பிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice


பச்சை அரிசி அல்லது புழுங்கல் அரிசியினை சாப்பிடுவதினை விட பிரவுன் ரைஸ் சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. பிரவுன் ரைஸினை பற்றி மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 1/2 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
·         பிரவுன் ரைஸ் – 1 கப்

புளி குழம்பு செய்ய :
·         புளி – எலுமிச்சை பழம் அளவு
·         தண்ணீர் – 2 கப்
·         நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு – தாளிக்க
·         கடலை பருப்பு – 1 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 3
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பெருங்காயம் - சிறிதளவு
·         மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

புளிசாதம் பொடி செய்ய :
·         தனியா – 1 கப்
·         காய்ந்த மிளகாய் – 10 - 12
·         கடுகு – 1 தே.கரண்டி
·         வெந்தயம் – 1 தே.கரண்டி
·         கடலை பருப்பு – 1/4 கப்
·         உளுத்தம் பருப்பு – 1/4 கப்
·         உப்பு – 1 தே.கரண்டி
·         பெருங்காயம் – சிறிதளவு
கடைசியில் தாளித்து சேர்க்க :
·         நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடலை பருப்பு – 1 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 4 இலை

செய்முறை :
புளி குழம்பு செய்முறை :
·         புளியினை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, 2 கப் புளிதண்ணீரை கொஞ்சம் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைபருப்பு + காய்ந்த மிளகாய் + கருவேப்பில்லை தாளிக்கவும்.
·         இத்துடன் புளி தண்ணீர் + மஞ்சள் தூள் + உப்பு + பெருங்காயம் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இப்பொழுது புளி குழம்பு ரெடி. (குறிப்பு : இதனை 1 மாதம் வரை வைத்து இருந்து சாப்பிடலாம்…அப்படி நிறைய நாள் வரவேண்டும் என்றால் எண்ணெயினை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.)

புளிசாதம் பொடி செய்முறை :
·         தனியா + காய்ந்த மிளகாய் + கடுகு + வெந்தயம் + கடலைபருப்பு + உளுத்தம் பருப்பு என எல்லா பொருட்களையும் தனி தனியாக கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். (கவனிக்க : ஒவ்வொரு பொருளாக தனி தனியாக தான் வறுக்க வேண்டும்…நேரம் மிச்சம் செய்யலாம் என்று ஒன்றோடு ஒன்று சேர்த்து வறுத்தால் சுவை மாறுபடும்.)
·         அரைத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவிடவும்.
·         மிக்ஸியில் முதலில் தனியா சேர்த்து அரைக்கவும். அதன் பிறகு காய்ந்த மிளகாயினை சேர்த்து அரைக்கவும்.
·         கடைசியில் தனியா மிளகாய் பொடியுடன் கடுகு + வெந்தயம் சேர்த்து அரைத்து பாத்திரத்தில் கொட்டிகொள்ளவும்.
·         மிக்ஸியில் கடலைபருப்பு + உளுத்தம் பருப்பினை கொரகொரவென அரைத்து கொள்ளவும்.
·         இந்த பொடியினை தனியா பொடியுடன் சேர்க்கவும். இத்துடன் பெருங்காயம் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது பொடி ரெடி. ( குறிப்பு : இந்த பொடியினையும் செய்து வைத்து கொண்டால் இரண்டு மாதங்கள் ஆனாலும் கொடாது….)

புளி சாதம் செய்முறை :
·         பிரவுன் ரைஸினை உதிர் உதிராக வேகவைத்து  கொள்ளவும்.
·         தேவையான அளவு குழம்பினை சேர்த்து கிளறவும்.
·         அதன் பிறகு 2 தே.கரண்டி பொடியினை சாதத்துடன் சேர்த்து கிளறவும்.
·         கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடலைபருப்பு + கருவேப்பில்லை தாளித்து கடைசியில் சாதத்துடன் சேர்த்து கிளறவும். சுவையான பிரவுன் ரைஸ் புளிசாதம் ரெடி. இதனை வாழைக்காய் வறுவல் அல்லது விரும்பிய வறுவல், சிப்ஸ், அவித்த முட்டை வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு : இது என்னுடைய அம்மாவின் செய்முறை….அம்மா இங்கு வந்து இருந்த பொழுது எனக்காக பிரவுன் ரைஸில் செய்து கொடுத்து… பிரவுன் ரைஸில் நல்லா இருக்குமோ என்று நினைத்தால் …சுவை சூப்பராக இருந்தது…அதனால் எப்பொழுதும் பிரவுன் ரைஸ் மயம் தான்…

இதனை நவராத்தி சமயம் செய்தாங்க…சுமார் 7 – 8 மாதங்களுக்கு பிறகு இப்பொழுது தான் திரும்ப அம்மாவிடம் பொடி செய்முறையினை கேட்டு போஸ்ட் செய்ய நேரம் கிடைத்துள்ளது…நன்றி

40 comments:

எல் கே said...

பார்க்க நல்ல இருக்கு. பிரவுன் ரைஸ் ??? கேள்வி பட்டது இல்லையே

சசிகுமார் said...

பிரவுன் ரைசா அப்படின்னா என்ன அக்கா, அது எப்படி இருக்கும் , பார்ப்பதற்கே நன்றாக உள்ளது அக்கா உங்கள் சமையல் , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

//பார்க்க நல்ல இருக்கு. பிரவுன் ரைஸ் ??? கேள்வி பட்டது இல்லையே//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்...பிரவுன் ரைஸ் என்பது நம்மூர் கைகுத்தல் அரிசி தான்....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி..கைகுத்தல் அரிசியினை தான் அப்படி சொல்கிறோம்..அதனை பற்றி மேலும் அறிய link கொடுத்து இருக்கின்றேன்..பாருங்கள்...நன்றி

Unknown said...

never tried in brown rice dear wounderful idea, will try ur version...

SathyaSridhar said...

Geetha,,brown rice la puliyodaraiya nalla idea dear rombha saththaana murai brown rice udambukku rombavum nallathu,,naan ippa ellam par boiled rice use panna arambichuttu irukken athuleye brown rice variations diebeties rice variations irukku athuvum samaikka konjam konjam aarambichurukken..

SathyaSridhar said...

Geetha,,brown rice la puliyodaraiya nalla idea dear rombha saththaana murai brown rice udambukku rombavum nallathu,,naan ippa ellam par boiled rice use panna arambichuttu irukken athuleye brown rice variations diebeties rice variations irukku athuvum samaikka konjam konjam aarambichurukken..

Aruna Manikandan said...

nice combo dear...
puli sadam with vazhakkai :-)

Raks said...

NIce way to eat brown rice,I will try this out,first time I am going to try cooking/eating brown rice ;)

I tried ur hotel chutney this weekend for idly,was nice,thank you :)

Malar Gandhi said...

Wonderful healthy puli saadham

Shama Nagarajan said...

nice idea dear..looks perfect and yummy

ஜெயந்தி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html

vanathy said...

கீதா, சூப்பர். ஹெல்தியான ரெசிப்பி.

shriya said...

Very comfort food. easy to make and perfect for travelling.

Gita Jaishankar said...

Delicious looking pulisadam dear...even I too make this brown rice only...we switched to brown rice a year back and I make all variety dishes with this rice only :)

ஸாதிகா said...

பார்க்கவே அழகாக இருக்கு.பிரவுன் ரைஸில் புளிசாதம் செய்து முன்பு சாப்பிட்டு இருக்கின்றேன்.சுவையே அலாதிதான்.மீண்டு சாப்பிடத்தூண்டி விட்டீர்கள்.

Asiya Omar said...

புளி சாதம் பார்க்கும் பொழுதே சாப்பிடத்தூண்டுது,அப்படியே எனக்கு பார்சல்.ப்ரவுன் ரைஸ் -ன்னா மலயாளிஸ் சாப்பிடுற மோட்டா ரைஸ் தானே.

Swarna said...

I was looking for a recipe with brown rice and thanks fro sharing it ... how is the taste ?? giving a second thought of using just b'coz of the taste..

Nithu Bala said...

Brown rice puli sadam superb..

ஜெய்லானி said...

இங்கு (ஷார்ஜா ) நிறைய தடவை செய்து சாப்பிட்டிருக்கிறேன் . ப்ரவுன் ரைஸ் சத்து அதிகம் என்ற ஒரே காரணத்தால் . இதுக்கு மட்டன் அல்லது சிக்கன் ஃபிரை அல்லது மஞ்சூரியன் செம காம்பினேஷன்.

Menaga Sathia said...

yummy rice looks delicious!!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சத்யா...ஆமாம் புழுங்கல் அரிசி உடலிற்கு மிகவும் நல்லது...ஆனால் அதில் டயபெட்டிக் வெரைடி இருப்பது புதுசாக தெரிந்து கொள்கிறேன்...அது எங்க கிடைக்கும்......நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அருணா...நன்றி மலர்...நன்றி ஷாமா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ராஜி...கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் சுவையாக இருக்கும்...என்னுடைய குறிப்பில் இருந்து சட்னி செய்து பார்த்தமைக்கு மிகவும் நன்றி ராஜி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா...நாங்களும் பெரும்பாலும் பிரவுன் ரைஸ் தான் சாப்பிடுகின்றோம்...நன்றி..இப்பொழுது எல்லாம் பிரவுன் ரைஸே பழகிவிட்டது..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...மீண்டும் சாப்பிட தூண்டிவிட்டேனா...எங்க வீட்டிக்கு வாங்க...நான் உங்களுக்கு செய்து கொடுகிறேன்...நன்றி அக்கா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா..உங்களுக்கு தானே இதோ பார்சல் ரெடி செய்து கொண்டு இருக்கின்றேன்...//ப்ரவுன் ரைஸ் -ன்னா மலயாளிஸ் சாப்பிடுற மோட்டா ரைஸ் தானே.//அது பற்றி எனக்கு தெரியவில்லை...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்வர்ணா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சுவையாக இருக்கும்..முதலில் பிடிக்கவில்லை என்றாலும், பழக பழக இதுவும் சுவையாக தான் தெரியும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிது...நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...வாழ்த்துகள்... நீங்கள் பிரவுன் ரைஸ் சாப்பிடுகிரேன் என்பது கூறுவதில் இருந்து மிகவும் மகிழ்ச்சி...இதில் சத்து அதிகம் என்பது உண்மை...நீங்கள் சொல்வது போல கம்பினேஷனுடன் சாப்பிட சுவையோ சுவை தான் போங்க...

GEETHA ACHAL said...

தங்களுடைய விருத்துக்கு மிகவும் நன்றி ஜெயந்தி...நன்றி வானதி...

Priya Suresh said...

Super delicious tamarind rice, love brown rice in anything, healthy dish geetha..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...

athira said...

எனக்கு எந்த ரைஸ் ஆனாலும் புளிச்சாதம், தயிர்ச்சாஅதம் என்றால் ஓக்கேதான். நன்றாக இருக்கு உங்கள் சாதம்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா...

Vijiskitchencreations said...

நல்ல ரெசிப்பி + ப்ரவுன் ரைஸ். அடுத்த தடவை இது தான். நான் வெறும் ரைஸ் + பொரியல் தான் சேர்த்து சாப்பிட்டு இருக்கேன்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி விஜி....கண்டிப்பாக செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும்...

Hema said...

Hi Geetha,
I am Hema.I like your blog.All healthy recipies.I saw your blog 2 weeks ago(i missed so long:-().Your brown rice tamarind recipe tempted me so ibought brown rice today.I have a question how much water needed to cook for 1 cup rice.Thanks in Advance.

Hema said...

Hi Geetha,
I am new to your blog.I saw your blog 2 weeks before.I just loved it.All healthy recipes.I tried your Quinoa dosa,hotel sambar and tomato chutney.all cema out very nice.Your tamarind rice tempted me a lot.So i bought brown rice today but i dono how much water needed to cook 1 cup rice.please advise.

Related Posts Plugin for WordPress, Blogger...