அவகோடா பிரவுன் ரைஸ் தோசை - Avocoda Brown Rice Dosai


அவகோடாவில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது…மற்றும் விட்டமின்ஸ் C, K & B9.

அவகோடாவினை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொலஸ்டிராலினை உயர்த்துகின்றது. அதனால் கொலஸ்டிரால் அதிகம் உள்ளவர்கள் இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

அவகோடாவில் அதிக அளவு பொட்டஸியம் (Potassium) இருக்கின்றது. வாழைப்பழத்தில் உள்ள potassium அளவினைவிட அவகோடாவில் அதிகம் இருக்கின்றது. இதனால் ரத்தகொதிப்பு வராமல் தடுக்க உதவுகின்றது.


ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பிரவுன் ரைஸ் – 1 கப்
·         அவகோடா – 1
·         முளைகட்டிய பச்சைபயிறு – 1/2 கப்
·         உப்பு , எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
·         பிரவுன் ரைஸினை குறைந்தது அரைமணி ஊறவைக்கவும்.
·         பிரவுன் ரைஸ் + அவகோடா + பச்சைபயிறினை தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
·         இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை தோசைகளாக சுட்டு சட்னியுடன் பறிமாறவும்.
·         சுவையான சத்தான அவகோடா பிரவுன்ரைஸ் தோசை ரெடி.


குறிப்பு : இந்த மாவில் உடனே தோசை செய்யலாம். புளிக்க வைக்க தேவையில்லை.

48 comments:

Mahi said...

நல்லாருக்கு கீதா..மாவை புளிக்க வைக்க வேணாமா? அரைத்த்தவுடனே தோசை ஊதிடலாமா?

Menaga Sathia said...

அசத்தலான குறிப்பு!!

Shriya said...

Avocado brown rice looks absolutely divine. It's really a great recipe and very innovative too.

Unknown said...

wounderfull Idea dear dosa using brown is too gud...Avacado chuteny very innovative...Both luks fabulous.

சசிகுமார் said...

நல்ல பதிவு. உங்கள் வீட்டு பாத்திரங்கள் கூட எவ்வளவு அதிஸ்ட்டம் பெற்றுள்ளது. உலகமே அந்தி பார்க்கின்றதே. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Life is beautiful !!! said...

Geetha, arumaiyana recipe. Avocoda ippadi use panna mudiyumnu naan ninaichathu kooda ille.

ஜெய்லானி said...

உங்க பதிவின் சிறப்பே அதன் குணம் நலன்களை ஆரம்பத்திலேயே போடுவது. இதனால் சாப்பிடுபவர்க்கு அதன் சத்துக்கள் புரிகிறது.
:-))

Asiya Omar said...

அருமை,நிறைய புது ரெசிபீஸ் செய்து அசத்துறீங்க.புத்தகமாக வெளியிடுங்கள்.எல்லாம் புதுமை.

GEETHA ACHAL said...

//நல்லாருக்கு கீதா..மாவை புளிக்க வைக்க வேணாமா? அரைத்த்தவுடனே தோசை ஊதிடலாமா?//நன்றி மகி...மாவினை புளிக்க வைக்க தேவையில்லை...உடனே தோசை செய்து சாப்பிடலாம்...அருமையாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரேயா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரேமலதா...

GEETHA ACHAL said...

//நல்ல பதிவு. உங்கள் வீட்டு பாத்திரங்கள் கூட எவ்வளவு அதிஸ்ட்டம் பெற்றுள்ளது. உலகமே அந்தி பார்க்கின்றதே. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி..உடல் நிலை எப்படி உள்ளது..பார்த்து கொள்ளுங்கள்...

GEETHA ACHAL said...

//Geetha, arumaiyana recipe. Avocoda ippadi use panna mudiyumnu naan ninaichathu kooda ille//தங்கள் கருத்துக்கு நன்றி மஞ்சு...இதே மாதிரி சாப்பத்திக்கு பிசையும் பொழுதும் செய்யலாம்...அருமையான அவகோடா சாப்பாத்தி ரெடி...

GEETHA ACHAL said...

//உங்க பதிவின் சிறப்பே அதன் குணம் நலன்களை ஆரம்பத்திலேயே போடுவது. இதனால் சாப்பிடுபவர்க்கு அதன் சத்துக்கள் புரிகிறது.
:-))//தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய்லானி...எதோ எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடைய பகிர்ந்து கொள்கிறேன்...நன்றி...

GEETHA ACHAL said...

//அருமை,நிறைய புது ரெசிபீஸ் செய்து அசத்துறீங்க.புத்தகமாக வெளியிடுங்கள்.எல்லாம் புதுமை.//தங்கள் கருத்துக்கு நன்றி ஆசியா அக்கா...அது தான் யோசித்து கொண்டு இருக்கின்றோம்...டயட் சமையல் என்று வெளியிடலாம் என்று இருக்கின்றோம்....பார்ப்போம் ...

Yasmeen said...

I can say by the title of the dosai,this much be super healthy :D

ஸாதிகா said...

அட அவக்கோடா,பிரவுன் ரைஸ் தோசை.வித்தியாசமாக உள்ளதே.

Unknown said...

ரொம்ப வித்தியாசமான ரெஸிபி சொல்லியிருக்கீங்க, முயற்சி செய்து பார்க்கனும் நன்றி

Priya said...

Avocado நலன்களை பற்றி எழுதியது நல்லா இருக்கு.. உங்க ரெசிபி போலவே!

Malar Gandhi said...

You always amaze me with ur healthy recipes, good one:)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி யாஸ்மீன்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...நன்றி...

Priya Suresh said...

DOsa pakkurathuke saapidanam pola iruku..romba arumaiya irruku..

Anisha Yunus said...

ஆஹா....ரெம்ப நல்ல காம்பினேஷன். என்ற வூட்டுக்காரர் எப்ப பாத்தாலும் இந்த அவாகெடோவை கொணாந்து செய்யி, செய்யின்னு உயிர எடுப்பார். நானும் இப்போ, அப்போன்னு நேரம் தள்ளி கடசில அது வீணா போகும். எனக்கும் செய்யணும்னு ஆசை. ஆனா அதை எதுல சேத்தறதுன்னே தெரியாம இருந்தது. இந்த பிரவுன் ரைசும் நல்லதுன்னு கேள்விப்பட்டேன்...இந்த ஞாயிறு செஞ்சுட வேண்டியதுதான்!! நன்றி கீதா.

athira said...

சூப்பர் தோசை. நான் ஒரு அவகாடோ பிரியை.

vanathy said...

Geetha, super dosai. Very nice presentation.

மங்குனி அமைச்சர் said...

ஆஹா , பாக்கவே சூபரா இருக்கு மேடம் (பாக்கமட்டும் தான் சூபரா இருக்கும்னு ஜெய்லானி சொல்றான் மேடம் )

Anonymous said...

Geetha, just became an ardent follower of your blog...romba soopera irukku dosai. i will try it very sooon...

Unknown said...

what is avagoda? Please explain me.

மனோ சாமிநாதன் said...

வழக்கம்போல அருமையான சத்துக்கள் நிறைந்த தோசை!
வாழ்த்துக்கள், கீதா!!

Dershana said...

two of my favourite ingredients together. Ithu kandippa try pannuven, geetha.

Dershana said...

two of my favourite ingredients together. Ithu kandippa try pannuven, geetha.

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு.வித்தியாசமான ரெஸிபி.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...நன்றி அதிரா...நன்றி வானதி...

Raks said...

Sounds really good,should be a very soft one!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்து நன்றி அன்னு...கண்டிப்பாக செய்து பாருங்கள்...ஏன் அவகோடாவினை வீனாக்கின்றிங்க...அதனை வைத்து நிறைய செய்யலாம்....சாலடாக சாப்பிடலாம்...நன்றாக பழுத்த அவகோடாவினை, சாப்பாத்தி மாவு பிசையும் பொழுது இதனையும் சேர்த்து பிசைந்து சாப்பாத்தி செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்...மில்க் ஷேக் செய்து பாருங்கள்...மோருடன் கலந்து குடிக்கலாம்...இன்னும் பல வகையில் இதனை சேர்த்து செய்யலாம்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மங்குனி...//ஆஹா , பாக்கவே சூபரா இருக்கு மேடம் (பாக்கமட்டும் தான் சூபரா இருக்கும்னு ஜெய்லானி சொல்றான் மேடம் )//நீங்களும் தான்...

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி denny...நன்றி காயத்ரி...அவகோடா என்பது ஒரு வகை பழம்( பொதுவாக காய் மாதிரி தான் இருக்கும்.)...இது உடலிற்கு மிகவும் நல்லது...இது இங்கு USயில் நிறைய கிடைக்கும்...இந்தியாவிலும் இப்பொழுது இது நிறைய கடைகளில் கிடைக்கின்றது...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மனோ ஆன்டி...நன்றி தர்ஷினி...நன்றி கஞ்சனா....

San said...

Brilliant dosa geetha.It's very flaky n turned out so beautiful.

Jaleela Kamal said...

அவகோட சில நேரம் சாப்பிட நல்ல இருக்காது அதை இப்படி தோசையா ஊற்றி சாப்பிட்டால் ரொம்ப நல்ல இருக்கும் , நல்ல ஐடியா தான் வாழ்த்துகக்ள்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி san....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா...

SathyaSridhar said...

Epdi ungalukku nalla nalla combination healthy ahna dosai seirenga paa,,,nalla seithurukeenga dear..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சத்யா...

Related Posts Plugin for WordPress, Blogger...