பார்லி பிரவுன் ரைஸ் தோசை - Barley Brown Rice Dosai


இந்த தோசை மிகவும் சத்துள்ள காலை நேர சிற்றுண்டி.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பார்லி – 2 கப்
·         பிரவுன் ரைஸ் (அல்லது ) இட்லி அரிசி – 1 கப்
·         உளுத்தம்பருப்பு – 2 மேஜை கரண்டி
·         வெந்தயம் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         பார்லி, வெந்தயம் ,உளுத்தம்பருப்பு + பிரவுன்ரைஸ் தனி தனி பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.

·         பின்னர் பார்லி + வெந்தயம் + உளுத்தம்பருப்பினை முதலில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். அதன் பிறகு அரிசியினை போட்டு நன்றாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

·         அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது 4 மணி நேரம் புளிக்கவிடவும்.

·         பிறகு தோசைகல்லில் தோசைகள் சுடவும்.
·         சுவையான சத்தான தோசை ரெடி. இதனை சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :மாவு நன்றாக புளித்தால் தோசை நன்றாக மெல்லியதாக வரும்.

உணவில் நார்சத்து சேர்த்து கொள்வது அவசியமா????--பகுதி - 1 (Dietary Fiber)

ஒவ்வொரு நாளைக்கும், நம்முடைய உடலிற்கு ஆறுவிதமான சத்துகள் கண்டிப்பாக தேவைப்படுகின்றது.
அவை,
·         கார்போஹைட்ரேட் - Carbohydrates
·         புரதங்கள் - Protein
·         கொழுப்பு - Fat
·         தண்ணீர் - Water
·         விட்டமின்ஸ் - Vitamins
·         மினரல்ஸ் – Minerals

இவை அனைத்தும் சரியான அளவில் உடலில் இருந்தால் உடல் நலம் பாதுகாக்கபடும். மாறுதலாக எதேனும் கூடியே அல்லது குறைந்தாலோ பிரச்சனை தான்

அதிலும் முக்கியமாக, கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு சத்து நம்முடைய உடலிற்கு அதிக அளவில் தேவைபடுகின்றது.

தண்ணீர் கூட குடிக்க ஒரு அளவு இருக்கின்றது. அந்த அளவு குடித்தால்தான், உடலில் தன்னுடைய பணிகளை ஒழுங்காக செய்ய முடியும்.

கடைசியாக வருவது, விட்டமின்ஸ் மற்றும் மினரலஸும் தான். இதனை மில்லிகிராம் அல்லது மைக்ரோகிராம் அளவில் எடுத்து கொண்டால் போதும்நாம் சாப்பிடும் அன்றாட உணவிலேயே இந்த விட்டமின்ஸும் , மினரல்ஸும் நமக்கு கிடைத்துவிடும்.

விட்டமின்ஸினால் உடலில் கலோரிகளின் அளவு அதிகரிப்பது இல்லைஇதனால் உடலில் எடை எறுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை

வைட்டமின்ஸின் முக்கிய பயன், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு சத்துயினை உடைத்து , நம் உடலிற்கு தேவையான ஆற்றலினை பெற்று தருகின்றது……(விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் பற்றி என்னுடைய பின்வரும் பதிவுகளில் தெளிவாக எழுதிகிறேன்…)

கலோரிகளினை கணக்கிட கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு சத்துயினை மட்டுமே எடுத்து கொள்ளப்படுகின்றது.

கார்போஹைட்ரேட்டில், கார்போஹைட்ரேட்(Carbohyrdate) , நார்சத்து( Dietary Fiber) மற்றும் சக்கரையாக(Sugar) பிரிக்கபடுக்கின்றது.

அதே போல கொழுப்பிலும் பிரிவுகள் இருக்கின்றதுநாம் இன்று இந்த கார்போஹைட்ரேட்டினை பற்றி தெளிவாக பார்ப்போம்

நம்முடைய உணவில் அதிக அளவு நார்சத்து உள்ள உணவினை சாப்பிடுவதால் உடலில் பல நோய்கள் வாராமல் தடுக்க முடிகின்றது

பொதுவாக நம்முடைய உணவில் மிகவும் குறைவான நார்சத்து உள்ள பொருட்களையே நாம் தினமும் சாப்பிடுகிறோம்..அது சுமார் 10 கிராம் என்று ஆய்வுகள் கூறுகின்றது..

நாம் தினமும் குறைந்தது 20 கிராம் நார்சத்து உள்ள உணவினை சாப்பிட வேண்டும்அப்பொழுது தான் உடலில் எடை அதிகமாகமலும், சக்கரை, கொழுப்பு போன்றவை உடலில் அளவு அதிகரிக்காமலும் இருக்கும்.

சக்கரை நோயளிகள், கொலஸ்டிரால் உள்ளவர்கள், உடல் எடையினை குறைக்க விரும்புவோர் மட்டும் இல்லாமல் வந்தவுடன் காப்பதைவிட, வரும்முன் காப்பவரை போல விழிப்புடன் இருக்கும் அனைவரும் குறைந்தது 30 கிராமிற்கு மேல் நார்சத்து அடங்கிய உணவினை சாப்பிடுவது மிக மிக அவசியம்

என்னுடைய சிறு வயதில் எல்லாம் நார்சத்து அடங்கிய பொருள் என்றால் வாழைத்தண்டு மட்டும் தான் எனக்கு தெரியும்..ஏன் என்றால் அதில் தான் நிறைய நார் இருக்குமே

இப்ப பார்த்த தான் தெரியுதுஅதனை முழுங்கிவிடும் அளவிற்கு மற்ற நமக்கு தெரியாத பல பொருட்களில் நார்சத்து இருக்கின்றது என்று

சரிசரிஅது என்ன..ஒரே நார்சத்து நார்சத்து என்று சொல்லிகிட்டே இருக்கிங்கஅது என்ன தான் செய்யுது

நார்சத்தினை இரண்டு விதமாக பிரிக்கலாம்கரையும் நார்சத்து(Soluble Fiber) மற்றும் கரையாத நார்சத்து( Insoluble Fiber)

சரிகரையும் நார்சத்து , கரையாத நார்சத்து என்றால் என்ன????

நீரில் கரையகூடியது கரையும் நார்சத்துகரையாத நார்சத்து என்றால்…( தெரியுமே நீங்கள் நினைப்பது…)ஆமாங்கஅது தண்ணீரில் கரைவது இல்லை…so simple தானே

கரையும் நார்சத்தினை பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்இந்த நார்சத்து தண்ணீரில் கரைய கூடியதுஇதனால் ரத்தத்தில் சக்கரை அளவையும், கொலஸ்டிரால் அளவினையும் எளிதில் குறைக்க உதவுகின்றது….

கரையும் நார்சத்து, பார்லி, ஒட்ஸ், பச்சை பட்டாணி, பீன்ஸ், காரட் , ஆப்பிள் போன்ற பொருட்களில் அதிக அளவில் காணப்படுகின்றது

சரிசரிகரையாத நார்சத்தினை பற்றியும் பார்த்துவிடுவோம்முன்னதாகவே பார்த்து இருந்தாலும்..திரும்பவும் இந்த நார்சத்து தண்ணீரில் கரைவது இல்லைஇது சாப்பிட்ட உணவும் directஆக குடல்வழியாக வெளியேறுவிடுகின்றதுஇந்த நார்சத்து அதிகம் உள்ள உணவினை சாப்பிடுவதால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்கின்றது.

அதே போல, கரையாத நார்சத்து, பழத்தின் தோல்பகுதியில், பயிறு வகைகள், காய்கறிகளில் அதிகம் கிடைக்கின்றது

--------- தொடரும்

குறிப்பு : ஒவ்வொரு வாரமும் ஒரு உடல் ஆரோக்கியம் சார்ந்த பதிவு ஒன்று எழுது இருக்கின்றேன்…இதன் பகுதி -2 அடுத்த வாரம் வெளிவரும்…...

மட்டன் சாப்ஸ் - Mutton Chops


இது என்னுடைய மாமியாரின் ஸ்பெஷல் சமையல்….அனைவராலும் மிகவும் விரும்பி பாராட்டுகள் வாங்கிய உணவு….நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். இதனை சமைப்பதும் மிகவும் எளிது.

இதே செய்முறையில் சிக்கனில் செய்தாலும் சுவையாக தான் இருக்கும்..ஆனால் மட்டனில் செய்யும் பொழுது அதிக சுவையுடன் இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 45 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         மட்டன் – 1/2 கிலோ
·         மிளகாய் தூள் – 1 மேஜை கரண்டி
·         மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு - தேவைக்கு

அரைத்து கொள்ள :
·         வெங்காயம் – 1/4 கிலோ
·         இஞ்சி பெரிய துண்டு
·         பூண்டு – 10 -12 பல்

பொடித்து கொள்ள :
·         சீரகம் – 1 மேஜை கரண்டி
·         மிளகு – 2 மேஜை  கரண்டி

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கிரம்பு, ஏலக்காய், பட்டை – 2
·         கருவேப்பில்லை – 10 இலை

செய்முறை :
·         மட்டனை சுத்தம் செய்து அத்துடன் மிளகாய் தூள் + மஞ்சள் தூள் + 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் போட்டு 5 – 6 விசில் வரும் வரை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

·         வெங்காயம் + இஞ்சி + பூண்டு சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும் .(இதனை மைய அரைத்தால் சுவை வேறுபடும்….)

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து, அத்துடன் வேகவைத்த மட்டன் (தண்ணீருடன்) + அரைத்த விழுது + உப்பு சேர்த்து வதக்கவும்.

·         பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றும் பாதியுமாக பொடித்து வைக்கவும்.

·         கடைசியில் அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கி, தண்ணீர் வற்றிய பிறகு பொடித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவிடவும்.

·         சுவையான மட்டன் சாப்ஸ் ரெடி. இதனை சாதம், சாம்பார், சாப்பத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
·         வெங்காயம் + இஞ்சி + பூண்டினை கொரகொரப்பாக தான் அரைக்க வேண்டும்.
·         சீரகம் + மிளகினை பொடிக்கும் பொழுதும் ஒன்றும் பாதியுமாக பொடிக்க வேண்டும்

·         சீரகம் மற்றும் மிளகினை 1 : 2 சதவிதத்தில் தான் சேர்க்க வேண்டும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல காரத்திற்கு சேர்த்து கொள்ளவும்.
·         மட்டன் வேகவைத்த தண்ணீரையும் இதில் சேர்த்து கொள்ளவும்.

கினோவா இட்லி & தோசை - Quinoa Idly & Quinoa Dosai - Indian Quinoa Recipe / Idly Varietiesகினோவாவில் அதிக அளவு மினரல்ஸ் (Manganese, Magnesium, Phosphorous, Iron), புரதம்(Protein) மற்றும் நார்சத்து (Dietary Fiber) இருக்கின்றது…
உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் பிரச்சனை, சக்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடுவது நல்லது.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கினோவா – 1 கப்
·         பிரவுன் ரைஸ்/இட்லி அரிசி – 1 கப்
·         உளுத்தம்பருப்பு – 3/4 கப்
·         வெந்தயம் – 1 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

செய்முறை :
·         கினோவா + அரிசி + உளுத்தம்பருப்பு + வெந்தயம் சேர்த்து தண்ணரில் ஊறவைத்து கொள்ளவும்.
·         ஊறவைத்த பொருட்களை இட்லிக்கு அரைப்பது போல அரைத்து கொள்ளவும்.
·         அரைத்த மாவினை குறைந்தது 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும்.

இட்லி செய்ய :
·         மாவு பொங்கியவுடன், அதனை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் குறைந்தது 8 – 10 நிமிடங்கள் வேகவைத்து இட்லியாக சுடவும்.

·         சுவையான கினோவா இட்லி ரெடி.

தோசை செய்ய :
·         தோசை கல்லினை சூடுபடுத்து தோசையாகவும் சுடவும்.

·         ஒருபக்கம் நன்றாக வெந்தவுடன் அதனை திருப்பி போட்டவும்.

·         சுவையான இட்லி & தோசையினை சாம்பார், சட்னி, குருமா போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இந்த இட்லி சாதரண இட்லி மாதிரி தான் இருக்கும். அதனால் அனைவரும் விரும்பி சாப்படுவாங்க…
தோசையும் கூட பேப்பர் ரோஸ்ட் மாதிரி மெல்லியதாக சுடலாம்.

சுறா மீன் புட்டு - 2 / Shark Puttu - 2


மிகவும் எளிதில் செய்ய கூடியது
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         சுறா மீன் – 1/2 கிலோ
·         வெங்காயம் -2 பெரியது
·         பூண்டு – 10 பல்
·         கருவேப்பில்லை சிறிதளவு
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         கடுகு – 1/2 தே.கரண்டி
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு
பொடித்து கொள்ள :
·         சீரகம் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·         சுறாமீனை சுத்தம் செய்து , ஒரு பாத்திரத்தில் மீன்கள் முழ்கும் அளவு தண்ணீர் + 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.

·         மீன்கள் வெந்தவுடன், தோல் நீக்கி அதனை உதிர்த்து கொள்ளவும்.

·         உதிர்த்து வைத்து இருக்கும் மீனுடன் தூள் வகைகள் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.

·         வெங்காயம் + பூண்டு + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் பூண்டு + வெங்காயம் + கருவேப்பில்லை என ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.

·         வெங்காயம் வதங்கியவுடன் மீனை போட்டு 10 நிமிடங்கள் வதக்கவும். புட்டு உதிரியாக வரும் வரை வதக்கவும்.

·         சீரகத்தினை மிக்ஸியில் போட்டு கொரகொரவென பொடித்து கொள்ளவும். கடைசியில் சீரகதூளினை தூவி 2 நிமிடங்கள் வதக்கவும். சுவையான சுறாமீன் புட்டு ரெடி.

குறிப்பு :
மீனை வதக்கும் பொழுது தண்ணீர் ஊற்ற கூடாது.
சீரகத்தினை சமைக்கும் பொழுது பொடித்து போட்டால் தான் சுவையாக இருக்கும்.


Related Posts Plugin for WordPress, Blogger...