சுறா மீன் புட்டு - 2 / Shark Puttu - 2


மிகவும் எளிதில் செய்ய கூடியது
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         சுறா மீன் – 1/2 கிலோ
·         வெங்காயம் -2 பெரியது
·         பூண்டு – 10 பல்
·         கருவேப்பில்லை சிறிதளவு
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         கடுகு – 1/2 தே.கரண்டி
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு
பொடித்து கொள்ள :
·         சீரகம் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·         சுறாமீனை சுத்தம் செய்து , ஒரு பாத்திரத்தில் மீன்கள் முழ்கும் அளவு தண்ணீர் + 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.

·         மீன்கள் வெந்தவுடன், தோல் நீக்கி அதனை உதிர்த்து கொள்ளவும்.

·         உதிர்த்து வைத்து இருக்கும் மீனுடன் தூள் வகைகள் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.

·         வெங்காயம் + பூண்டு + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் பூண்டு + வெங்காயம் + கருவேப்பில்லை என ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.

·         வெங்காயம் வதங்கியவுடன் மீனை போட்டு 10 நிமிடங்கள் வதக்கவும். புட்டு உதிரியாக வரும் வரை வதக்கவும்.

·         சீரகத்தினை மிக்ஸியில் போட்டு கொரகொரவென பொடித்து கொள்ளவும். கடைசியில் சீரகதூளினை தூவி 2 நிமிடங்கள் வதக்கவும். சுவையான சுறாமீன் புட்டு ரெடி.

குறிப்பு :
மீனை வதக்கும் பொழுது தண்ணீர் ஊற்ற கூடாது.
சீரகத்தினை சமைக்கும் பொழுது பொடித்து போட்டால் தான் சுவையாக இருக்கும்.


21 comments:

vanathy said...

super dish.

Menaga Sathia said...

சூப்பர்ர் புட்டு....உடனே செய்து சாப்பிடனும் போல் இருக்கு...

Bharathy said...

rooooobma nalla recipe geetha!!! Meen nna enakku Uyir!..this is new to me!...Classic recipe, Geetha!!!!

Shama Nagarajan said...

yummy one..thanks for sharing

Priya Suresh said...

Meen puttu na naan yedukuda venumnalum saapiduven, superaa irruku Geetha..

RV said...

Romba nalla irruku Geetha.. Naan appadiye sapiduven :)

Krishnaveni said...

wow...kalakkal recipe, beautiful

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...நன்றி மேனகா...நன்றி பாரதி...நன்றி ஷாமா...

Suganya said...

This is my all time fav... Mom used to make this for me when i delivered.... Nice recipe... YUM!

Angel said...

yummy recipe geetha .my favorite sura pittu goes well with sambar rice or rasam rice

ஜெய்லானி said...

ஏங்க புட்டு சொன்னீங்க . இதுக்கு புட்டு குழல் வானாமா..ஹி..ஹி..

Geetha6 said...

wav..colourful madam!

Niloufer Riyaz said...

migavum arumayaga irukkiradu!!

சசிகுமார் said...

வழக்கம் போல நல்லாயிருக்கு அக்கா, தினமும் காலையில் இருந்து படுக்கிற வரைக்கும் சமையல பற்றியே நினசிகிட்டு இருப்பீங்களா

athira said...

சூப்பர் புட்டு. இதை நான், அங்கும் பார்த்திருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

சுறாப்புட்டு அருமை கீதா! விளக்கப்புகைப்படங்கள் எல்லாமே அழகு!

Mythreyi Dilip said...

Each and every time i visit ur blog ur making me hungry dear, i cant resist this, pass me the plate dear:)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...நன்றி RV...நன்றி கிருஷ்ணவேணி...நன்றி சுகன்யா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்...நன்றி ஜெய்லானி..இதுக்கு புட்டு குழல் எல்லாம் தேவையில்லை...விரும்பினால் நீங்க புட்டு குழலில் செய்யலாம்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா...நன்றி நிலோபர்...நன்றி சசிகுமார்...//தினமும் காலையில் இருந்து படுக்கிற வரைக்கும் சமையல பற்றியே நினசிகிட்டு இருப்பீங்களா//அது எல்லாம் இல்லை..இது எல்லாம் எப்பொழுதோ போட்டோ எடுத்த்து...ஆனால் இப்ப தான் போஸ்டிங் போட டைம் கிடைச்சுது...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா...நன்றி மனோ ஆன்டி...நன்றி மைத்ரேயி...

Related Posts Plugin for WordPress, Blogger...