கொண்டைக்கடலை தோசை & ஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி - Channa Dosai & Groundnut Chutney - Side Dish for Idly and Dosa


கொண்டைகடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிக நார்சத்து,புரோட்டின் நிறைந்தது. இதில் குறைந்த அளவு Saturated Fat & Cholesterol இருக்கின்றது

 இதில் Polyunsaturated Fat இருக்கின்றது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் Cholesterolலினை குறைக்க உதவுகின்றது.


இந்த தோசை அதிக சத்துகள் கொண்டது…2 வாரத்திற்கு ஒரு முறை இப்படி சாப்பிட்டால் உடலிற்கு மிகவும் நல்லது

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கொண்டைகடலை – 3 கப்
·         பிரவுன் ரைஸ் / இட்லி அரிசி – 1 கப்
·         வெந்தயம் – 1 மேஜை கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         கொண்டைக்கடலை + பிரவுன் ரைஸ் + வெந்தயம் தனி தனியாக குறைந்த்து 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
·         மிக்ஸியில் வெந்தயம் + கொண்டைகடலையினை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். பிரவுன் ரைஸினை கொஞ்சம் கொரகொரவென அரைக்கவும்.

·         இரண்டு மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
·    இந்த மாவில் உடனே தோசை சுடலாம்…மிகவும் சுவையாக இருக்கும்..தோசைகல்லினை காயவைத்து தோசை சுடவும்...சுவையான சத்தான தோசை ரெடி.
கவனிக்க :
இந்த மாவினை 2 மணி நேரம் கழித்து தோசை சுட்டால் இன்னும் மெருகலாக சுவையாக இருக்கும்.  இந்த மாவில் உடனே தோசை சுடலாம்…மிகவும் சுவையாக இருக்கும்.
ஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி

நான் எப்பொழுதும் வேர்க்கடலை சட்னியினை வெரும் வேர்க்கடலை மட்டும் தான் சேர்த்து செய்வேன்…ஒரு நாள் வேர்க்கடலை சட்னிக்கு வேர்க்கடலை குறைவாக இருந்ததால்…அம்மா..இத்துடன் சிறிது பொட்டுக்கடலையினை சேர்த்து செய்தாங்க…மிகவும் சூப்பராக இருந்த்து…அப்பொழுதில் இருந்து இந்த சட்னியினை இப்படி தான் செய்வது…நீங்களும் செய்து பாருங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வேர்க்கடலை – 1/2 கப்
·         பொட்டுக்கடலை – 1/4 கப்
·         பச்சைமிளகாய் – 5
·         புளி – மிகவும் சிறிதளவு
·         உப்பு – தேவைக்கு

தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு + உளுத்தம்பருப்பு  - தாளிக்க
·         கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·         வேர்க்கடலையினை வெறுமனே வறுத்து தோலினை நீக்கி கொள்ளவும்.
·         வேர்க்கடலை + பொட்டுகடலை + பச்சைமிளகாய் + புளி + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·         கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான சட்னி ரெடி.

குறிப்பு :
நான் சில சமயம் தோலுடனே வேர்கடலையினை போட்டு சட்னி செய்வேன்..அதுவும் வித்தியசமாக இருக்கும்…

57 comments:

kousalya raj said...

super dosainka...

ஹைஷ்126 said...

இதுவரை சாப்பிட்டது இல்லை :)

வாழ்க வளமுடன்

Srividhya Ravikumar said...

அருமையான தோசை... கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்..

எல் கே said...

brown ricethan inga kidaikaathu

Pavithra Elangovan said...

Geetha i too make kondaikadalai dosai but different proportion.. I loved this too. noted down ..will surely try it out. And peanut chutney one of my very fav ...

Nithya said...

Channa dosa is absolutely new to me. Kandippa try pannaren :)

Mahi said...

சூப்பர் தோசை&சட்னி கீதா! அந்த குட்டிதோசை ரொம்ப நல்லாஇருக்கு!:)

Pavithra Srihari said...

super !!! am on diet and looking out for some really protein rich food and this is perfect ... will make it :)

சாருஸ்ரீராஜ் said...

healthy dosa with yummy chutney , i will try it

athira said...

சூப்பர் தோசை கீதாச்சல், இவ்வளவு மெல்லிசாக வந்திருக்கிறதே.

ஆனால் இந்தக் கொண்டைக்கடலை சாப்பிட்டால், வாய்வுக் கோளாறுகள் அதிகமாகி, வயிறு பெரிதாக வருவதுபோலத் தெரிகிறதே. அதுக்கு ஏதும் மருந்து தெரியுமோ? எனக்கு இக்கடலை விருப்பம், ஆனால் சாப்பிடப் பயம்.

Krishnaveni said...

protein rich combo, looks so good and would love to grab that plate

Priya dharshini said...

Nice recipe...i am longing for brown rice ,but not avail here da.that chutney also luks healthy and delicious..

Geetha6 said...

super!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப நல்லாயிருக்கு.

Angel said...

oh dear im the first .since im in uk i always miss the first place.very nice and yummy dosa geetha.im gonna try it today.my friend used to add lil mint leaves to peanut chutney .angelin

Priya said...

கொண்டைக்கடலை தோசையா... இதுவரை தெரியாத ஒன்று. நன்றி கீதா!விரைவில் செய்து பார்க்கணும்.

Niloufer Riyaz said...

Chutney matrum Dosai parkum polude sapidavendum pola irukkiradu, ezhidil thayarikks koodiya Dosai matrum Chutney ARMAI!!!!

Raks said...

Very new to me,but looks really good,and peanut chutney also sounds good,comes handy when we dont have coconut in hand!

Nithu Bala said...

Geetha, ethu pudusa irukku..kandipa seidhu pakkaren..rombha crispy ya irukku..

Aruna Manikandan said...

love this healthy instant dosa.
Thanks for sharing :-)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கௌசல்யா...நன்றி ஹைஷ் அங்கிள்...ஒருமுறை நேரம் கிடைத்தால் செய்து சாப்பிட்டு பாருங்க....நன்றி ஸ்ரீவித்யா...கண்டிப்பாக செய்து பாருங்க..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கார்த்திக்...பிரவுன் ரைஸ் கிடைக்கவில்லை என்றால் இட்லி அரிசி சேர்த்து கொள்ளலாம்..குறிப்பில் கொடுத்து இருக்கின்றேன்…மிகவும் மெருகலகாக வரும்…செய்து பாருங்க…

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா…கண்டிப்பாக செய்து பாருங்க…தோசைமாவு பதத்திற்கு அரைத்து செய்தால் அருமையாக இருக்கும்…

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி நித்யா...கண்டிப்பாக செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மகி...எல்லாம அக்ஷ்தா குட்டிக்கு சுட்டது தான்...எப்படி இருக்கு...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா...கண்டிப்பாக இதனை செய்து பாருங்க...நாங்களும் டய்ட் இருக்கும் பொழுது இதனை சாப்பிடகிறோம்...நல்லா இருக்கும்...

GEETHA ACHAL said...

athira said...
//சூப்பர் தோசை கீதாச்சல், இவ்வளவு மெல்லிசாக வந்திருக்கிறதே.//தங்கள் கருத்துக்கு நன்றி அதிரா…ஆமாம் அதிரா இதனை கொஞ்சம் தண்ணீயாக கரைத்து தோசை சுட்டால் மிகவும் மெல்லியதாக மெருகலாக வரும்..கண்டிப்பாக செய்து பாருங்க…

//ஆனால் இந்தக் கொண்டைக்கடலை சாப்பிட்டால், வாய்வுக் கோளாறுகள் அதிகமாகி, வயிறு பெரிதாக வருவதுபோலத் தெரிகிறதே. அதுக்கு ஏதும் மருந்து தெரியுமோ? எனக்கு இக்கடலை விருப்பம், ஆனால் சாப்பிடப் பயம்.//உங்களுக்கு அப்படி எதாவது இருந்தால் 1 தே.கரண்டி பெருங்காயம் சேர்த்து மோர் குடித்து பாருங்க…சரியாகிவிடும்…

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு அக்கா...கண்டிப்பாக செய்து பாருங்க...நன்றி கிருஷ்ணவேணி...நன்றி கீதா...

GEETHA ACHAL said...

ப்ரியா...அங்கு கைகுத்தல் அரிசி கிடைக்கின்றது ..அதில் செய்து பாருங்க...அப்படி இல்லை என்றாலும் பராவயில்லை...இட்லி அரிசியில் செய்து பாருங்க...அதுவும் சூப்பராக இருக்கும்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி புவனோஸ்வரி...நன்றி ஏஞ்சலின்...கண்டிப்பாக புதினா சேர்த்து செய்து பார்க்கிறேன்...நன்றி..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...கண்டிப்பாக செய்து பாருங்க...நன்றி..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலோஃபர்...நன்றி ராஜி...நன்றி நிது...நன்றி அருணா...

தெய்வசுகந்தி said...

நல்ல சத்தான தோசை மற்றும் சட்னி!!!!

Kanchana Radhakrishnan said...

சூப்பர் தோசை கீதா.

Unknown said...

kondakadalai dosai super,never had it before.after seeing urs,have to try that...thanks for sharing.

Menaga Sathia said...

தோசை நல்லா மொறுகலா இருக்கு,சட்னியும் அருமை!!

Shama Nagarajan said...

healthy different dosai

Gayathri said...

ரொம்ப வித்தியாசமான சத்தான சமயல் குறிப்பு...நன்றி செய்து பாக்கரேன்.

Mythreyi Dilip said...

Protein rich dosa and chutney, great for kids:)

Priya Suresh said...

Dosa superaa irruku, peanut chutney and dosa, paathathume pasikuthu..

vanathy said...

வேர்க்கடலை சட்னி எனக்கு மிகவும் பிடிக்கும். செய்து பார்க்க வேண்டும். சூப்பர் ரெசிப்பி, கீதா.

Anonymous said...

ஹாய் எல்லா தோசையும் எனக்கே எனக்கே ...சூப்பர் ரெசிபி கீதாஜி ...நானும் செஞ்சு பார்க்கறேன் ..இந்த போட்டோ லே பார்த்தா உடன் சாபிடணம் போல் இருக்கு ...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தெய்வசுகந்தி...நன்றி கஞ்சனா...நன்றி ப்ரேமலதா...நன்றி மேனகா..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஷாமா...நன்றி காயத்ரி...நன்றி மைத்ரேரி...நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...நன்றி சந்தியா...

Dershana said...

thats a nice one geetha. will try this.

Mahes said...

I tried this y'day, didn't come out like it's shown in the picture. It was like Adai dosai and it wasn't easy to spread. What did I do wrong?

GEETHA ACHAL said...

நன்றி மகேஷ்...

//didn't come out like it's shown in the picture. It was like Adai dosai and it wasn't easy to spread.//மாவினை நன்றாக அரைத்து தோசை மாவு பதத்திற்கு இருந்தால் கண்டிப்பாக எளிதில் பரவி மெல்லியதாக தோசை சுடவரும்..

மாவில் தண்ணீர் சிறிது சேர்த்து சுட்டு பாருங்க...இல்லை என்றால் சிறிது நேரம் புளிக்கவிட்டு சுட்டுபாருங்க...கண்டிப்பாக நன்றாக வரும்...நானும் எப்பொழுதும் இதே மாதிரி தான் செய்வேன்...நல்லா வரும்...

Mahes said...

Thank Geetha. Will try it again tonight, I have some leftover batter.

Mahes said...

It was the same Geetha, was hard to spread but it was tasty though. I sprinkled onions, cilantro and made it like Adai. Next time will grind the batter to fine consistency. Btw, Lovely blog with lots of healthy recipes, keep up the good work. Thanks for visiting my blog.

Parimalasanjai said...

தோசை மிகவும் சுவையாக இருந்து. வித்தியாசமான உணவாக இருபத்தினால் அனைவரும் விரும்பினர் ஆரோகியமான உணவு பொருள்


by
G. Parimala Sanjai

Malini said...

hi geetha i tried this as well as ur saravana bhavan sambhar today it was a super dooper hit.... thanks geetha.. ur recipes are healthy n tasty... keep on blogging

Gayathri said...

This dosai came out very well. I made it with red rice so the colour was also very beautiful! Thanks a lot for such an awesome recipe :)

sasi said...

Hai geetha, your work is awesome.... keep rocks... I have tried your channa dosa but I feel the raw smell of channa in dosa what to do for that?

sasi said...

Hai geetha, your work is awesome.... keep rocks... I have tried your channa dosa but I feel the raw smell of channa in dosa what to do for that?

sasi said...

Hai geetha, your work is awesome.... keep rocks... I have tried your channa dosa but I feel the raw smell of channa in dosa what to do for that?

GEETHA ACHAL said...

Thanks Sasi. Did you grind it well. Sometimes if its big pieces/not grinded well may be you would get it.
Did you cook the dosa well. Cooking it properly doesn't give you raw smell.

Related Posts Plugin for WordPress, Blogger...