தனியாவினை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடுபவரா நீங்கள்?????(Coriander Seeds) - Side Dish for Idly and Dosa

தனியாவினை தினமும் உணவில் சாப்பிடுபவரா நீங்கள்?????இது என்ன கேள்வி என்று நினைக்கின்றிங்களா……அப்படி இருந்தால் மேலும் படியுங்க…

தனியாவில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber) காணப்படுகின்றது…அத்துடன் இதில் வைட்டமின் சி,மற்றும் பொட்டஸியம்(Potassium), கல்சியம்(Calcium), மேக்னிஸியம்(Magnesium),Iron போன்ற மினரல்ஸும் அதிக அளவு இருக்கின்றது…

உடலில் சக்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள் இதனை சாப்பிட சக்கரை அளவு குறைக்கபடுகின்றது…

அதே போல, தனியா கொலஸ்டிராலையும்(Cholesterol) குறைக்கின்றது….இது கெட்ட கொலஸ்டிராலினை குறைத்து, நல்ல கொலஸ்டிராலினை அதிகம் செய்கின்றது.


தனியா சாப்பிடுவதால் ஜீரணம் எளிதில் செய்யமுடிகின்றது…

தனியா உணவில் சேர்ப்பதால், இது உணவில் மெர்குரியின்(Mercury) அளவினை குறைக்கின்றது என சில ஆய்வுகளில் கண்டுபிடிக்கபட்டது…

அதே போல Anxiety, Depression போன்றவையினை குறைக்கவும் பெரிதும் உதவுக்கின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றது…

தினமும் நம்முடைய உணவில் தனியா சேர்த்து கொள்வது அவசியமா இல்லையா என்று உங்கள் எல்லோருக்கும் இப்பொழுது தெரிந்து இருக்கும் அல்லவா…    தனியாவினை முழுசாக வாங்கி சிறிது சிறிதாக அரைத்து கொள்வது மிகவும் நல்லது…

சரி…சரி…இப்பொழுது தனியாவினை வைத்து எளிதில் செய்ய கூடிய, சிம்பிள் தனியா சட்னியினை பார்ப்போம்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         தனியா – 1 கப்
·         காய்ந்த மிளகாய் – 10
·         உளுத்தம்பருப்பு + கடலை பருப்பு – 2 மேஜை கரண்டி
·         புளி – நெல்லிக்காய் அளவு
·         தேங்காய் துறுவல் – 1/4 கப்
·         உப்பு – தேவைக்கு
கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு + உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         கருவேப்பில்லை – 3 இலை

செய்முறை :
·     கடாயில் தனியா + காய்ந்தமிளகாய் + உளுத்தம்பருப்பு + கடலைபருப்பினை ஒவ்வொன்றாக போட்டு தனிதனியாக நன்றாக வறுத்து கொள்ளவும்.
·         வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவிட்டு அத்துடன், புளி + தேங்காய் துறுவல் + உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
·         கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, சட்னியில் சேர்க்கவும். -சுவையான சத்தான தனியா சட்னி ரெடி.

24 comments:

Raks said...

This is new to me,with so much dhaniya,chutney sure should taste and smell great!

vanathy said...

கீதா, நிறைய பயனுள்ள தகவல்கள் சொல்லி இருக்கிறீர்கள். நல்ல ரெசிப்பி. அழகான படங்கள்.

Nithu Bala said...

Wonderful info Geetha..Thanks for sharing..Chutney superb..

Life is beautiful !!! said...

Miga arumaiyana post. Nandri. The recipe is very new for me. Thanks a lot for sharing.

Jaleela Kamal said...

தனியா உடம்பிற்கு ரொம்ப நல்லது.

அதில் துவையாலா? எல்லாவகையான குழ்ம்பிற்கும் தனியா சேர்ப்பதல் தால் வயிற்று பிராப்ளம் வராமல் இருக்கும்.

SathyaSridhar said...

Geetha,,nice info abt coriander seeds dear and chutney with soo much dania seeds wooow sure flavourful chutney nalla gama gamannu chutney vaasam irukkum.

கவி அழகன் said...

சத்தியமா நல்லாயிருக்கு

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ராஜி....நன்றி வானதி...

GEETHA ACHAL said...

தங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி நிது...நன்றி மஞ்சு...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலா அக்கா...இது துவையல் இல்லை...இது சட்னி...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சத்யா...நன்றி யாதவன்....

Priya Suresh said...

Super delicious chutney, love coriander seeds much, lovely infos..

Kanchana Radhakrishnan said...

super info.and nice chutney.

Padmajha said...

I made this last week with a few variations though.I totally agree with u on the need for adding coriander seeds in our daily diet but in South Indian cuisine I feel it is automatically incorporated in the menu itself as in sambar/rasam powder etc

Menaga Sathia said...

தனியா பற்றிய தகவலுக்கு நன்றி,அருமை!!

ஜெய்லானி said...

நல்ல தகவல் + சட்னி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...நன்றி கஞ்சனா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி PJ....நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய்லானி...

Shriya said...

Nice informative post. Love this chutney recipe. Do check out our contest in Spicytasty and we would love to see your entry.

Asiya Omar said...

தனியா சட்னி அருமையாக இருக்கு,உங்க கைமணமே தனிதான்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரோயா..கண்டிப்பாக பார்க்கிறேன்...நன்றி...நன்றி ஆசியா அக்கா....

Mani said...

Hi,
Geetha! U r doing a great job.
Really nice recipe.

Preethi Balamurugan said...

Hey Geetha,

This is really a wonderful & healthy recipe. We follow your recipe for most of our cooking. Thanks. By Preethi Bala

Related Posts Plugin for WordPress, Blogger...