என் வீட்டு தோட்டதில் - மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரையினை சாப்பிடுவதால் வாய்புண், வயிற்று புண் போன்றவை சீக்கிரம் குணமடையும்.

இந்த கீரையில் அதிக அளவு விட்டமின்ஸ் இருக்கின்றது…இதனை அடிக்கடி சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது….

போன வருடம், இங்கு Libraryயில் plant exchange செய்யும் பொழுது இந்த செடியினை பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது….மணத்தக்காளி கீரையினை கடையில் கூட இங்கு யூஸில் பார்த்து கிடையாது….அதனால அப்படி ஒரு ஆச்சரியம்

அப்புறம் என்னசெடியினை வீட்டிற்கு கொண்டு வந்து வளர்தேன்அதன்  பிறகு இந்தியாவிற்கு விடுமுறைக்கு போய்விட்டு திரும்பும் பொழுது நல்ல snow…

அப்புறம் நினைத்து கொண்டேன் இனிமேல் ஊருக்கு போனால் தான் மணத்தக்காளி கீரையினை பார்க்கமுடியும் என்று…..பார்த்தால் போனவருடம் செடி வந்த சமயம் சில பழங்கள் கீழே விழந்து இருக்கவேண்டும்இப்பொழுது செடியாகிசெடியில் கீரையும் காயுமாக இருக்கின்றது…..

மணத்தக்காளி மட்டும் இல்லாங்க இந்த தக்காளி செடியும் போனவருடம் போட்ட பொழுது விதை விழுந்து இருக்க வேண்டும்…நிறைய செடி வந்து இருக்கின்றது…அதனை தனி தனியாக எடுத்து நட்டு இருக்கின்றேன்….இப்ப தான் செடியில் பூ பூக்க தொடங்கி காய் தொடங்கின்றது….

ஆஹா…இது தானாக வந்த செடியில்லை…தக்காளி செடியினை காசு கொடுத்து வாங்கிவந்தேன்…அதான் சீக்கிரமாக காய்க்க ஆரம்பித்துவிட்டதோ..

மீண்டும் அடுத்த வருடமும் இதே போல செடிகள் தானாக வரும் என்று நினைக்கிறேன்…. வாங்க அந்த கீரையினை வைத்து செய்து கூட்டினையும் நீங்களும் ருசித்து பாருங்க…நன்றி…
மணத்தக்காளி கீரை கூட்டு 
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         மணத்தக்காளி கீரை – 1 கட்டு
·         பாசிப்பருப்பு – 1/2 கப்
·         துவரம் பருப்பு – 1/2 கப்

நறுக்கி கொள்ள  வேண்டிய பொருட்கள் :
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 2
·         பச்சை மிளகாய் – 2

கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு + வெந்தயம் - சிறிதளவு
·         காய்ந்த மிளகாய் – 2
·         பூண்டு – 4 பல் நசுக்கியது

செய்முறை :
·         கிரையினை சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாயினை வெட்டி கொள்ளவும்.

·         பிரஸர் குக்கரில் பாசிப்பருப்பு + துவரம்பருப்பு + கீரை + வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாய் சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.

·         பிரஸர் அடங்கியதும், கூட்டினை சிறிது மசித்து கொள்ளவும்.

·         கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கூட்டில் சேர்க்கவும். சுவையான சத்தான மணத்தக்காளி கீரை கூட்டு ரெடி.

39 comments:

Nithya said...

Ada :) thaana thidirnu nenaikaadhappo ipdi chedi valandha yevlo sandosama irukum nu nenachu paaka mudiyudhu :)

sooper photos and arumayaana dish :)

சாருஸ்ரீராஜ் said...

ungkal thootam nalla irukku geetha , enakku piditha kootu

Srividhya Ravikumar said...

எனக்கு பிடித்த கீரை.. அதுவும் அதன் பழம் ரொம்ப பிடிக்கும்... கூட்டு நன்றாக உள்ளது.. நன்றி அக்கா...

sakthi said...

அதிகம் கீரை சமையலில் சேர்த்துகொள்வேன் இந்த ரெசிபி கண்டிப்பாக முயன்று பார்க்கிறேன்!!!

தெய்வசுகந்தி said...

உங்க தோட்டம் நல்லா இருக்குது கீதா!!
நல்ல சத்தான கூட்டு!!!!

Menaga Sathia said...

தோட்டமும் ரெசிபியும் சூப்பர்ர்!!

ஸாதிகா said...

தோட்டமும் அருமை.கீரை கூட்டும் அருமை.

Pavithra Elangovan said...

Geetha i really miss this keerai after coming to US. Atleast rarely i was getting in LA. but after coming to MN no way.. wish I am near your place to have a bunch!!!! will you???

vanathy said...

கீதா, உங்கள் அட்ரஸ் சொல்லுங்க வீட்டிற்கே வரேன். மணத்தக்காளி என்றால் கொள்ளை விருப்பம் எனக்கு. அருமையா இருக்கு உங்கள் கார்டின்.

Priya Suresh said...

Woww beautiful garden clicks, manathakkali keerai kootu pakkura pothey saapidanam pola irruku...yennaku romba pidicha keerai:)..

Angel said...

ahaa geetha u.s il manathakkaliya.how did you get it there.could you give the english name .i waana try if its available in u.k.lovely keeari .it goes well with pappadams.(appalam)

ஜெய்லானி said...

யக்கோவ்...!! இதுக்கு உப்பு போட வேனாமாஆஆஆஆ????????(( ச்சே.. எங்க போனாலும் இந்த சந்தேகம் போக மாட்டேங்குது ))செடிகள் பார்க்க அழகா இருக்கு . கண்ணுக்கு குளிச்சியா

Vijiskitchencreations said...

என்ன கீதா அப்ப அடுத்த தடவை நேரா அல்பானிக்கு ஒரு விசிட். ம். லக்கிப்பா. உப்பில்லாமல் சமைச்சிட்டிங்களா, நானும் ஜெய் மாதிரி சந்தேகமா கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது தான் முதல் வேலை.

Mahes said...

Such a nice blog, congrats! I will be a regular here, so many lovely recipes.

GEETHA ACHAL said...

Nithya said...
//Ada :) thaana thidirnu nenaikaadhappo ipdi chedi valandha yevlo sandosama irukum nu nenachu paaka mudiyudhu :) //உண்மை தான் நித்யா...இப்படி வளர்கின்றது மிகவும் சந்தோசமாக தான் இருக்கும்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாருஅக்கா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்ரீவித்யா...நன்றி சக்தி..கண்டிப்பாக செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தெய்வசுகந்தி...நன்றி மேனகா...நன்றி ஸாதிகா அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா...கண்டிப்பாக எங்க வீட்டிற்கு வாங்க...ஒரு கட்டு என்ன...செடியினையே கொடுக்கிறேன்...வீட்டில் வளருங்க...MNயில் எங்கு இருக்கிங்க...நானும் MNஇல் தான் முன்பு இருந்தோம்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி..உங்கள் அட்ரஸ் தானே வேண்டும்...தருகிறேன்...ஆனால் கண்டிப்பாக வீட்டுக்கு வரவேண்டும்...நன்றி வானதி..

ஹைஷ்126 said...

சூப்பர் கார்டன் ஃப்ரெஷ் கீரை கூட்டு. ஆனால் சகோதரர் ஜெயலானி சொன்னது போல் உப்புதான் இல்லை :)

வாழ்க வளமுடன்

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா,,,,

GEETHA ACHAL said...

angelin said...
//ahaa geetha u.s il manathakkaliya.how did you get it there.could you give the english name .i waana try if its available in u.k.lovely keeari .it goes well with pappadams.(appalam)//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஏஞ்சலின்...இதன் ஆங்கில பெயர் தெரியவில்லை...தேடி பார்த்துவிட்டு சொல்கிறேன்...நன்றி...

Mahi said...

செடிங்களைப் பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு கீதா! பகிர்ந்ததுக்கு நன்றி!!

வீட்டிலேயே மணத்தக்காளி கீரை..சூப்பர் போங்க!எங்க ஊர் லைப்ரரில எல்லாம் இந்த ப்ளான்ட் எக்ஸ்சேஞ்ச் இருக்கான்னு தெரில..அது என்னன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.

ப்ரெஷ் கீரை கூட்டு..சூப்பராதான் இருக்கும்! :)

Raks said...

I love the fruit of this very much,I used to eat this straight away from my garden too when I was kid,good for mouth ulcer :)

Valarmathi Sanjeev said...

Beautiful Garden pic...Kootu looks super and yummy.

my kitchen said...

Ennaku migavum piditha keerai,en amma arumaiya kottu pannuvanga.Ungalodathum rommba nalla erruku.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள செல்வி!

தோட்டம் அருமை கீதா! திடீரென்று ஊருக்குப்போய் வந்தது மாதிரி இருந்தது பார்த்தபோது! அத்தனை பசுமை! வீட்டில் விளையும் கீரையை சமைத்தால் அதற்கு தனி ருசிதான்!!

Kanchana Radhakrishnan said...

தோட்டமும் கீரை கூட்டும் super.

Thenammai Lakshmanan said...

தோட்டக் கீரைன்னவுடனே ருசி அதிகமாத் தெரியுது கீதா..:)

GEETHA ACHAL said...

ஜெய்லானி said...
//யக்கோவ்...!! இதுக்கு உப்பு போட வேனாமாஆஆஆஆ????????(( ச்சே.. எங்க போனாலும் இந்த சந்தேகம் போக மாட்டேங்குது ))//சில சமயம் இப்படி தான் ஜெய்லானி..உப்பு போடாம சாப்பிட்டால் நல்லது என்பதால் இப்படி...சரி..விடுங்க...அடுத்ததடவை உப்பு போட்டு சமைத்துவிடலாம்...நீங்கள் விரும்பினால் உப்பு போட்டு கொள்ளுங்க...நன்றி...தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி விஜி...எப்படி இருக்கின்றிங்க..குழந்தைகள் நலமா...மிகவும் நன்ரி...தங்கள் வருகைக்காக காத்துகொண்டு இருக்கின்றேன்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மகேஷ்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஹைஷ் அங்கிள்...உண்மை தான்...உப்பு போட மறந்துவிட்டேன்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ராஜி...நன்றி வளர்மதி...நன்றி செல்வி..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மனோ ஆன்டி...நன்றி கஞ்சனா...நன்றி தேன் அக்கா...

Unknown said...

Wow!!! mathathkkali keerai kuttu luks very delicious...So happy to see the plants and fresh leaves.

Unknown said...

aahaa..enna rusi enna rusi...super geetha sis

kiranshyapriya said...

hi Geetha akka ,

Ennakku soya meal maker vaithu dishes seithu posting podunka

Related Posts Plugin for WordPress, Blogger...