கேழ்வரகு பார்லி அடை - Ragi Barley Adai

மிகவும் எளிதில் செய்ய கூடிய மாலை நேர டிபன்…எங்க அம்மா இதனை முருங்கைகீரை சேர்த்து செய்து கொடுப்பாங்க..மிகவும் சூப்பராக இருக்கும்…அதனை கீரை சேர்க்காமல் , வேகவைத்த பார்லி சேர்த்து செய்து இருக்கின்றேன்…மிகவும் அருமையான சத்தான அடை இது…நன்றி….

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கேழ்வரகு மாவு – 2 கப்
·         வேகவைத்த பார்லி – 1 கப்
·         உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
வதக்கி கொள்ள :
·         வெங்காயம் – 1
·         பச்சை மிளகாய் – 2
·         கருவேப்பில்லை – 4 இலை
·         எண்ணெய் – 1 தே.கரண்டி

செய்முறை :
·         வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், இதனை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கினால் போதும்.
·         கேழ்வரகு மாவு + வேகவைத்த பார்லி + உப்பு + வதக்கிய பொருட்கள் சேர்த்து நன்றாக சாப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். (கவனிக்க : முதலில் தண்ணீர் சேர்க்காமல் மாவினை பிசையவும்…தேவையெனில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவினை பிசையவும்…)
·         மாவினை சிறிய சிறிய அடைகளாக தட்டி கொள்ளவும்.
·         தோசைக்கல்லினை காயவைத்து அடைகளை போட்டு வேகவிடவும்.
·         ஒரு பக்கம் நன்றாக வெந்தபிறகு, அதனை திருப்பி போட்டு மேலும் 2 நிமிடங்கள் வேகவிடவும்.
·         சுவையான சத்தான அடை ரெடி…வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது…

குறிப்பு : இந்த அடையில் வேகவைத்த பார்லி சேர்ப்பதால் உடலிற்கு தேவையான நார்சத்து கிடைத்து விடுகின்றது…அடை பார்க்கவும் சூப்பராக இருக்கும்.

48 comments:

எல் கே said...

தொடர்ந்து சத்தான உணவு வகைகளை வழங்கி வரும் கீதாவுக்கு நன்றி

Asiya Omar said...

நல்ல ஹெல்தி குறிப்பு,பார்ப்பதற்கு நாங்கள் செய்யும் சம்பா அரிசி மாவு ரொட்டி போல் உள்ளது.பேசாமல் நீங்கள் அல்லது மேனகா இருக்கிற இடமாய் பார்த்து வந்துவிடலாம்.நிறைய டயட் ரெசிப்பீஸ்.நன்றி.

Chitra said...

man.... this is so good.... Thank you for the recipe. :-)

Menaga Sathia said...

சின்ன வயசுல ராகின்னாலே பிடிக்காது.இப்போ அதன் பயனை தெரிந்துக்கொண்டு ஏதாவது செய்து சாப்பிடுகிறேன்.அடை சூப்பராக இருக்கு....

அதற்கென்ன ஆசியாக்கா பேசாமா எங்க வீட்டுக்கே வந்துடுங்க....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஆசியா...கண்டிப்பாக வீட்டிக்கு பக்கத்தில் வந்துவிடுங்க...எனக்கும் உங்கள் சமையலினை சாப்பிட்ட மாதிரி இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...

kousalya raj said...

சமையல் என்று மட்டும் செய்யாமல் சத்து உள்ளதா பார்த்து பார்த்து செய்கிற உங்களுக்கு என் பாராட்டுகள்.

Suganya said...

Sounds so healthy. Really wanted to try this one....YUM!

Life is beautiful !!! said...

Geetha, romba sathana adai. Parka romba nalla iruku. Ragi vachu seithu irukiren aana barley use pannathu ille. Romba nanri :)

Bharathy said...

En veettukkararin patti kezhvaragu adai nandraga seyvange..:)
barley sertha adai, vithyasamakavum healthy akavum irukkum :)
Sooda oru cup decoction coffee kooda intha adai sappittaal..ssssss :D

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி கெளசல்யா...நன்றிகள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சுகன்யா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மஞ்சு...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பாரதி..நீங்கள் சொல்வது போல டிகஷன் காப்பினை இந்த அடை சாப்பிட்டவுடன் சாப்பிட்டால பிரமாதம்..சூப்பராக இருக்கும்...நியாபம செய்துவிட்டிங்களே...நன்றி...

ஜெய்லானி said...

வாவ்....ஃபிரை பண்ணியதை பார்தால் அப்படியே கேக் மாதிரியே இருக்கு. ம்..ம்..

ஜெய்லானி said...

## நா எந்த பிளாக் போனாலும் ஓட்டு போடாம வறதில்லைன்னு ஒரு கொள்கையாவே வச்சிருக்கேன். இத்தனை நாளா உங்க பிளாக்கில தமிழிஷ் ஓட்டு பட்டை இல்லை. ஏதோச்சயா கீழே
லிங்க் டு போஸ்டில் பாய்ண்டரை வைக்கும் போது தமிழிஷ் பேர் வந்துச்சி ஒரு வழியா அதுல ஓட்டு போட்டேன் .
ஏன் இப்படி ,நேரடியா ஓட்டு பட்டைய வைக்க வேண்டியது தானே !!!

:-))))

Priya Suresh said...

Woww yevalo healthyana adai, romba supera iruku Geetha..

vanathy said...

Geetha, very healthy recipe. Looking very delicious.

தெய்வசுகந்தி said...

கீதா எனக்கு பிடித்த அடை. நான் இதில் கேரட் மற்றும் குடமிளகாய் சேர்த்து செய்வேன். பார்லி சேர்த்து அடுத்தூ செஞ்சுடலாம்.

Priya dharshini said...

new procedure of making healthy adai by u...great work

மனோ சாமிநாதன் said...

அருமையான ஸ்னாக் இது கீதா! தோற்றம் அதிரசத்தை நினைவூட்டியது. படிக்குமுன் அது போன்ற ஸ்வீட்டோ என்றுகூட நினைத்தேன். செய்முறை சுலபமாக இருக்கிறது. புகைப்படம் உடனே செய்து சாப்பிடத்தூண்டுகிறது!!

SathyaSridhar said...

Geetha,, adai romba nalla seithurukeenga paa enakku ethavathu healthy ana easy recipes venumna engayum theda venam straight ah unga blog kukku vanthudaren..Nalla recipes Geetha.

athira said...

கீதா ஆச்சல் அருமையான அடை. வரகு, பார்லி என எப்பவுமே வித்தியாசமாக இருக்கு உங்கள் குறிப்புக்கள்.

ஸாதிகா said...

பார்லியில் அடை.அசத்துங்க கீதா ஆச்சல்

தக்குடு said...

ok akka, point noted,,:)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் ஒட்டுக்கும் மிகவும் நன்றி ஜெய்லானி...நன்றி பரியா...நன்றி வானதி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சுகந்தி..நன்றி ப்ரியா...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் பாரட்டுக்கும் மிகவும் நன்றி மனோ ஆன்டி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சத்யா...//enakku ethavathu healthy ana easy recipes venumna engayum theda venam straight ah unga blog kukku vanthudaren//மிகவும் சந்தோசம்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி அதிரா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...நன்றி தக்குடுபாண்டி...

Padmajha said...

Its really a healthy recipe Geetha.Thanks for sharing :)

Kanchana Radhakrishnan said...

ஃபிரை பண்ணியதை பார்தால் கேக் மாதிரியே இருக்கு. super geetha.

Padhu Sankar said...

Healthy adai .Sure to try

Malar Gandhi said...

Kezhvaragu + barley sounds very healthy to me, loved ur finish...looks perfect:)

Valarmathi Sanjeev said...

Healthy one, looks yummy. Must try this.

Raks said...

100% healthy food! sounds yummy too!

சசிகுமார் said...

டவுன்லோட் செய்து விட்டேன் நண்பரே, எப்பவும் போல நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எப்பவும் போல நல்ல பதிவு அக்கா . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.

Pavithra Elangovan said...

Wow geetha wonderful healthy adai.. never tried this combination.. thanks for ur innovative idea..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி PJ...நன்றி கஞ்சனா....நன்றி பத்மா....நன்றி மலர்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி வளர்மதி...நன்றி ராஜி...நன்றி பவித்ரா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சசி...உடல் நலத்தினை பார்த்து கொள்ளவும்...நன்றி...

suganya said...

Geetha could you post in your blog how to cook the barley in lot of the recipes you have been using cooked barley. If you could post the instructions for cooking the barley it would really help.

I think you participate in arusuvai too right? I remember seeing the same photo on arusuvai too.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சுகன்யா...கண்டிப்பாக பார்லியினை எப்படி சமைப்பது என்பதினை விளக்கமாக ஒரு பதிவு போடுகிறேன்...நன்றி...

சரயு said...

வணக்கம் சகோதரிகளே... இந்த தளத்திற்கு நான் புது வரவு. மிக அருமையான வலைபதிவு. இத்தனை நாட்கள் என் கவனத்திற்கு வராமல் போனதில் வருந்துகிறேன்.

GEETHA ACHAL said...

நன்றி சரயு.....

Related Posts Plugin for WordPress, Blogger...