பேக்டு ராஜ்மா வடை - Baked Rajma / Kidney Beans Vadai

ராஜ்மாவில் அதிக அளவில் புரதம், பாஸ்பரஸ், மெக்னிஸியம், இரும்பு போன்ற மினரல்ஸும் மற்றும் விட்டமின்ஸும் இருக்கின்றது.

உடல் குறைக்க விரும்புவோர் இதனை உணவில் சேர்த்து கொண்டால் நல்ல பயன் கிடைக்கும்.

எப்பொழுதும் எண்ணெயில் பொரிப்பதை தவிர்ந்து இப்படி பேக்டு செய்வது மிகவும் நல்லது…சுவையிலும் மாறுதல் தெரியாது…

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வேகவைத்த ராஜ்மா – 1 கப்
·         ஒட்ஸ் – 1/2 கப்
·         வெங்காயம் – 1
·         பச்சைமிளகாய் – 1
·         கொத்தமல்லி, கருவேப்பில்லை – சிறிதளவு
·         உப்பு – தேவைக்கு
·         எண்ணெய் – சிறிதளவு

செய்முறை :
·         அவனை 400F யில் மூற்சூடு செய்யவும். ராஜ்மாவினை மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து கொள்ளவும். ஒட்ஸினை நன்றாக பொடித்து கொள்ளவும்.
·         வெங்காயம் + பச்சைமிளகாய் + கொத்தமல்லி , கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
·         ராஜ்மா + ஒட்ஸ் + பொடியாக நறுக்கிய பொருட்கள் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை சிறிய சிறிய வடைகளாக தட்டி ட்ரேயில் வைக்கவும். அதன் மீது சிறிது எண்ணெயினை spray செய்யவும்.
·         ட்ரேயினை முற்சூடு செய்யபட்ட அவனில், 10 நிமிடங்கள் வைக்கவும். பிறகு ட்ரேயினை வெளியில் எடுத்து வடைகளை திருப்பி போடவும்.
·         திரும்பவும் ட்ரேயினை அவனில் வைத்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
·         சுவையான சத்தான ராஜ்மா வடை ரெடி.

குறிப்பு :
ராஜ்மாவினை வேகவைக்காமல் அப்படியே செய்வதைவிட வேகவைத்த ராஜ்மாவில் வடை செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இதே போல தோசை கல்லிலும் இதனை கட்லட் போல செய்யலாம். 

37 comments:

எல் கே said...

மறுபடயுனம் ராஜ்மா ????

Unknown said...

Asusual very innovative...Need to learn lot from u...Baking of vada wounderfull.

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா போட்டு 7 நிமிஷத்துல 2 வடை போச்சே!!

ஜெய்லானி said...

ஹை...வடை....வடை....

Chitra said...

You come up with new ideas. பாராட்டுக்கள்!

Life is beautiful !!! said...

Miga arumaiyaga irukirathu. Very healthy dish.

சாருஸ்ரீராஜ் said...

வடை ரொம்ப நல்லா இருக்கு கீதா. அடிக்கடி உங்க பிளாக் ஓபன் ஆகமாட்டேங்குது காலைல இருந்து டிரை பண்ணி இப்ப தான் ஓபன் ஆகுது.

Priya Suresh said...

Baked version rajma vadaiya appadiye rendu yeduthu saapidanam pola irruku..super healthy vadai kanna parikuthu Geetha..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்...நன்றி ப்ரேமலதா...நன்றி பொற்கொடி...//ஆஹா போட்டு 7 நிமிஷத்துல 2 வடை போச்சே!//மீதி இருக்கின்றது...ஒரு வடையினை எடுத்துக்குங்க பொற்கொடி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...நன்றி சித்ரா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மஞ்சு...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாரு அக்கா...என்ன ப்ராபளம் என்று தெரியவில்லையே...பார்க்கிறேன்..நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...

Suganya said...

O.... wow... U bake vada... Sounds so good. Really want to try this out. Looks good... YUM!

Menaga Sathia said...

வடை பார்க்கவே நல்ல க்ரிஸ்பியா சூப்பராயிருக்கு....

Niloufer Riyaz said...

vadai migavum rusiyaga ulladu.

M.S.R. கோபிநாத் said...

கலக்கல் ரெசிப்பி..நன்றி

Srivalli said...

Getha, thanks for leading me to your space, I am trying to read what you have written..:)..recipes look very tempting..will surely ask you if I have a problem reading it properly..LOL!

ஸாதிகா said...

எண்ணெய் சேர்க்காத ஆரோக்கியமான வடை.

Asiya Omar said...

வடையும் படங்களும் சூப்பர்.

Mahi said...

ராஜ்மாவிலே வடையா? புதுசா இருக்கு கீதா.போட்டோல பார்க்கும் போதே சூபரா இருக்குன்னு தெரியுது!

தெய்வசுகந்தி said...

வாவ் சூப்பர் வடை கீதா!!!!!!

Mrs.Mano Saminathan said...

வழக்கம்போல புதுமையான சத்தான வடை! அவன் தயாரிப்பு என்பதால் சீக்கிரமும் செய்து விடலாம்.

SathyaSridhar said...

Romba healthy ahna vadai nga nalla seithurukeenga,,,vadai evloe venaalum saaptukalaam ipdi oven la seitha..

SathyaSridhar said...

Romba healthy ahna vadai nga nalla seithurukeenga,,,vadai evloe venaalum saaptukalaam ipdi oven la seitha..

Jayanthy Kumaran said...

Dear Geetha,
Thanx for your stopping by "Tasty Appetite " and sweet comments.
First time here.
Awesome space you have with healthy collection of recipes. Wondering how I missed here this much long.
Baked Rajma is new to me..sounds very healthy and tasty. goes to must try list.
Hope to see you often..!

Padmajha said...

Nice idea of baking the vadais and makes it guilt free and at the same time we can enjoy the crunchy snack!!

Kanchana Radhakrishnan said...

வடை பார்க்கவே நல்ல க்ரிஸ்பியா
நல்லா இருக்கு கீதா.

சசிகுமார் said...

ராஜ்மா என்றால் என்ன அக்கா தெரிவிக்கவும் , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஓட்டும் போட்டுவிட்டேன்

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்ற் சுகன்யா...நன்றி மேனகா...நன்றி நிலோஃபர்...நன்றி கோபிநாத்....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி ஸ்ரீவள்ளி...//I am trying to read what you have written..:)..recipes look very tempting..will surely ask you if I have a problem reading it properly//கண்டிப்பாக கேளுங்கள்....நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...நன்றி ஆசியா அக்கா...நன்றி மகி...நன்றி சுகந்தி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மனோ ஆன்டி....நன்றி பத்மஜா...நன்றி கஞ்சனா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி ஜெ...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசிகுமார்....//ராஜ்மா என்றால் என்ன//இதுவும் ஒரு வகை பருப்பு வகையினை சார்தது தான்...பொதுவாக north indiansஇதனை அதிகம் பயன்படுத்துவாங்க...சிவப்பு கலரில் இருக்கும்...வேர்கடலை, கொண்டைகடலை போன்று இதுவும் ஒரு வகை பருப்பு வகை தான்...உடலிற்கு மிகவும் நல்லது...இதனையும் குறைந்து 3 - 4 மணி நேரம் ஊறவைத்து பின் வேகவைக்க வேண்டும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும்நன்றிகள் சத்யா...

Jaleela Kamal said...

இது வரை வடை பேக் செய்ததிலலை.
நீஙகலும் மேனகாவும் செய்தது பார்த்து இருக்கேன்ன்.
சுவை எப்படி இருக்கும்.
ஓவன் வேறு ரிப்பேர்,

Related Posts Plugin for WordPress, Blogger...