செட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய் மசாலா - Chetinad Stuffed Brinjal Masalaசமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கத்திரிக்காய் – 1/4 கிலோ
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய் – 2
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பூண்டு – 3 பல்
·         புளி கரைசல் – 2 மேஜை கரண்டி
முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         சோம்பு – 1/2 தே.கரண்டி

கத்திரிக்காயில் ஸ்டஃபிங் செய்ய :
·         தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 3
·         கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்கடலை – தலா 1 மேஜை கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

கடைசியில் சேர்க்க :
·         கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளி + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக பிளந்து வைக்கவும்.பூண்டினை நசுக்கி கொள்ளவும்.
·         கத்திரிக்காயினை நான்காக பிளந்து வைக்கவும். கடலைபருப்பு + வேர்கடலை + உளுத்தம்பருப்பினை வறுத்து வைக்கவும்.
·         ஸ்டஃபிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இதனை கத்திரிக்காயில் ஸ்டஃப் செய்யவும்.
·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + சோம்பு தாளித்து, நசுக்கிய பூண்டினை போட்டு வதக்கவும்.      அதன்பின்னர், வெங்காயம் + கருவேப்பில்லை +பச்சைமிளகாய் + தக்காளியினை போட்டு வதக்கவும்.
·         இத்துடன் தூள் வகைகள் + புளிகரைசல் சேர்த்து 5 – 6 நிமிடங்கள் வேகவிடவும்.
·    பிறகு, ஸ்டஃப் செய்த கத்திரிக்காயினை இதில் சேர்த்து தட்டுபோட்டு முடி வேகவிடவும்.
·         அடிக்கடி கிளறிவிடாமல் ஒன்று அல்லது இருமுறை, மசாலாவினை கத்திரிக்காய் உடையாமல் கிளறினால் போதும்.  
·         கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும். சுவையான கத்திரிக்காய் மசாலா ரெடி. இதனை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

குறிப்பு :
இதில் கடலைபருப்பு + உளுத்தம்பருப்பு + வேர்கடலைக்கு பதிலாக கொள்ளுபொடியினை சேர்த்து கொள்ளலாம்.

38 comments:

Chitra said...

super! எனக்கு அவ்வளவாக பிடிக்காத கத்திரிக்காய் கூட இவ்வளவு நல்லா இருக்குமா என்று சொல்ல வச்சிட்டீங்க......

shriya said...

Nice and detailed recipe. I am gonna try yours this week. thanks for sharing.

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கே!

எல் கே said...

இரண்டு நாட்கள் ஊரில் இல்லை .. இன்று ஆஜர் . பார்க்கவே நல்லா இருக்கு

SUFFIX said...

கத்தரிக்காய்ல புது ரெசிப்பி, சுவையா இருக்கும்னு நினைக்கிறேன். செய்து பார்த்துடணும்.

Shama Nagarajan said...

delicious recipe...just then had this for breakfast...

Niloufer Riyaz said...

parkum pode naa oorugiradu

எம் அப்துல் காதர் said...

கத்திரிகாயை மட்டன் சிக்கன் ரேஞ்சுக்கு பயங்கர லுக்கா வேற போட்டிருக்கீங்களா, சான்சேயில்ல,, சாப்ட்டுட வேண்டியதுதான். ஒரு கிளாஸ் சில்லுன்னு மோர் கூடவே வச்சுடுங்க மேடம் ப்ளீஸ்!

Priya said...

ஆஹா... படங்களை பார்க்கும் போதே சூப்பரா இருக்கு. குறிப்பும் மிக தெளிவாக இருக்கு.தேக்ங்ஸ்!

GEETHA ACHAL said...

Chitra said...
//super! எனக்கு அவ்வளவாக பிடிக்காத கத்திரிக்காய் கூட இவ்வளவு நல்லா இருக்குமா என்று சொல்ல வச்சிட்டீங்க....//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...இன்னும் அருமையாக இருக்கும்...எல்லாம் எங்க அம்மா ஸ்பெஷல்...அம்மா வந்து இருந்தப்போ செய்தது...படம் எல்லாம் எடுத்து குறைந்து 8 - 9 மாதம் ஆகின்றது...ஆனா இப்போ தான் டைம் கிடைச்சுது ப்ளாகில் போட....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்ரேயா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நல்லா இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...

GEETHA ACHAL said...

LK said...
//இரண்டு நாட்கள் ஊரில் இல்லை .. இன்று ஆஜர் . பார்க்கவே நல்லா இருக்கு//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்...குழந்தை எப்படி இருக்கின்றாள்..

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு கீதா...

Menaga Sathia said...

super dish!! i love chettinad version very much...

athira said...

சூப்பராக இருக்கு. பார்க்கவே சாப்பிடத் தூண்டுகிறதே....

GEETHA ACHAL said...

SUFFIX said...
//கத்தரிக்காய்ல புது ரெசிப்பி, சுவையா இருக்கும்னு நினைக்கிறேன். செய்து பார்த்துடணும்// கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஷாமா...நன்றி நிலோஃபர்....

GEETHA ACHAL said...

எம் அப்துல் காதர் said...
//கத்திரிகாயை மட்டன் சிக்கன் ரேஞ்சுக்கு பயங்கர லுக்கா வேற போட்டிருக்கீங்களா, சான்சேயில்ல,, சாப்ட்டுட வேண்டியதுதான். ஒரு கிளாஸ் சில்லுன்னு மோர் கூடவே வச்சுடுங்க மேடம் ப்ளீஸ்!//கண்டிப்பாக மோர் வச்சுடுச்சா போச்சு....தங்கள் கருத்துக்கும் பாராட்டிற்கும் மிகவும் நன்றி அப்துல்...

GEETHA ACHAL said...

Priya said...
//ஆஹா... படங்களை பார்க்கும் போதே சூப்பரா இருக்கு. குறிப்பும் மிக தெளிவாக இருக்கு.தேக்ங்ஸ்!//தங்கள் கருத்துக்கும் மிகவும் நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாரு அக்கா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்...

தூயவனின் அடிமை said...

சகோதரி கத்திரிக்காய் மசாலா அருமையாக உள்ளது.

Mythreyi Dilip said...

I luv chettinad recipes and this looks absolutley tempting dear, i have lots of brinjal left in the fridge. I'm gonna try ur recipe soon and will let u know how did they turn out:)

Mahi said...

பெரிய கத்தரிக்காயிலும் செய்யலாமா கீதா? அருமையா இருக்கு.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி இளம்தூயவன்....

GEETHA ACHAL said...

Mythreyi Dilip said...
//I luv chettinad recipes and this looks absolutley tempting dear, i have lots of brinjal left in the fridge. I'm gonna try ur recipe soon and will let u know how did they turn out:)//கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க மைத்ரேயி....தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி...

GEETHA ACHAL said...

Mahi said...
//பெரிய கத்தரிக்காயிலும் செய்யலாமா கீதா? அருமையா இருக்கு.//இங்கு இந்தியன் கடைகளில் தானே கத்திரிக்காய் கிடைக்கின்றது...அதான் பெரிய கத்திரிக்காயிலே செய்துவிட்டேன்....மிகவும் அருமையாக இருந்தது....நீங்களும் செய்து பாருங்கள் அருமையான இருக்கின்றது...

Priya Suresh said...

Superana dish, chettinad samaiyal na naan yeduthu venalum saapiduven, avalo istam..Beautiful curry..

vanathy said...

கீதா, சூப்பர். பார்க்கவே நல்லா இருக்கு.

நேற்று உங்கள் பஜ்ஜி செய்து சாப்பிட்டோம். சுவை அருமை. நன்றி.

Kanchana Radhakrishnan said...

super Geetha

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...பஜ்ஜி பிடித்து இருந்ததா...மிகவும் மகிழ்ச்சி...நன்றிகள் பல....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கஞ்சனா...

Sowmya said...

ஹாய் கீதா இப்போ தான் first டைம் உங்க ப்ளாக்
பார்கிரேன். ரொம்ப சூப்பர் ஆ இருக்கு,கத்திரிக்காய் மசாலா ..

Sowmya said...

ஹாய் கீதா இப்போ தான் first டைம் உங்க ப்ளாக்
பார்கிரேன். ரொம்ப சூப்பர் ஆ இருக்கு,கத்திரிக்காய் மசாலா ..

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சௌமியா...நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...