என் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள் - Kitchen Thirukural

எனக்கு பிடித்த சில கிச்சன் குறள்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்நீங்கள் படிக்க சில இங்கே….(அடுத்த பதிவில் என்ன....... பஜ்ஜி குறிப்பினை போடலாமா...)
                            
பஜ்ஜி இனிது போண்டா இனிதென்பர் தம் வீட்டில்
சொஜ்ஜி சாப்பிடாதவர்.

ஆவியில் வெந்த உணவு நலமாகும் ஆகாதே
ஆயிலில் பொரித்த உணவு.

அன்னை மகளுக்காற்றும் உதவி சமையல்
அறுசுவை கற்று தரல்

செய்தபொழுதிற் பெரிதுவக்கும் அவ்வுணவை
சிறந்ததெனக் கேட்ட தாய்.

சுவையும் மணமும் உடைத்தாயின் சமையல்
பசியும் தீர்க்கும் அது.

காபி என்ப ஏனை டிபன்னென்ப அவ்விரண்டும்
காலை நேரத்தில் தேவைநமக்கு.

அரிசி முதல் மளிகையெல்லாம் வேனும்
அறுசுவை உணவுக்கு தேவை.

சுவை, நிறம், சூடு, சுகம், வாசம் என்றைந்தின்
வகை கொண்டதே உணவு.

சமைத்த தனாலாய பயன் என்கொல் யாரும்
சாப்பிட இல்லை எனில்.                                                            

53 comments:

Porkodi (பொற்கொடி) said...

hahaha! idhellam padikum sapida andha bajji irundhu irundha nalla irundhurukum thaan.. hmmmmmmmmm..

srividhya Ravikumar said...

எப்படி இது எல்லாம் கிடைக்குது அக்கா உங்களூக்கு.. நன்றாக உள்ளது..

ஜெய்லானி said...

படிக்க இனிமையா இருக்கு. உண்மையும் அதுதானே..!!

ஜெய்லானி said...

பாவம் வள்ளுவர்....!!

GEETHA ACHAL said...

Porkodi (பொற்கொடி) said...
//hahaha! idhellam padikum sapida andha bajji irundhu irundha nalla irundhurukum thaan.. hmmmmmmmmm..//உங்களுக்கு இல்லாமலா...எடுத்து சாப்பிட்டுவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்...கருத்துக்கு நன்றி பொற்கொடி...

GEETHA ACHAL said...

srividhya Ravikumar said...
//எப்படி இது எல்லாம் கிடைக்குது அக்கா உங்களூக்கு.. நன்றாக உள்ளது//எல்லாம் நெட்டில் படித்தது தான்...ஆனால் நான் காலேஜ் படித்த பொழுது இன்னும் இது மாதிரி பல குறள்களை மாற்றியது இருக்கின்றது....

GEETHA ACHAL said...

ஜெய்லானி said...
//பாவம் வள்ளுவர்....!!//பாவம் பார்த்தால் நம்மையும் பாவம் ஒட்டுகொள்ளும் என்று சொல்லுவாங்க...அதனால்...யாரையும் விடுவதில்லை....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...

Chitra said...

ha,ha,ha,ha,ha.... பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டு குறள் படிக்கிறேன்..... :-)

ஸாதிகா said...

அட்றா சக்கை...ஓவரா யோசிக்கறீங்க போலிருக்கு!

சசிகுமார் said...

ஐயோ சாமி சிரித்து சிரித்து வயிறு வலிக்குது என் நண்பர்களுக்கும் காண்பித்தேன். ஒரே சிரிப்பு மழைதான். நன்றி அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

ஐயோ சாமி சிரித்து சிரித்து வயிறு வலிக்குது என் நண்பர்களுக்கும் காண்பித்தேன். ஒரே சிரிப்பு மழைதான். நன்றி அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Pavithra said...

ha ha nalla kuralkal... interesting.

kavisiva said...

சூப்பரு... என்னமா யோசிக்கறாய்ங்க!

சுகர்ஃப்ரீயும் சுகர் இடத்தே குறைதீர்ந்த
சுவை பயக்கும் எனின்

நட்புடன் ஜமால் said...

இரண்டும் கடைசியும் செம செம

சாருஸ்ரீராஜ் said...

கீதா குறள் சூப்பர் , இதுக்கும் மெனகட்டு யோசிச்சிங்களோ ...

asiya omar said...

சமையல் குறள் நல்லாயிருக்கு,முட்டை பஜ்ஜி தானே எனக்கு ஒரு பார்சல்.

Jey said...

என்ன மேடம் இப்படி பன்னிட்டீங்க, செம்மொழி மாநாட்டுல கொடுத்திருந்தா ஏதவது விருதாவது கொடுத்திரிப்பாங்க, மிஸ் பன்னிட்டீஙளே?. ம்ஹூம் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். :)

GEETHA ACHAL said...

ஸாதிகா said...
//அட்றா சக்கை...ஓவரா யோசிக்கறீங்க போலிருக்கு!// எல்லாம் நெட்டில் படிச்சது தான்....

GEETHA ACHAL said...

Chitra said...
ha,ha,ha,ha,ha.... //பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டு குறள் படிக்கிறேன்..... :-)//பஜ்ஜி பிடிச்சு இருக்கின்றதா...பஜ்ஜி போஸ்டிங் போடலாமா...

GEETHA ACHAL said...

சசிகுமார் said...
//ஐயோ சாமி சிரித்து சிரித்து வயிறு வலிக்குது என் நண்பர்களுக்கும் காண்பித்தேன். ஒரே சிரிப்பு மழைதான்.//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி....நண்பர்களுக்கு காண்பித்ததில் மிகவும் மகிழ்ச்சி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா...

GEETHA ACHAL said...

கவிசிவா //சுகர்ஃப்ரீயும் சுகர் இடத்தே குறைதீர்ந்த
சுவை பயக்கும் எனின்//சூப்பராக இருக்கின்றது....இதனையும் கிச்சன் குறளில் இணைத்துவிடுகிறேன்...அருமை...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாரு அக்கா...இது எல்லாம் சும்மா...படிக்கும் காலத்தில் நான் அடிக்கலூட்டி ரொம்பவும் ஒவர் தான்....

GEETHA ACHAL said...

asiya omar said...
//சமையல் குறள் நல்லாயிருக்கு,முட்டை பஜ்ஜி தானே எனக்கு ஒரு பார்சல்.//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா....கண்டிப்பாக பர்சல் அனுப்பிவிடுகிறேன்...இது முட்டை பஜ்ஜி இல்லை அக்கா...ஆனால் பார்க்க அப்படிதான் இருக்கு....இது வெங்காய பஜ்ஜி...அம்மா வந்து இருந்த பொழுது எங்களுக்கு செய்து கொடுத்த பொழுது எடுத்த படம்..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால் அண்ணா...

GEETHA ACHAL said...

Jey said...
//என்ன மேடம் இப்படி பன்னிட்டீங்க, செம்மொழி மாநாட்டுல கொடுத்திருந்தா ஏதவது விருதாவது கொடுத்திரிப்பாங்க, மிஸ் பன்னிட்டீஙளே?. ம்ஹூம் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். :)//இது மாதிரி முன்னமே ஐடியா நீங்கள் கொடுத்து இருந்தால் விருது கிடைத்து இருக்கும் அல்லவா..இருந்தாலும் பரவயில்லை...உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஜெய்...கண்டிப்பாக அடுத்த மாநாட்டில் கலந்து கொண்டால் போச்சு...

Mrs.Menagasathia said...

ஹா ஹா சூப்பர்ர்ர்....பாவம் வள்ளுவர் இதெல்லாம் படிக்கும் போது அவர் நொந்தே போய்ட்டிருப்பார்..நல்லவேளை இப்ப அவர் இல்லை...

athira said...

ஆகா.. குறள்கள் அருமை. நான் இதுவரை இப்படிக் கேள்விப்பட்டதில்லை.

GEETHA ACHAL said...

Mrs.Menagasathia said...
//ஹா ஹா சூப்பர்ர்ர்....பாவம் வள்ளுவர் இதெல்லாம் படிக்கும் போது அவர் நொந்தே போய்ட்டிருப்பார்..நல்லவேளை இப்ப அவர் இல்லை..//அவர் இருந்தா அவ்வளவு தான்...பாவம் தான் வள்ளுவர்...இருந்தாலும் இது சிரிக்க மட்டுமே.

GEETHA ACHAL said...

athira said...
//ஆகா.. குறள்கள் அருமை. நான் இதுவரை இப்படிக் கேள்விப்பட்டதில்லை//தங்கள் கருத்துக்கு நன்றி அதிரா...இன்னும் இது மாதிரி பல குறள்கள் இருக்கின்றது...இது சமையல் சம்மந்தமான குறள்கள்...

Priya said...

Super thirukural...padika padika siripa nirutha mudiyala..lolz..

தக்குடுபாண்டி said...

akka, chanceyyy illai poongo!!...:)) athulaiyum antha last kural top tucker...:)

எம் அப்துல் காதர் said...

இதற்கு நான் "பொற்கிளி" தரலாம் என்று யோசிக்கிறேன்! அமைச்சரவை சகாக்கள் செம்மொழி மாநாடு முடிந்து வரட்டும். பரிசீலிப்போம்! அதுவரை கொஞ்சம் பொறுமை மேடம்! உண்மையிலேயே அருமையான யோசிப்பா இருக்கே மேடம்.mmm well done.

Anonymous said...

Why, mother should teach only to daughter, not to her son?

This is gender biasing. Pls stop this.

ராசராசசோழன் said...

வள்ளுவரே தலை சொரியும் அளவிற்கு குறள் அமைந்துள்ளது...

Kanchana Radhakrishnan said...

சிரித்து சிரித்து வயிறு வலிக்குது.

GEETHA ACHAL said...

Priya said...
//Super thirukural...padika padika siripa nirutha mudiyala..lolz..//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

தக்குடுபாண்டி said...
//akka, chanceyyy illai poongo!!...:)) athulaiyum antha last kural top tucker...:)//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தக்குடுபாண்டி....

GEETHA ACHAL said...

எம் அப்துல் காதர் said...
//இதற்கு நான் "பொற்கிளி" தரலாம் என்று யோசிக்கிறேன்! அமைச்சரவை சகாக்கள் செம்மொழி மாநாடு முடிந்து வரட்டும். பரிசீலிப்போம்! அதுவரை கொஞ்சம் பொறுமை மேடம்! உண்மையிலேயே அருமையான யோசிப்பா இருக்கே மேடம்.mmm well done//தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் பரிசுக்கும் மிகவும் நன்றி அப்துல்...

GEETHA ACHAL said...

Anonymous said...
//Why, mother should teach only to daughter, not to her son?

This is gender biasing. Pls stop this.// தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அனானி...பொதுவாக பொன்னுக்கு அம்மா தான் கற்று கொடுப்பாங்க...இப்ப எல்லாம் காலமும் மாறிபோச்சு...அனைவரும் சமையல் கற்று கொள்வது அவசியம்...இதில் பொன்னாவது...ஆணாவது...எல்லொருக்கும் கல்வி அவசியம் மாதிரி...அனைவருக்கும் சமையலும் அவசியம்...

தெய்வசுகந்தி said...

super geethaa!!!!!!

Niloufer Riyaz said...

kuralgal anaithum arumai. Mudhal irandu kuralgalukku naanum en kanavarum vayiru valikka sirithom

vanathy said...

super kurals!!!

வால்பையன் said...

மீதி 1321 குறள் எப்போ ரிலீஸ்!?

ஹுஸைனம்மா said...

கீதா, சமையல் பொருட்கள் ஆராய்ச்சிதான் பண்ணுவீங்க எப்பவும்? இதுவுமா? நல்லாருக்கு நிஜமா!!

GEETHA ACHAL said...

ராசராசசோழன் said...
//வள்ளுவரே தலை சொரியும் அளவிற்கு குறள் அமைந்துள்ளது.//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ராசராசசோழன்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கஞ்சனா...நன்றி தெய்வசுகந்தி...நன்றி வானதி....

GEETHA ACHAL said...

Niloufer Riyaz said...
//kuralgal anaithum arumai. Mudhal irandu kuralgalukku naanum en kanavarum vayiru valikka sirithom//ரொம்ப மகிழ்ச்சி...தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலோஃபர்...

GEETHA ACHAL said...

வால்பையன் said...
//மீதி 1321 குறள் எப்போ ரிலீஸ்!?//எல்லாம நம்ம வால்பையன் தலைமையில் தான் மீதி குறள்கள் ரீலீஸ்....தங்கள் வருகைக்கு நன்றி வால்பையன்...உங்களை என்னுடைய பதிவில், Bachelorவாழைக்காய் வறுவலில் பார்தது...அப்புறம் இப்ப தான் இந்த ப்ளாக் பக்கமே பார்க்கிறேன்...அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வாங்க...

வால்பையன் said...

//அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வாங்க//

பதிவு எல்லாத்தை படிச்சிருவேன், கொஞ்சம் வித்தியாசமா அல்லது பிடித்த ரெசிப்பிக்கு கமெண்ட் போட்ருவேன்!

நான் உங்க பாலோயர்!

GEETHA ACHAL said...

ஹுஸைனம்மா said...
//கீதா, சமையல் பொருட்கள் ஆராய்ச்சிதான் பண்ணுவீங்க எப்பவும்?//என்ன ஹுஸைனம்மா ஆராய்ச்சி என்று பெரிய வார்த்தை எல்லாம் என்னை பார்த்து சொல்லுறிங்க...நான் ஒரு கத்துகுட்டி...// இதுவுமா? நல்லாருக்கு நிஜமா!!//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றிகள்....

GEETHA ACHAL said...

வால்பையன் said...
//அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வாங்க//

பதிவு எல்லாத்தை படிச்சிருவேன், கொஞ்சம் வித்தியாசமா அல்லது பிடித்த ரெசிப்பிக்கு கமெண்ட் போட்ருவேன்!

நான் உங்க பாலோயர்!//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வால்பையன்...

Related Posts Plugin for WordPress, Blogger...