கோதுமை ரவா இட்லி உப்புமா - Wheat Rava Idly Uppuma


கோதுமை ரவையில் உப்புமா செய்வதை விட இந்த கோதுமை ரவை இட்லியில் செய்த உப்புமா சுவையோ சுவை…மிகவும் அருமையாக இருந்து…நீங்களும் செய்து பாருங்களேன்….

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெங்காயம் – 1
·         கருவேப்பில்லை – 5 இலை
·         உப்பு – 1/2 தே.கரண்டி
தாளிக்க :
·         எண்ணெய் – 2 தே.கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 2

செய்முறை :
·         கோதுமை ரவா இட்லியினை உதிர்த்து கொள்ளவும். வெங்காயம் + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கடலைபருப்பு + காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
·         இத்துடன் வெங்காயம் + கருவேப்பில்லை + உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் உதிர்த்து வைத்துள்ள இட்லியினை சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் வேகவிடவும்.
·         சுவையான சத்தான இந்த உப்புமா, மாலைநேர சிற்றுண்டியாக இருக்கும்.


குறிப்பு :
இட்லியினை ப்ரிஜில் குறைந்தது 2 – 3 மணி நேரம் வைத்துவிட்ட பின்னர், உதிர்த்தால் ரவை போல் உதிர் உதிரியாக வரும்.

ப்ரிஜில் இட்லியினை வைக்கவில்லையே என்று நினைத்தால்….இதோ இன்னொரு வழி இருக்கின்றது….. இட்லியினை 1/2 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பிறகு உதிர்த்தால் அருமையாக உதிர்க்க வரும்.

32 comments:

Menaga Sathia said...

உப்புமா மிக அருமையாக இருக்கு...

Mahi said...

நல்லா இருக்கு கீதா! இந்த முறை கோதுமைரவா இட்லி செய்யணும்னு நினச்சிருக்கேன்..கூடவே இந்த உப்மாவும் ட்ரை பண்ணிடறேன்! :)

Chitra said...

பார்க்கவே அம்சமா இருக்குது. :-)

ஹைஷ்126 said...

இதுவரை கேள்விப் பட்டது இல்லை, பார்க்க சூப்பரா இருக்கு.

வாழ்க வளமுடன்

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா...நன்றி சித்ரா...

GEETHA ACHAL said...

மகி said...
//நல்லா இருக்கு கீதா! இந்த முறை கோதுமைரவா இட்லி செய்யணும்னு நினச்சிருக்கேன்..கூடவே இந்த உப்மாவும் ட்ரை பண்ணிடறேன்! :)//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி...கண்டிப்பாக செய்து பாருங்கள்...அப்புறம் இந்த உப்புமா செய்வதற்காகவே கோதுமை ரவையில் இட்லி செய்விங்க...எங்கள் வீட்டில் எல்லொருக்கும் மிகவும் பிடித்த உணவு...

GEETHA ACHAL said...

ஹைஷ்126 said...
//இதுவரை கேள்விப் பட்டது இல்லை, பார்க்க சூப்பரா இருக்கு.//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஹைஷ் அங்கிள்...

Unknown said...

lovely ideas geetha,using wheat rava and idly...gud snack for the evening time too.will try.

vanathy said...

Geetha, super uppuma!

எல் கே said...

geetha= different + healthy foods

ஸாதிகா said...

அட வித்த்யாசமாக,கலர்ஃபுல்லாக இருக்கின்றதே உப்புமா!

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமா டிரை பண்ணீருக்கீங்க கீதா ரொம்ப நல்லா இருக்கு

தக்குடு said...

//இதுவரை கேள்விப் பட்டது இல்லை, பார்க்க சூப்பரா இருக்கு// அதுதான் நம்ப கீதா அக்கா ஸ்டைல்....:)

Krishnaveni said...

delicious upma...great

சசிகுமார் said...

அக்கா உப்புமா எனக்கு பிடிக்காது. ஆனால் நீங்க சொல்லியிருப்பது புதுமையாக உள்ளது. சாப்பிட்டு பார்க்கிறேன். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந் வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

அக்கா தமிளிஷ்ல வெளியிடுறீங்களா இல்லையா வெளியிட்டால் ஓட்டு பட்டையை இணைக்கவும்.

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு கீதா.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...

GEETHA ACHAL said...

LK said...
//geetha= different + healthy foods//தங்களுடைய பாராட்டிற்கு மிகவும் மகிழ்ச்சி கார்த்திக்...

GEETHA ACHAL said...

ஸாதிகா said...
//அட வித்த்யாசமாக,கலர்ஃபுல்லாக இருக்கின்றதே உப்புமா//சுவையும் சூப்பராக இருக்கும் செய்து பாருங்கள் ஸாதிகா அக்கா..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாருஅக்கா...

GEETHA ACHAL said...

தக்குடுபாண்டி said...
//இதுவரை கேள்விப் பட்டது இல்லை, பார்க்க சூப்பரா இருக்கு// அதுதான் நம்ப கீதா அக்கா ஸ்டைல்....:)//தங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றிகள் பல தக்குடு...

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கிருஷ்ணவேனி...

GEETHA ACHAL said...

சசிகுமார் said...
//அக்கா உப்புமா எனக்கு பிடிக்காது. ஆனால் நீங்க சொல்லியிருப்பது புதுமையாக உள்ளது. சாப்பிட்டு பார்க்கிறேன்.//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி...கண்டிப்பாக சாப்பிட்டு பாருங்கள்...அப்புறம் உப்புமா பிடிச்சுபோய்விடும்....

GEETHA ACHAL said...

சசிகுமார் said...
//அக்கா தமிளிஷ்ல வெளியிடுறீங்களா இல்லையா வெளியிட்டால் ஓட்டு பட்டையை இணைக்கவும்//முன்னமே ஜெய்லானி கூட சொன்னாரு..அப்புறம் அதனையும் சேர்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தேன்...இன்று ஒட்டினை இணைத்துவிட்டேன்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கஞ்சனா...

Niloufer Riyaz said...

iduvarai seithidatha upma, migavum arumai

Priya Suresh said...

Super delicious upma, pakkura pothey yeduthu saapidanam pola irruku..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றிகள் நிலோஃபர்...நன்றிகள் ப்ரியா...

graceravi said...

கீதா அறுசுவையில் உங்கள் பிரான்ஸ் பீஸ் மசாலா செய்துபார்த்து பதிவு போட்டேன். பதிலே இல்லை. படம் எடுத்தும் அனுப்பினேன்

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி கிரேஸ்...மிகவும் மகிழ்ச்சி...ஆனால் பின்னுட்டம் நான் பார்க்கவில்லை...மிகவும் சாரி...

இப்பொழுது எல்லாம் அருசுவை பக்கம் அவ்வளவாக வருவதில்லை...நேரம் கிடைக்கும் பொழுது ப்ளாக் பக்கமும் வாங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...