ஒட்ஸ் ஆனியன் இட்லிபொடி தோசை & கொள்ளு இட்லிபொடி - Oats Onion IdlyPodi Dosai & Kollu/Horsegram IdlyPodiஇந்த தோசை மிகவும் எளிதில் செய்யகூடிய சத்தான தோசை …இதற்கு தனியாக சட்னி செய்ய தேவையில்லை…இதிலேயே இட்லிபொடி, வெங்காயம்  எல்லாம் சேர்த்து இருப்பதால் சுவையாக இருக்கும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         ஒட்ஸ் – 2 கப்
·         வெங்காயம் - 1
·         கொள்ளு பொடி – 2  மேஜை கரண்டி
·         உப்பு , எண்ணெய் – சிறிதளவு

கொள்ளு பொடி செய்ய தேவையான பொருட்கள் :
·         கொள்ளு – 1 கப்
·         காய்ந்த மிளகாய் – 10
·         பூண்டு – 3 பல் தோலுடன்
·         எள் – 1/4 கப்
·         உப்பு  - 1 தே.கரண்டி
·         பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :
கொள்ளு இட்லிபொடி செய்முறை :
·         கொள்ளு + காய்ந்த மிளகாய் + எள்யினை கடாயில் தனிதனியாக போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
·         மிக்ஸியில் கொள்ளு+ காய்ந்தமிளகாயினை சேர்த்து அரைத்து கொள்ளவும். கடைசியில் எள் + பூண்டு பற்கள் சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும்.
·         பொடியில் உப்பு + பெருங்காயம் சேர்க்கவும். சுவையான சத்தான கொள்ளு இட்லிபொடி ரெடி. (குறிப்பு : இந்த பொடியினை அப்படியே சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.)

ஒட்ஸ் பொடி தோசை செய்முறை :
·         ஒட்ஸினை 1 கப் தண்ணீரில் 2 நிமிடங்கள் ஊறவைத்து அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.இத்துடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது தோசை மாவு ரெடி. வெங்காயத்தினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
·         கல்லினை காயவைத்து, தோசைகள் ஊற்றவும். தோசைகள் மீது உடனே கொள்ளு பொடியினை தூவி அதன் மீது வெங்காயத்தினை தூவி, சிறிது எண்ணெய் விடவும்.
·         ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு, தோசையினை திருப்பி போட்டு 1 நிமிடம் வேகவிடவும்.
·         சுவையான சத்தான தோசை ரெடி. இதற்கு சட்னி எதுவும் தேவையில்லை.

குறிப்பு :
இதே மாதிரி நாம் இட்லிபொடியினை போட்டும் தோசை செய்யலாம்.
இட்லிபொடி செய்யும் பொழுது எப்பொழுதும் நாம் கடைசியில் 2 – 3 பூண்டு பல் தோலுடன் சேர்த்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த பொடியினை குறைந்தது 1 மாதம் வரை வைத்து கொள்ளலாம். 

30 comments:

SathyaSridhar said...

Geetha,,vidha vidhamaana idli podi hmm super idea oats la podi seirathu..

எல் கே said...

once again a different and unique dish

Menaga Sathia said...

மிக அருமையாக இருக்கு...சூப்பர்ர்ர்!!

Priya Suresh said...

I love podi dosais,urs version looks super tempting and delicious..feel like having this tasty podi dosais..

Cool Lassi(e) said...

Very tempting dish!

Unknown said...

Wow tempting podi,yummy dosa.Unique recipes...Feel to grab the plate...

Life is beautiful !!! said...

Arumaiyana, aarokyamana unavu. Thanks :)

Chitra said...

wow! Superb, ma... !

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சத்யா...நன்றி கார்த்திக்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கூல்...நன்றி ப்ரேமா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மஞ்சு...நன்றி சித்ரா...

Nithu Bala said...

That is tempting and healthy dosa... a must try one..

vanathy said...

கீதா, நல்ல ஆரோக்கியமான ரெசிப்பி.
அறுசுவையில் உங்கள் மைக்ரோவேவ் மைசூர் பாகு செய்தேன். சுவை அபாரம்.

Pavithra Srihari said...

kollu podi romba different aa irukku ... arachu vachukittu daily pottu saaptaal weight reduce aagum illa .. ennoda next podi ithu dhaan

shriya said...

wow!! My all time fav idli podi's. Love the variety you made . Bookmarked it.

athira said...

கீதாச்சல் ஓட்ஸ் ல் மிக நல்ல இலகு தோசை சொல்லிட்டீங்கள். அதுவும் புளிக்க வைக்காமல் சுட முடியுமென்பதால் சந்தோசமாக இருக்கு. செய்து பார்த்திடுவேன்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிது....நன்றி வானதி...தங்கள் செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி...வீட்டில் அனவரும் விரும்பி சாப்பிட்டாங்களா...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா....கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் அருமையாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்ரோயா....கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் அருமையாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா...ஆமாம் எளிதில் செய்ய கூடிய தோசை...அருமையாக இருக்கும்...

Priya said...

சுலபமா இருக்கே... ட்ரை பண்ணிட வேண்டியதுதான்.Thanks for Sharing!

Gita Jaishankar said...

Oats dosai and the podi sounds really good Geetha..thanks for sharing this healthy recipe..I am definitely going to try this :)

Dershana said...

oast dosai mel podi thoovuvathu puthusa irukku. en thatha thaan enakku podi dosai pazhakki uttar aanal oats dosai mel alla :-)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா..கண்டிப்பாக செய்து பாருங்கள்..அருமையாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா...கண்டிப்பாக செய்து பாருங்கள்..அருமையாக இருக்கும்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி தர்ஷினி...உங்கள் தாத்தா நியாபகம் வந்துவிட்டதா...எங்க அம்மா..நாங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது இப்படி இட்லி, தோசையில் எல்லாம் செய்து கொடுத்துவிடுவாங்க...சூப்பராக இருக்கும்..அதுவும் சூடாக நல்லெண்ணெயில் கலந்து இட்லி, தோசையினை சாப்பிட சுவையோ சுவை...

Priya dharshini said...

Oats pakkam marupadiyum vanthacha...healthy food and tasty too

Raks said...

Nice idea and sounds really healthy!Mom makes kollu podi for rice,but idly podi is something new to me!

Asiya Omar said...

அருமையான குறிப்பு.

Related Posts Plugin for WordPress, Blogger...