பழுத்த வாழைக்காயில் என்ன செய்யலாம்????? - பகுதி - 2 - வாழைக்காய் ஸ்டஃப்டு ஒட்ஸ் கொழுக்கட்டை

பழுத்த வாழைக்காயில் என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து அப்படா என்று ஆகிவிட்டது….எப்படியும் அதனை வீண்செய்யாமல் நான் செய்த மிகவும் சிம்பிளான கொழுக்கட்டை….. நீங்கள் செய்து சுவைத்து பாருங்கள்….


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         அரிசி மாவு – 1 கப்
·         பொடித்த ஒட்ஸ் – 1 கப்
·         உப்பு – 1/4 தே.கரண்டி
ஸ்ட்ஃபிங் செய்ய :
·         பழுத்த வாழைக்காய் – 1
·         சக்கரை – 1/4 கப்
·         ஏலக்காய் – 2
·         நெய் – 2 மேஜை கரண்டி
செய்முறை :
·         வாழைக்காயினை , தோல் நீக்கி, கேரட் துறுவது போல துறுவி கொள்ளவும்.
·         கடாயில் நெய் ஊற்றி துறுவிய வாழைக்காயினை வதக்கவும். வாழைக்காய் நன்றாக வதங்கியவுடன், சக்கரை + ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்.
·         அரிசி மாவு + பொடித்த ஒட்ஸ் + உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
·         வாழைக்காயினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
·         கொழுக்கட்டை மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி அதன் நடுவில் வாழைக்காய் உருண்டைகளை வைத்து முடிவிடவும். அதனை ஆவியில் வேகவைக்கவும்.
·         சுவையான எளிதில் செய்ய கூடிய இனிப்பு…

குறிப்பு : எப்பொழுதும் தேங்காய் அல்லது எள்ளுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவதற்கு இது ஒரு மாறுதல்


21 comments:

Priya Suresh said...

Wow wat a delicious kozhukattais...arumaiyoo arumai..

Chitra said...

Super! Thank you for the recipe!

Mahi said...

கொழுக்கட்டை பார்க்கவே அழகா இருக்கு. :)

Unknown said...

yummy yum kozhukattai,never thought u added oats and banana,too gud idea...very innovative recipe...

எல் கே said...

வித்தியாசாமான ஒன்று

Nithu Bala said...

Wow! Geetha..very delicious and healthy recipe..I'l try this for sure..

Srividhya Ravikumar said...

வித்தியாசமான சமையல் குறிப்பு... நன்றாக உள்ளது..நன்றி..

சசிகுமார் said...

எதையும் வேஸ்ட் பண்றதில்லைன்னு ஏதாவது சபதம் எடுத்து இருக்கீங்களா அக்கா

Menaga Sathia said...

அசத்திட்டிங்க கீதா!! ரொம்ப மென்மையா இருக்கும் போல..அருமை!!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...நன்றி சித்ரா...நன்றி மகி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி நிது...நன்றி கார்த்திக்...நன்றி ஸ்ரீவித்யா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சசி...நன்றி மேனகா...

vanathy said...

super & healthy!

Raks said...

Looks nice,this too is a cool idea!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...நன்றி ராஜி...

Dhana Lakshmi said...

super sister

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி RD...

Anonymous said...

OMG, This is brilliant. I have scratched my head so many times, trying to think what could be done! I will definitely try this

enrenrum16 said...

அப்பா... பயங்கரமா யோசிச்சு சூப்பரா பண்ணியிருக்கீங்க... நல்ல ஐடியா..

GEETHA ACHAL said...

நன்றி என்றென்றும் 16..

Related Posts Plugin for WordPress, Blogger...