அரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu


இது எனது மாமியாரின் ஸ்பெஷல் மீன் குழம்புநீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…..
சமைக்க தேவைப்படும் நேரம் : 25 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         சுத்தம் செய்த மீன் – 1/2 கிலோ
·         தக்காளி - 1
கரைத்து கொள்ள :
·         புளி – 1 எலுமிச்சை அளவு
·         தண்ணீர் – 5 – 6 கப்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 2 மேஜை கரண்டி
·         தனியா தூள் – 1 மேஜை கரண்டி
·         உப்பு தேவையான அளவு

அரைத்து கொள்ள :
·         சின்ன வெங்காயம் – 5
·         தேங்காய் – 2 சிறிய துண்டுகள்
கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         தாளிக்கு வடகம் – 1 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·         புளியினை தண்ணீரில் கரைத்து கொள்ளவும். அத்துடன் தூள் வகைகள் + தக்காளி சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
·         கடாயில் புளி கரைசலினை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
·         தேங்காயினை மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும். அத்துடன் கடைசியில் வெங்காயத்தினை சேர்த்து ஒன்றுபாதியுமாக அரைக்கவும்.
·         அரைத்த விழுதினை கொதித்து கொண்டு இருக்கும் குழம்பில் ஊற்றி மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
·         பிறகு மீன்கள் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.
·         தாளிக்க கொடுத்து பொருட்களை தாளித்து குழம்பில் கடைசியாக சேர்க்கவும். சுவையான மீன் குழம்பு ரெடி.

குறிப்பு :
வடகம் விரும்பாதவர்கள், கடுகு + வெந்தயம் தாளித்து சேர்க்கவும்.

44 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

வாழ்த்துக்கள்

Chitra said...

இப்போதான் மீன் குழம்பு லஞ்ச்க்கு சாப்பிட்டு விட்டு வாரேன். கைமணம் மாறாம வாசித்து வோட்டு போட்டுட்டேன்.... ம்ம்ம்ம்.....

Menaga Sathia said...

குழம்பு பார்க்கவே கலர்புல்லா அருமையாக இருக்கு....

Priya Suresh said...

Meen kuzhambu vasana Paris varaikum adikuthu...yechil uruthu pakkura pothey..

Cool Lassi(e) said...

Umm nice kuzhambhu. Will wait until tomm to taste it. :)

vanathy said...

Geetha, super! It looks like my mom's fish curry.

Unknown said...

Wat is this Geetha,simple meen kuzhambu nu tittle potinga? Asathal meen kuzhambu nu la potu erukanum...Very very tempting...super.

ஹைஷ்126 said...

சூப்பர் குழம்பு. என் பெவரிட்.

வாழ்க வளமுடன்

GEETHA ACHAL said...

நன்றி உலவு.காம்....

GEETHA ACHAL said...

Chitra said...
//இப்போதான் மீன் குழம்பு லஞ்ச்க்கு சாப்பிட்டு விட்டு வாரேன். கைமணம் மாறாம வாசித்து வோட்டு போட்டுட்டேன்.... ம்ம்ம்ம்..//தங்கள் கருத்துக்கும் வோட்டுக்கும் மிகவும் நன்றி சித்ரா...இந்த முறையிலும் செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும்....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா...கலர்புல்லாக மட்டும் இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

Priya said...
//Meen kuzhambu vasana Paris varaikum adikuthu...yechil uruthu pakkura pothey..//தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...எனக்கு மிகவும் பிடித்த குழம்பு...

GEETHA ACHAL said...

Cool Lassi(e) said...
//Umm nice kuzhambhu. Will wait until tomm to taste it. :)//கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க கூல்...மிகவும் அருமையாக இருக்கும்...

எல் கே said...

present

ஸாதிகா said...

வித்தியாசமாக உள்ளது.

ஜெய்லானி said...

மீன் குழம்பாஆஆஆ. எனக்கும் பிடிக்குமே..

சசிகுமார் said...

அக்கா உண்மையா சொல்றேன் படத்த பார்த்த உடனே சாப்பிட தோணுது, உங்க கணவர் கொடுத்து வைத்திருக்கிறார் வேறெதுவும் சொல்ல தெரியவில்லை

Niloufer Riyaz said...

kulambu parkum pode arumay, naa oorigiradu!! nichayam seiduparpean

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...உங்கள் விட்டிலுமா இதே மாதிரி தான் செய்வாங்களா...அருமை...

GEETHA ACHAL said...

Premalatha Aravindhan said...
//Wat is this Geetha,simple meen kuzhambu nu tittle potinga? Asathal meen kuzhambu nu la potu erukanum...Very very tempting...super.//உண்மை தான் ப்ரேமலதா ..இதனை அசத்தல் மீன் குழம்பு தான் போட்டுஇருக்கனும்...ஆனால் எங்க வீட்டில் செய்யும் மீன் குழம்பினைவிட இந்த முறையில் செய்யும் மீன் குழம்பு ரொம்ப ஈஸியாக இருப்பதால் இதனை சிம்பிள் என்று எழுதி இருக்கின்றேன்...உங்களுக்காக பெயரினை மாற்றிவிடுகிறேன்...

GEETHA ACHAL said...

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஹைஷ் அங்கிள்...

GEETHA ACHAL said...

தங்களுடைய தொடர் வருகைக்கு மிகவும் நன்றி கார்த்திக்....

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கு நன்றி ஸாதிகா அக்கா,,,

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...

GEETHA ACHAL said...

சசிகுமார் said...
//அக்கா உண்மையா சொல்றேன் படத்த பார்த்த உடனே சாப்பிட தோணுது//, நீங்க வேற சசி...இது எல்லாம் எப்பவாது தான் சமைப்பது...சில போட்டோக்களை எடுத்து 8 - 9 மாதம் கூட ஆச்சு...இப்ப தான் பதிவே போடுகிறேன்...எங்க வீட்டில் விருந்தாளி,பண்டிகை என வரும் சமயமே கலக்கல் சமையல்..மற்றபடி வெரி வெரி நார்மல் டயட் சமையல் தான்..//உங்க கணவர் கொடுத்து வைத்திருக்கிறார் வேறெதுவும் சொல்ல தெரியவில்லை//இருந்தாலும் நீங்கள் சொல்வது உண்மை..யாருக்கு இப்படி டயட் சமையலினையும் விதவிதமாக சாப்பிட கொடுத்து வைத்து இருக்கின்றது.....

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி நிலோஃபர்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

athira said...

சூப்பர், பார்க்கவே சாப்பிடச் சொல்லுது.

வால்பையன் said...

எல்லாம் ஒகே!
சிம்பிள் மீன் எங்கே கிடைக்கும்!?

dsdsds said...

Oh geetha this is so simple. It is just the same way except i start with the tempering and do not add the coconut! Good one.. will try next time

Asiya Omar said...

அருமையாக இருக்கு.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா...நன்றி ஆசியா அக்கா...

GEETHA ACHAL said...

வால்பையன் said...
//எல்லாம் ஒகே!
சிம்பிள் மீன் எங்கே கிடைக்கும்!?//என்ன வால்பையன் உங்களுக்கு தெரியாதா என்ன...என்னை போய் சிம்பிள் மீன் எங்கே கிடைக்கும் என்று கேட்கின்றிங்க...எல்லாருக்குமே தெரியுமே... சிம்பிள் மீனும், மீன் கடையில் தான் கிடைக்கும்.....கரெக்டா வால்பையா..

GEETHA ACHAL said...

Hema said...
//Oh geetha this is so simple. It is just the same way except i start with the tempering and do not add the coconut! Good one.. will try next time//கண்டிப்பாக செய்து பாருங்கள் ஹேமா...அருமையாக இருக்கும்...கருத்துக்கு நன்றி...

ஸ்வர்ணரேக்கா said...

Hi Geetha... ur receipe looks very colorful...

GEETHA ACHAL said...

ஸ்வர்ணா எப்படி இருக்கின்றிங்க...ப்ளாக் பக்கம் அடிக்கடி வாங்க...வீட்டில் அனைவரும் நலமா...தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி...

P.K.வேணுகோபாலன் said...

Padikkumpothey Naakkil Echil Ooruthey ....................

GEETHA ACHAL said...

நன்றி வேனுகோபாலன்...

Anitha said...

very nice..ennai ponra kallori maanavigalukum ungal samayalai parkum pothu samaika vendum endru aasai varukirathu.....recipeku miha nandri...unga veetla meen kulambu epdi vaipeenga athaium konjam post pannungale......

Anitha said...

very yummy.....unga pathivinai paarkum pothu ennai ponra maanavigalukum samaika aasai thana varukinrathu........vaalthukal....apram unga veetla epdi meen kulambu vaipeenga....athaium konjam post pannungalen......

Anonymous said...

sema super sema colour sapidanum pola thonuthu

Jafi said...

kuzhambu pakave super ah iruku shhhh ahhhhhhhhhhhh

vani said...

just now i watched your blog.
meen kuzhambu color pakkave nalla irukku.
nanum try panni pakkuren.

Unknown said...

Today morning i prepared mean kulambu,as per ur instruction,very nice taste,thank you so much by karthy from maldives

yawanika said...

Thank you Geetha for this awesome recipe. I made this just 3 days ago, and due to popular demand from family, am repeating it today again. The only small change I did was adding coconut milk instead of coconut to the paste.

Related Posts Plugin for WordPress, Blogger...