பாகற்காய் பொடிமாஸ் - Bittergourd Podimas

இந்த பொடிமாஸில் பாகற்காய் கசப்பாகவே தெரியாது….மிகவும் ருசியாக இருக்கும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பாகற்காய் – 1/4 கிலோ
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி

அரைத்து கொள்ள :
·         கடலைப்பருப்பு – 1/2 கப்
·         காய்ந்த மிளகாய் – 2
·         உப்பு – 1 தே.கரண்டி
·         சோம்பு – 1 தே.கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – 1 தே.கரண்டி

செய்முறை :
·         கடலைப்பருப்பினை குறைந்தது 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். பாகற்காயினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
·         அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அனைத்தும் சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும்.
·         அரைத்த விழுதினை இட்லியினை தட்டில் உருண்டைகளாக பிடித்து வேகவிடவும்.
·         கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பாகற்காய் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
·         பாகற்காய் நன்றாக வதக்கிய பிறகு, வேகவைத்த உருண்டைகளை தூளாக்கி அதில் சேர்க்கவும்.
·         இதனை 5 நிமிடங்கள் நன்றாக சேர்த்து கிளறவும். சுவையான பாகற்காய் பொடிமாஸ் ரெடி.

25 comments:

Cool Lassi(e) said...

Wow. This looks fabulous! Never seen anything like this before either. Mixing bitter gourd with gram and masala is novel!

Menaga Sathia said...

சூப்பர் பொடிமாஸ்,மிக அருமையாக இருக்கு...

Chitra said...

பாகற்காய் உசிலி...... சூப்பர்ங்க!

Nithu Bala said...

roombha nalla recipe..delicious..

Unknown said...

Pavakai podimas excellent,iam not a gr8 fan of pavakai.but seeing ur pavakai recipe , i really love it.

vanathy said...

Geetha, wow! looking yummy.

எல் கே said...

பாகற்காய் எனக்குப் பிடிக்காது அதனால தட்ட சொல்லிகிறேன்

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கூல்...நன்றி மேனகா...நன்றி சித்ரா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிது...நன்றி ப்ரேமலதா...நன்றி வானதி...

Asiya Omar said...

பாகற்காய் பொடிமாஸ் சூப்பர்.அப்படியே சாப்பிடலாம் போல.

Kanchana Radhakrishnan said...

super Geetha.

Unknown said...

பாகற்காய்ன்னா ரொம்ப பிடிக்கும்

நன்றிங்கோ ...

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமா இருக்கு கட்டாயம் செய்து பார்கிறேன்.

ஸாதிகா said...

அட..வித்த்யாஸமாக இருக்கே.இந்த வகையில் செய்தால் கசப்பே தெரியாது

ஸாதிகா said...

கீதா ஆச்சல் உங்கள் பொறுமைக்கு ஒரு ஷொட்டு.பாகற்காயை இத்தனை பொடியாக,நேர்த்தியாக நறுக்கி இருக்கின்றீர்களே!

Priya Suresh said...

Naanum Mano auntyoda kuripai bookmark panni irrunthen, podimas supera irruku..

Niloufer Riyaz said...

super recipe, ithu varaikum pagarkayis seithathillai

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கஞ்சனா....நன்றி ஆசியா அக்கா...நன்றி ஜமால் அண்ணா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாரு அக்கா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

//அட..வித்த்யாஸமாக இருக்கே.இந்த வகையில் செய்தால் கசப்பே தெரியாது//
ஆமாம் ஸாதிகா அக்கா...இந்த முறையில் செய்தால் கசப்பே தெரியாது

//கீதா ஆச்சல் உங்கள் பொறுமைக்கு ஒரு ஷொட்டு.பாகற்காயை இத்தனை பொடியாக,நேர்த்தியாக நறுக்கி இருக்கின்றீர்களே//
தங்களுடைய கருத்துக்கும் பாரட்டிற்கும் மிகவும் நன்றி ஸாதிகா அக்கா,,,

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...ஆமாம் படிக்கும் பொழுதே அருமையாக இருந்தது..அதான் உடனே செய்துவிட்டேன்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலோஃபர்...

Mahi said...

வித்யாசமா இருக்கு கீதா.போட்டோஸ் நல்லாருக்கு.:)

Pavithra Elangovan said...

Interesting recipe dear... looks so yummy..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி....நன்றி பவித்ரா...

Related Posts Plugin for WordPress, Blogger...