செட்டிநாடு சிக்கன் பிரியாணி - Chettinad Chicken Biryani

       print this page Print

  
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பாஸ்மதி அரிசி – 3 கப்
·         வெங்காயம் – 2
·         தக்காளி – 2
·         பச்சைமிளகாய் – 2, தேங்காய் - 1
·         நெய் – 2 மேஜை கரண்டி
·         உப்பு ,எண்ணெய்- தேவைக்கு

 சிக்கனுடன் ஊறவைக்க :
·         சிக்கன் – 1/2 கிலோ
·         தயிர் – 1/2 கப்
·         மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·         இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
·         உப்பு – 2 தே.கரண்டி

அரைத்து கொள்ள வேண்டிய பொருட்கள் :
·         காய்ந்த மிளகாய் – 2
·         பச்சைமிளகாய் – 2
·         வெங்காயம் – 1 பெரியது
·         பூண்டு – 10 பல்
·         சோம்பு – 2 தே.கரண்டி
·         கிராம்பு, ஏலக்காய் , பட்டை – 1
·         இஞ்சி – 2 துண்டு
·         புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் + நெய் – 1 மேஜை கரண்டி
·         பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை – 1
·         சோம்பு – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·         சிக்கனை சுத்தம் செய்து சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து குறைந்தது 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
·         அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைத்து கொள்ளவும்.
·         அரிசியினை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். தேங்காயில் இருந்து பால் எடுத்து கொள்ளவும்.
·         பாத்திரத்தில் நெய் ஊற்றி ஊறவைத்த அரிசியினை தண்ணீர் வடித்து வதக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
·         பாத்திரத்தில் நெய்+ எண்ணெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் வெங்காயம் + அரைத்துவைத்துள்ள மசாலா + தக்காளி + ஊறவைத்துள்ள சிக்கன் என ஒவ்வொன்றாக தனி தனியாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.
·         3 கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால் + 2 கப் தண்ணீர் + தேவையான அளவு உப்பு + புதினா இலை சேர்த்து ஊற்றி கொதி வந்தவுடன் அரிசியினை சேர்க்கவும்.
·         அரிசி 3/4 பாகம் வெந்தவுடன் அதனை தம் போடவும்.
·         சுவையான செட்டிநாடு சிக்கன் பிரியாணி ரெடி. இதனை ராய்தா, முட்டை, சிக்கன் மசாலா போன்றவையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

குறிப்பு :
·         அரிசியினை 10 நிமிடங்களுக்கு மேலாக ஊறவைக்க வேண்டாம்.
·         ஊறவைத்த அரிசியினை தனியாக 1 மேஜை கரண்டி நெய்யில் வறுத்து கொண்டால் நெய்யினை குறைத்து உபயோகிக்கலாம்…சுவையாகவும் இருக்கும்.
·         இதே மாதிரி மட்டனிலும் செய்யலாம்…மட்டனில் செய்யும் பொழுது தேங்காய் பால் சேர்க்க தேவையில்லை.


தண்ணீர் சேர்க்காமல் இத்துடன் Chicken Stock சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்

27 comments:

Unknown said...

பிரியாணியில் தேங்காய் பாலா

ஹும் ...

முதன் முறையாக பார்க்கிறேன்

இன்னும் டேஸ்ட்டாக தான் இருக்கும் போல ...

Cool Lassi(e) said...

A delicious and very tempting mutton biryani. Thanks to u and Menaga.

Menaga Sathia said...

மிகவும் அருமையாக இருக்கு...செய்து பார்த்ததற்க்கு மிக்க நன்றி கீதா மற்றும் இந்த சுவையான குறிப்பு தந்த திருமதி.சோலை அவர்களுக்கும் நன்றி!!

பிரகாசம் said...

இதே முறையில் என் மனைவி செய்யும் காளான் பிரியாணி மற்றும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் நாங்கள் பாஸ்மதிஅரிசி உபயோகித்ததில்லை. சாதாரண பச்சரிசி அல்லது பிரியாணி அரிசி மட்டும்தான் உபயோகித்திருக்கிறோம். தேங்காய்ப்பால் சேர்த்துவதால் சாதம் பருக்கைகள் ஒட்டாமல் பிரிந்து வந்து சுவையாக இருக்கும்

athira said...

ஆ.... கீதா ஆச்சல்....,
பிரியாணிக்கு மேல அ.கோ.முட்டையையும் வைத்து, என்னை... இருக்கவும் முடியாமல், உண்ணவும் முடியாமல் பண்ணிட்டீங்களே.... இது நியாயமோ??

பிரியாணி.... Awesome.....

ஜெய்லானி said...

பிரியானியாஆஆ அப்படியே எனக்கும் ஒரு பார்ஸல்

Priya Suresh said...

Yummyilicious briyani, pakkura pothey yechil ooruthu..oru parcel pls..

Chitra said...

எனக்கு ரெண்டு பொட்டலம் பிரியாணி பார்சல்!

தெய்வசுகந்தி said...

Looks Good!!!!!!1

Pavithra Elangovan said...

Mmmmmmmmmm biriyani very fav for every one... this looks super delicious geetha.

Valarmathi Sanjeev said...

Briyani looks tempting and yummy.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால் அண்னா...கண்டிப்பாக செய்து பாருங்க...அருமையாக இருக்கும்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கூல்....குறிப்புக்கு மிகவும் அன்றி மேனகா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பிரகாசம்...ஆமாம் நீங்க சொல்வது மாதிரி செய்தால் சூப்பராக இருக்கும்.நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா..என்னது அதிரா...இது எல்லாம் சும்மா...வாங்க எங்க வீட்டிக்கு அதிராவுக்கு இல்லாததா என்ன....அன்புடன் அழைக்கிறேன்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...பார்சல் தானே அனுப்பிவ்விடேன்...நன்றி ப்ரியா...நன்றி சித்ரா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா...

Unknown said...

Wow mouthwatering here,inviting briyani...luks perfect!

vanathy said...

Wow! super biryani. Looking yummy!

Mythreyi Dilip said...

Oh this is increasing my appetite dear, my mom also make Biryani with coconut milk. I can visualize its delicious taste, yummy:)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...நன்றி வானதி...நன்றி மைத்ரேயி...

my kitchen said...

Briyani manakuthu,Sunday try pannida vendiyathuthan

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி செல்வி...

Anonymous said...

simply superb :-)

Nithya said...

thum epdi podirathu geetha?

manju... said...

yes me too have to know that tham epdi podanum....

GEETHA ACHAL said...

நன்றி நித்யா .

நன்றி மஞ்சு..

தம் போடும் பொழுது கீழே ஒரு தோசை கல் அல்லது கணமான பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி விடவும். அதன் நடுவில் இந்த பாத்திரத்தினை வைக்கவும்.

தண்ணீர் கொதிக்கும் பொழுது அதில் இருந்து வரும் ஆவியே சாத்தத்தினை வேகவைக்க போதும்...

Related Posts Plugin for WordPress, Blogger...