தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா?????

பெரும்பாலும் பலர் வீட்டில் வடகம் போட்டு குழம்பு தாளிக்க பயன்படுத்துவோம். அப்படி தாளிக்கு குழம்பு, வடக துவையல் போன்றவை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

வடகத்தில், வெங்காயம், பூண்டு, கடுகு, வெந்தயம், சீரகம், உப்பு, மஞ்சள் தூள் , விளக்கு எண்ணெய் போன்ற பொருட்கள் எல்லாம் சேர்த்து செய்யவார்கள்.

வடகத்தினை நன்றாக வெயிலில் காயவைத்து செய்தால் குறைந்தது 3 – 4 வருடங்கள் வரை கெடாது. இதில் தான் எனக்கு ஒரு பெரிய டவுட்…அப்படி என்றால் இதுவும் ஒருவகை பிராஸட்டு உணவுபொருள் தானே….

இப்படி செய்யும் வடகம் உடலிற்கு நல்லதா????…

இதனை சாப்பிடுவதால் Blood Pressure ஏறுமா???

சக்கரை அளவிற்கும் இதற்கும் சம்மந்தம் உண்டா?? ஏன் என்றால் இதனை போட்டு தாளித்து செய்யும் மீன் குழம்பு, கார குழம்பு அல்லது வேறு எதாவது செய்து சாப்பிட்டால்  சக்கரை அளவு கூடுதலாக காட்டுகின்றது.....ஒரு வேளை குழம்பில் புளி சேர்பதால் அப்படி காட்டுதோ என்று பார்த்தால்....புளி காய்ச்சல் அல்லது ரசம் சாப்பிடும் பொழுது அப்படி சக்கரை அளவு அதிகரிப்பதில்லை...இது எதனால்...தெரிந்தால் சொல்லுங்கள்...

இதனை சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா??

இதனை பற்றிய தகவல்கள் அறிய நெட்டில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை…
தெரிந்தவர்கள் பதில் சொன்னால் மிகவும் பயன் பெறுவேன்….நன்றி…

உங்கள் அனைவருடைய பதிலுக்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்…நன்றி.

47 comments:

kousalya raj said...

enakkum athe doubt than. ungalukku varum pathilai vaith nanum therinthu kolkiren..nanri

எல் கே said...

enakum teriyala

சசிகுமார் said...

இது நல்லா இருக்கே, இது போல விஷயங்கள எங்களுக்கு நாங்க உங்கள் கிட்ட கேப்போம், இப்ப நீங்களே இது போல கேட்டால் நாங்க எங்க போறது.
சீக்கிரம் தெரிஞ்சிகிட்டு ஒரு பதிவ போடுங்க

Unknown said...

இப்படி ஒரு பீதியை கிளப்பி விட்டுட்டீங்களே

நானும் விசாரிக்கிறேன் - தகவல்கள் வந்த பின் ஒரு பதிவு போட்டு சொல்லிடுங்க

Aruna Manikandan said...

I don't know about it, but love the taste of this in kootu

சாருஸ்ரீராஜ் said...

என்ன கீதா இந்த வருடம் தான் முதன் முதலாக தனியா வடவம் போட்டு வச்சு இருக்கிறேன் , இப்படி ஒரு கேள்வி , பதில் எல்லாம் நமக்கு தெரியாது , வடவ துவையிலை சூடா சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட பிடிக்கும். ஹி ஹி ஹி......

Chitra said...

preservatives இல்லாமல் செய்யப்படும் ஹோம்-made வடகம் - நல்லதுதான் என்று வீட்டில் சொல்கிறார்கள்.... நன்கு காய வைப்பதால் தான், அது நீண்ட நாட்களுக்கு வருகிறது. (like sun-dried food items) சின்ன வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்தது..... ஆனால், நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் நோய்களுக்கும் வடகத்துக்கும் உள்ள effect என்ன வென்று சரியாக தெரியவில்லை.

http://www.kamalascorner.com/2008/04/karamani-cow-gram-kuzhambu.html (in the comments: yu have the detailed recipe.... it does not have even baking soda.)

ஸாதிகா said...

கீதா ஆச்சல்,முதலில் இந்த வடகம் செய்வது எப்படி என்ற ரெசிப்பியப்போடுங்கள் தயவு செய்து.எனது தெலுங்கு பேசும் நண்பி ஒருவர் முன்பு ஒருமுறை இந்த வடகம் தந்தார்.இதனை சேர்ப்பதால் வித்தியாசமான நறுமணம் கிடைப்பது மட்டுமல்லாமல்,வித்தியாசமான டேஸ்ட்டும் கிடைக்கும்.தினமும் ஒரே மாதிரி கூட்டும்,குழம்பும் சாப்பிடுவதற்கு அப்பபோ இந்த வடகம் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

Priya Suresh said...

Naan ithu madhri yosikave illai, nalla questions, eagerly waiting for the replies..

Anonymous said...

இதுவும் ஒரு வகை processed உணவு பொருள் தான். ஆனால் எவ்வாறு process பண்ணுகிறோம் என்பதும் இருகிறது. இதை நாம் process பண்ண இதில் உள்ள நீரை வெயிலில் வைத்து உலர்த்தி விடுகிறோம். நீர் இருந்தால் தான் ஒரு பொருள் சீக்கிரம் கெடும். ஊறுகாய் ஒரு நல்ல உதாரணம். ஊறுகாயில் நீர் உள்ளது. அதனால் அது கெடாமல் இருக்க நிறைய உப்பு போடுகிறோம். அதனால் அதை அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. வேதியியல் பொருட்களான பொட்டாசியம் சார்பேட், மோனோசோடியம் க்ளூட்டமேட்( அஜினோமோட்டோ ), xanthan gum, போன்றவையே அதிகம் தீங்கு. இவை மேற்கத்திய உணவு வகைகளை செயற்கையாக பதப்படுத்த பயன்படுத்துகிறார்கள். வடகம் இயற்கையாக பதப்படுத்தப்பட்ட ஒன்று.
நம் பாரம்பரிய processed உணவை பாட்டிகள் சொன்னபடி பயன்படுத்தினால் எல்லாமே நன்மை. எதுவுமே அதிகமானால் அமிர்தமும் நஞ்சு.

Life is beautiful !!! said...

Geetha, processed foodkum nama use panra vadagathukum samantham illai. Vadagam udambuku nallathanu keta, it depends. If lots of salt is used for preserving then people with BP should avoid it. Diabetes irukaravanga sapidalam aana ennaila porikrathungrathunala eppovavathu sapidalam. Mathapadi normal people can take more often. Vadagathula ulla ella ingredientsum medicinal value irukarathu. So it gud for digestion and so on. Ella unavume nallathutha, alavoda irukarathu varaikum.

Niloufer Riyaz said...

interestin Q, will surely ponder about this

GEETHA ACHAL said...

நன்றி கௌசல்யா...கண்டிப்பாக இந்த கேள்விக்கு யாரவது பதில் கொடுப்பாங்க...நானும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றேன்....நன்றி....

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்...

GEETHA ACHAL said...

//இது நல்லா இருக்கே, இது போல விஷயங்கள எங்களுக்கு நாங்க உங்கள் கிட்ட கேப்போம், இப்ப நீங்களே இது போல கேட்டால் நாங்க எங்க போறது.
சீக்கிரம் தெரிஞ்சிகிட்டு ஒரு பதிவ போடுங்க//கண்டிப்பாக தெரிந்துவுடன் பதிவு போட்டுவிடுகிறேன்...மிகவும் நன்றி சசி...

GEETHA ACHAL said...

//இப்படி ஒரு பீதியை கிளப்பி விட்டுட்டீங்களே

நானும் விசாரிக்கிறேன் - தகவல்கள் வந்த பின் ஒரு பதிவு போட்டு சொல்லிடுங்க//
நீங்களும் விசாரித்து சொல்லுங்கள் அண்ணா......கண்டிப்பாக தகவல்கள் சேர்த்த பிறகு ஒரு பதிவு போட்டுவிடுகிறேன்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அருணா...நீங்கள் சொல்வது உண்மை தான்...வடகத்தினை சுவை...சுவையோ சுவை தான்...

ஜெயந்தி said...

வடகம் எந்த செயற்கை பொருளும் சேர்த்து செய்வதில்லை. இயற்கை பொருட்களும் நன்கு வெயிலில் காய வைக்கப்படுகிறது. அதனால் இதில் கெடுதல் எதுவும் இருக்காது. ஷுகர் கூடுவது பற்றி எனக்கு தெரியவில்லை.

ஹுஸைனம்மா said...

இயற்கைப் பொருட்களை வைத்து ப்ராஸஸ் செய்யப்படுவதால் கேடு இல்லை.

இதை நாம் அதிகம் பொறித்துச் சாப்பிடுவதால் பி.பி. சர்க்கரை, உடல் எடை கூடலாம்.

ப்ராஸஸிங்கிற்கு உப்பு அதிகம் சேர்ப்பதால் நிச்சயம் அதன்மூலம் பாதிப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். எண்ணெயும் அதிகமானால் அப்படியே.

என் ஊகங்களே இவை.

Menaga Sathia said...

I'm also waiting for ur reply...

Thenammai Lakshmanan said...

எங்கள் சமயலில் வடகம் பயன் படுத்துவதில்லை தாளிப்பதற்கு எனவே எனக்கு இது பற்றீத் தெரியவில்லை கீதா..

Suganya said...

Even I am not sure abt it. But if it is so... I would be very happy, as we use it quit often in our cooking.

தெய்வசுகந்தி said...

நானும் வடகம் பயன்படுத்துவதில்லை. அதனால தெரியல. வழக்கம் போல நீங்களே சொல்லீருங்க!!!!!1

athira said...

கீதா ஆச்சல்.... உங்கள் வடகப் படம் என் கண்ணைப் பறிக்குது.

வடகத்துக்கு பிளி சேர்ப்பதுண்டோ? வெங்காயவடகம், வாழைப்பூ வடகம், வேப்பம்பூ வடகம் இவை எல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனக்கும் மிகவும் பிடிக்கும்.... இவ்வளவும்தான் எனக்கு தெரியும். இதற்கு புளி சேர்ப்பதில்லை, உப்பும் சேர்க்காமல் செய்யலாம்.

Mahi said...

நான் இதுவரை இந்த வடகம் கேள்விப்பட்டதுடன் சரி.எண்ணெயில் பொரித்தால் நிச்சயமா உடம்புக்கு கெடுதல் தானே கீதா?? :)

ஜெய்லானி said...

எனக்கு லீவு நாள் வந்தாதான் மூளை வேலை செய்யும் இப்ப கேட்டா என்ன சொல்றது . ரெண்டு நாள் போகட்டும் ஆராய்ச்சி செஞ்சி ஒரு பதிவா போட்டுடறேன்....

GEETHA ACHAL said...

//என்ன கீதா இந்த வருடம் தான் முதன் முதலாக தனியா வடவம் போட்டு வச்சு இருக்கிறேன் , இப்படி ஒரு கேள்வி , பதில் எல்லாம் நமக்கு தெரியாது , வடவ துவையிலை சூடா சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட பிடிக்கும்.// ஆஹா...நீங்கள் முதல் முதலாக தனியா வடகம் போட்டு இருக்கின்றிங்களா...வாழ்த்துகள்...நீங்கள் சொல்வது போல வடகதுவையினை சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பரோ சூப்பர்ப்...

GEETHA ACHAL said...

//preservatives இல்லாமல் செய்யப்படும் ஹோம்-made வடகம் - நல்லதுதான் என்று வீட்டில் சொல்கிறார்கள்....
நன்கு காய வைப்பதால் தான், அது நீண்ட நாட்களுக்கு வருகிறது. (like sun-dried food items) சின்ன வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்தது.....
ஆனால், நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் நோய்களுக்கும் வடகத்துக்கும் உள்ள effect என்ன வென்று சரியாக தெரியவில்லை.//

எனக்கு அதனை பற்றி சரியாக தெரியவில்லை...அதனாலே தான் இந்த பதிவு...

தனி தனியாக பொருட்களை காயவைத்தால் பிரச்சைனை ஒன்றும் கிடையாது...ஆனால்
நாம் வடகத்திற்கு அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒன்றாக கலந்து பின் அதனை
காயவைத்து ...கடைசியில் விளக்கு எண்ணெய் ஊற்றி செய்கிறோம்...அதில் தான் எனக்கு
டவுட்....

தங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா....

GEETHA ACHAL said...

//கீதா ஆச்சல்,முதலில் இந்த வடகம் செய்வது எப்படி என்ற ரெசிப்பியப்போடுங்கள் தயவு
செய்து.எனது தெலுங்கு பேசும் நண்பி ஒருவர் முன்பு ஒருமுறை இந்த வடகம் தந்தார்.இதனை சேர்ப்பதால் வித்தியாசமான நறுமணம் கிடைப்பது
மட்டுமல்லாமல்,வித்தியாசமான டேஸ்ட்டும் கிடைக்கும்.தினமும் ஒரே மாதிரி கூட்டும்,
குழம்பும் சாப்பிடுவதற்கு அப்பபோ இந்த வடகம் சேர்த்தால் நன்றாக இருக்கும்.//

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...

கண்டிப்பாக கூடிய சீக்கிரத்தில் தாளிக்கும் வடகம் செய்வது எப்படி என்ற குறிப்பினை போடுகிறேன்....

வடகம் சேர்த்தால் மிகவும் ரூசியாக இருக்கும்...வித்தியசாமாக இருக்கும்...

GEETHA ACHAL said...

//Naan ithu madhri yosikave illai, nalla questions, eagerly waiting for the replies..//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

இதுவும் ஒரு வகை processed உணவு பொருள் தான். ஆனால் எவ்வாறு process பண்ணுகிறோம் என்பதும் இருகிறது.
இதை நாம் process பண்ண இதில் உள்ள நீரை வெயிலில் வைத்து உலர்த்தி விடுகிறோம். நீர் இருந்தால் தான் ஒரு பொருள் சீக்கிரம் கெடும்.
ஊறுகாய் ஒரு நல்ல உதாரணம். ஊறுகாயில் நீர் உள்ளது. அதனால் அது கெடாமல் இருக்க நிறைய உப்பு போடுகிறோம்.
அதனால் அதை அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல.
வேதியியல் பொருட்களான பொட்டாசியம் சார்பேட், மோனோசோடியம் க்ளூட்டமேட்( அஜினோமோட்டோ ), xanthan gum, போன்றவையே அதிகம் தீங்கு.
இவை மேற்கத்திய உணவு வகைகளை செயற்கையாக பதப்படுத்த பயன்படுத்துகிறார்கள். வடகம் இயற்கையாக பதப்படுத்தப்பட்ட ஒன்று.
நம் பாரம்பரிய processed உணவை பாட்டிகள் சொன்னபடி பயன்படுத்தினால் எல்லாமே நன்மை. எதுவுமே அதிகமானால் அமிர்தமும் நஞ்சு//

தங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி அனானி...நீங்கள் சொல்வது உண்மை தான்....

தண்ணீர் உள்ள பொருட்களில்(ஊறுகாய்) தான் பிரச்சனையா???

GEETHA ACHAL said...

//Geetha, processed foodkum nama use panra vadagathukum samantham illai. // இதுவும் ஒரு வகை பிரஸாடு பொருள் தானே...

//Vadagam udambuku nallathanu keta, it depends. If lots of salt is used for preserving then people with BP should avoid it.
Diabetes irukaravanga sapidalam aana ennaila porikrathungrathunala eppovavathu sapidalam. Mathapadi normal people can take more often. //
தங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி மஞ்சு...

//Vadagathula ulla ella ingredientsum medicinal value irukarathu. So it gud for digestion and so on.
Ella unavume nallathutha, alavoda irukarathu varaikum.// மிகவும் சரி...வடகத்தில் சேர்க்கும் எல்லா பொருட்களுமே
மருத்துவ குணம் நிறைந்தவை...

ஆனால் அனைத்து ஒன்றாக சேருக் பொழுது அதே மருத்துவ குணங்கள் இருக்குமா...போன்ற பல
வினாகளுக்கு விடை சரியாக தெரியவில்லை...

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி நிலோபர்...

GEETHA ACHAL said...

//வடகம் எந்த செயற்கை பொருளும் சேர்த்து செய்வதில்லை. இயற்கை பொருட்களும் நன்கு வெயிலில் காய வைக்கப்படுகிறது.
அதனால் இதில் கெடுதல் எதுவும் இருக்காது. ஷுகர் கூடுவது பற்றி எனக்கு தெரியவில்லை.//

உண்மை தான்...வடகத்தில் எந்த செயற்கை பொருட்களும் சேர்ப்பதில்லை...ஆனால் ஏன சக்கரை அளவு கூடுகின்றது என்று தெரியவில்லை...

வடகம் போட்டு தாளிக்கும் பொழுது இப்படி காட்டுகின்றது.....தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெயந்தி...

GEETHA ACHAL said...

//இயற்கைப் பொருட்களை வைத்து ப்ராஸஸ் செய்யப்படுவதால் கேடு இல்லை.// உண்மை தான்...ஆனால் எப்படி பிரஸாஸ் செய்கிறோம் என்று இருக்கின்றது அல்லவா...
அதனால் தான் இப்படி ஆராய்ச்சி...

//இதை நாம் அதிகம் பொறித்துச் சாப்பிடுவதால் பி.பி. சர்க்கரை, உடல் எடை கூடலாம்.// இது மிகவும் உண்மை...இதனை சாப்பிடுவதால் கண்டிப்பாக எடை கூட தான் செய்யும்....

//ப்ராஸஸிங்கிற்கு உப்பு அதிகம் சேர்ப்பதால் நிச்சயம் அதன்மூலம் பாதிப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். எண்ணெயும் அதிகமானால் அப்படியே.// ஆனால் அப்படி
பிரஸாஸிஙகு செய்தால் தானே வடகம் நன்றாக இருக்கும்....

இதன மூலம் ஒன்று மட்டும் நன்றாக தெரிகின்றது...வடகம் தாளித்து செய்யும் உணவுகள் எந்தளவுக்கு சுவையாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு பிரச்சனையும் கூடவே இருக்கு....

//என் ஊகங்களே இவை//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஹுஸைனம்மா...

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கு நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

//எங்கள் சமயலில் வடகம் பயன் படுத்துவதில்லை தாளிப்பதற்கு எனவே எனக்கு இது பற்றீத் தெரியவில்லை கீதா.//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தேன் அக்கா...

GEETHA ACHAL said...

//ven I am not sure abt it. But if it is so... I would be very happy, as we use it quit often in our cooking.// தங்களை போல நானும் பலருடைய பதிலுக்காக எதிர்காத்து கொண்டு இருக்கின்றேன்...வருகைக்கு நன்றி சுகன்யா...

GEETHA ACHAL said...

//நானும் வடகம் பயன்படுத்துவதில்லை. அதனால தெரியல. வழக்கம் போல நீங்களே சொல்லீருங்க!!!!!//தங்கள் வருகைக்கு நன்றி சுகந்தி...

Asiya Omar said...

நான் உபயோகித்தது கூட இல்லை,ஆனால் பார்க்க ஆசையாக இருக்கு.

Asiya Omar said...

நான் உபயோகித்தது கூட இல்லை,ஆனால் பார்க்க ஆசையாக இருக்கு.

மனோ சாமிநாதன் said...

கீதா! என் பாட்டி காலத்திலிருந்து, அம்மா, மாமியாரிலிருந்து இந்த வடகம் தயாரித்து சமையலில் உபயோகிக்கும் பழக்கம் இருக்கிறது. நானும் இதை சமையலில் அடிக்கடி துவையல், சட்னி செய்யவும் சில சமயம் தாளிதம் செய்யவும் உபயோகிக்கிறேன். இதன் செய்முறையைப் பொறுத்து இதன் மணம் அமையும். பல வருடங்கள் கெடாத அளவு இதன் செய்முறை பக்குவமானது. நானே இதை என் தளத்தில் போடலாமென்றுதான் இருக்கிறேன். முழுக்க முழுக்க சுத்தமான விளக்கெண்ணெயில் வீட்டிலிருக்கும் மருத்துவ குணங்கள் கொண்ட வெந்தயம், சீரகம், மற்றும் மஞ்சள், பூண்டு, சின்ன வெங்காயம் கலந்து நல்ல வெய்யிலில் உலர்த்தி தயாரிக்கப்படும் கருவடகத்தினால் உடல் நலம் கெட வாய்ப்பில்லை. அதுவும் சர்க்கரை அதிகரிக்க வாய்ப்பே இல்லை. வடகம் உபயோகித்து செய்யப்படும் குழம்பு அதிக சுவையும் மணமும் உடையது. அதனால் வழக்கத்தை விட சாதம் அதிகமாக இறங்கினால் நீங்கள் சொல்வது மாதிரி சர்க்கரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

Pavithra Elangovan said...

Nice topic.. it too love this vadagam.. will let me know them whether it is good for health or not from you.

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா...நன்றி பவித்ரா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மனோ ஆன்டி...உண்மை தான்...ஆனால் எப்பொழுதும் சாப்பிடுவது போல வடகம் போட்டு தாளிக்கும் பொழுதும் சாப்பிடுகிறோம்...ஆனால் வடகம் சேர்த்து சாப்பிடும் பொழுது மட்டுமே வீட்டில் உள்ள அனைவருக்கும் இப்படி காட்டுகின்றது...எதனால் என்று தெரியவில்லை...

Jaleela Kamal said...

தாளிக்கும் வட்கம் நல்ல தா கெட்டதான்னு தெரியல.

ஆனால் இதை கட்டி பருப்பு, ரசம் சாதத்துக்கு அப்பளம் போல் பொரித்து சாப்பிடுவோம்

அதுவும் இல்லமல் என் பெரிமாவும், என் நாத்தனாரும் வடகம் தயாரித்து பாக்கெட் போட்டு ரொம்ப வருடமாக கடைகளுக்கு சப்பளை செய்தாரகள்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா...ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான்...வடகம் தாளிக்கும் சமையல் எல்லாமே மிகவும் ருசியாக இருக்கும்...

Related Posts Plugin for WordPress, Blogger...