிடவும்.
·         பிரஸர் அடங்கியதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அத்துடன் கொத்தமல்லியினை சேர்த்து சுவையான சாம்பாரினை இட்லி, தோசை, பொங்கலுடன் பறிமாற ஈஸியாக இருக்கும்.
குறிப்பு : இதே மாதிரி இந்த சாம்பாரில் காய்களும் சேர்த்து செய்யலாம்…

34 comments:

kousalya raj said...

சமையல் செய்ய ஆகும் நேரத்தையும் போட்டு கலக்கிட்டீங்க... படங்களும் வெகு ஜோர்

Menaga Sathia said...

பொங்கல்+சாம்பார் மிக அருமை.எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுவேன்....

Nithu Bala said...

Superb recipe Geetha..roombha tempting ga irukku..cooker sambar nanum vaipen ana rendu paruppu serthu cooker-la pottathu illa..I'l try dear..thanks for sharing..

vanathy said...

geetha, very nice recipe and photos.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//பொங்கல்+சாம்பார் மிக அருமை.எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுவேன்...//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Cool Lassi(e) said...

I love the fact that you have used grits to make a traditional south indian dish. Yum!

San said...

Different version to prepare pogal sounds interesting geetha.Got to try your version soon,nice presentation dear.

Unknown said...

looks really yummy & delicious..

எல் கே said...

இந்த க்ரித்ஸ் இங்க என்ன பெயரில் கிடைக்கும்

Priya said...

எளிமையான செய்முறை படங்களுடன் நல்ல குறிப்பு கொடுத்து இருக்கிங்க.

பனித்துளி சங்கர் said...

ஆஹா பார்க்கும்போதே சாப்பிடணும்போல இருக்கு . கலக்குறீங்க போங்க . மிகவும் அருமை !

Mahi said...

சூப்பர் பொங்கல்!!

Raks said...

I like this sambhar very much,will try this out for pongal!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கெளசல்யா.....நன்றி மேனகா...நானும் தான் ...எனக்கு பொங்கல் சாம்பார் மிகவும் விரும்பமான உணவு...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி நிது பாலா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி வானதி...நன்றி ஜெய்லானி..//@@@Mrs.Menagasathia--//பொங்கல்+சாம்பார் மிக அருமை.எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுவேன்...//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
// .நீங்களுமா...சந்தோசம்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கூல்...நன்றி san...நன்றி ஸ்ரீ....நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கார்த்திக்க்...இது இந்தியாவில் என்ன பெயரில் கிடைக்கும் எனறு தெரியவில்லையே...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சங்கர்...நன்றி மகி...நன்றி ராஜி...

Chitra said...

very tempting recipe.... Thank you very much. :-)

Valarmathi Sanjeev said...

Pongal looks super. Simple and delicious sambhar.

Life is beautiful !!! said...

Geetha, a very different dish. Pongal looks very perfect and avasara sambhar super tastya irukumnu ingredients parthale theriyuthu. Thanks for sharing the recipes :)

SathyaSridhar said...

Geetha, grits pongal n sambar rombha nalla irukku, innaiku enga bfast um ven pongal n sambar thaan.

SathyaSridhar said...

Geetha, grits pongal n sambar rombha nalla irukku, innaiku enga bfast um ven pongal n sambar thaan.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா....நன்றி வளர்மதி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மஞ்சு...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றிகள் பல சத்யா...ஒ...// innaiku enga bfast um ven pongal n sambar thaan// உங்கள் வீட்டிலுமா...இங்கேயும் தான் அதே கதை...

Mahi said...

கீதா,நேத்து எங்க வீட்டுல பார்லி தோசை & அவசர சாம்பார்..சாம்பார் சூப்பரா இருந்தது. பார்லி இட்லி சரியா வரலை..பட் தோசை நல்லா இருந்தது.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி...பார்லி தோசையுடன் அவசர சாம்பார் சூப்பராக இருக்கும்...//பார்லி இட்லி சரியா வரலை..பட் தோசை நல்லா இருந்தது//ஒரு வேளை தண்ணீர் மாவில் அதிகமாக இருந்ததோ...தெரியவில்லையே...

Priya Suresh said...

Super delicious pongal,udane saapidanam pola irruku..

தெய்வசுகந்தி said...

கலக்குங்க கீதா!!!!!!!!!!!

Pavithra Elangovan said...

I too did grits pongal ..We too liked it geetha by the way I loved the sambar very much.. I will try this for pongal again.. the picture is making me hungry again..

jaya said...

Super Delicious pongal sambar rombha nnalla irukku thanks.

satya said...

Tis is 1st time am making sambar...I followed ur instructions....result is toooo good..my husband like that sambar very much...thanx u soo much...

Related Posts Plugin for WordPress, Blogger...