கொள்ளு சாதம் - Kollu Rice / Horsegram Rice

உடல் எடையினை குறைக்க விரும்புவோர் அடிக்கடி கொள்ளுவினை உணவில் சேர்த்து கொண்டால் கண்டிப்பாக பயன் பெறுவோம்…எப்பொழுது ரசம், சூப், குழம்பு என்று வைக்காமல் இப்படி சாதமாக செய்து சாப்பிட்டு பாருங்க…அருமையாக இருக்கும்…நன்றி…

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வேகவைத்த கொள்ளு – 1 கப்
·         வேகவைத்த சாதம் – 2 கப்
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகு தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு
·         எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி

தாளிக்க :
·         நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு + உளுத்தம்பருப்பு தாளிக்க

பொடியாக நறுக்கி கொள்ள :
·         வெங்காயம் – 1
·         பச்சைமிளகாய் – 2
·         கருவேப்பில்லை – 5 இலை
·         கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை :
·         கொள்ளினை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக கொரகொரவென அரைத்து கொள்ளவும். பொடியாக நறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெட்டி கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பினை தாளிக்கவும்.

·         இத்துடன் வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லை சேர்த்து 3 - 4 நிமிடம் வதக்கவும்.

·         வதக்கிய பொருட்களுடம் மஞ்சள் தூள் + மிளகுதூள் + உப்பு + அரைத்த கொள்ளுவினை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

·         கடைசியில் எலுமிச்சை சாறினை சேர்க்கவும். இந்த கலவையினை சாதத்துடன் சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவவும். சுவையான சத்தான கொள்ளு சாதம் ரெடி.


குறிப்பு :
கொள்ளுவினை பிரஸர் குக்கரில் போட்டு 5 – 6 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.
தண்ணீர் வடித்து கொள்ளினை எடுத்து கொண்டு, அந்த தண்ணீரில் சூப் அல்லது ரசம் வைக்கலாம்.

40 comments:

Srividhya Ravikumar said...

அம்மா செய்வார்கள் இதை... நன்றாக இருக்கிறது..

Unknown said...

Healthy rice,Luks very nice...

ஸாதிகா said...

கொள்ளில் சாதம்..யம்மாடி.

Shanthi said...

Healthy and perfect rice

சசிகுமார் said...

சத்தான சாப்பாடு போடுறாங்கப்பா எனக்கு நாளாவுது சீட் தான் கெடச்சது

Jey said...

நல்லாருக்குமா மேடம்?.

Nithu Bala said...

Very delicious rice..amma used to make many dishes with kollu..

vanathy said...

Very healthy & super recipe!

Cool Lassi(e) said...

Mom makes rasam out of this. Nice recipe. Truly healthy one!

Suganya said...

Sounds so healthy. I used to do kollu rasam sometimes....Never tried rice. really want to give it a try....

சாருஸ்ரீராஜ் said...

கொள்ளு சாதம் சூப்பர் ...

Menaga Sathia said...

மிக அருமையான ஹெல்தி சாதம்...

Malar Gandhi said...

I too make kollu saadham, more or less similar to ur method, but was skeptical to blog about it. Its very taste and healthy na.

Thenammai Lakshmanan said...

கொள்ளில் சாதம் செய்தது இல்லை.. செய்து பார்க்கி்றேன் கீதா.. பார்க்க நல்லா இருக்கு

Thenammai Lakshmanan said...

கொள்ளில் சாதம் செய்தது இல்லை.. செய்து பார்க்கி்றேன் கீதா.. பார்க்க நல்லா இருக்கு

Thenammai Lakshmanan said...

கொள்ளில் சாதம் செய்தது இல்லை.. செய்து பார்க்கி்றேன் கீதா.. பார்க்க நல்லா இருக்கு

Thenammai Lakshmanan said...

கொள்ளில் சாதம் செய்தது இல்லை.. செய்து பார்க்கி்றேன் கீதா.. பார்க்க நல்லா இருக்கு

Thenammai Lakshmanan said...

கொள்ளில் சாதம் செய்தது இல்லை.. செய்து பார்க்கி்றேன் கீதா.. பார்க்க நல்லா இருக்கு

Thenammai Lakshmanan said...

கொள்ளில் சாதம் செய்தது இல்லை.. செய்து பார்க்கி்றேன் கீதா.. பார்க்க நல்லா இருக்கு

Thenammai Lakshmanan said...

கொள்ளில் சாதம் செய்தது இல்லை.. செய்து பார்க்கி்றேன் கீதா.. பார்க்க நல்லா இருக்கு

Thenammai Lakshmanan said...

கொள்ளில் சாதம் செய்தது இல்லை.. செய்து பார்க்கி்றேன் கீதா.. பார்க்க நல்லா இருக்கு

தெய்வசுகந்தி said...

எனக்கு ரொம்ப பிடித்தது !!! நல்லா இருக்குது!!!

Chitra said...

looks very nice.

Mythreyi Dilip said...

I used to make only soups and patties with kollu, interesting recipe dear:)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்ரீவித்யா...நன்றி ப்ரேமலதா...நன்றி ஸாதிகா அக்கா...நன்றி சாந்தி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசிகுமார்....நன்றி ஜெய்...நல்லா இருக்கும்...செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிது...நன்றி வானதி...நன்றி கூல்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சுகன்யா...நன்றி சாரு அக்கா...நன்றி மேனகா....நன்றி மலர்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தேன் அக்கா...கண்டிப்பாக செய்து பாருங்க...நல்லா இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தெய்வசுகந்தி...நன்றி சித்ரா...நன்றி மைத்ரேயி...

Valarmathi Sanjeev said...

Healthy and yummy one, looks delicious.

Kanchana Radhakrishnan said...

கொள்ளு பொடி செய்திருக்கிறேன் சாதம் செய்ததில்லை.செய்து பார்க்கிறேன்.பார்க்க நன்றாக இருக்கிறது கீதா.

Priya Suresh said...

Wat a healthy rice, thanks for sharing Geetha..

ஜெய்லானி said...

ஒரு கிலோ பார்ஸல் பிளிஸ்

Anonymous said...

ஹல்லோ, இப்படி எல்லாம் சொன்னா எங்களுக்கு எப்படி சமைக்கறது புரியும். கொள்ளை கொண்டைக்கடலை மாதிரி ஊறவைச்சு சமைக்க வேணுமா? இதெல்லாம் சொல்ல மாட்டீங்களா? அப்புறம் எப்படி நாங்க கத்துக்கறது. ஹம்ப் =(

பிரச்சர் குக்கரில் ஊறவைக்காமல் சமைத்தால் சமைக்கலாமா? எத்தனையோ சைட் பாத்திருக்கறேன். கொள்ளு போட்டு சாதம் இப்பத் தான் பாக்கறேன். So, WOW!!!

நான், கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, பயறு, கௌப்பி, பளக் ஐட் பீன்ஸ் எல்லாம் அரைச்சு போட்டு தயிர் கலந்து சமைச்சிருக்கேன். கொள்ளு பார்த்தே இல்லை. இதைப்பார்த்த பின்னர் சமைக்கவேணும் போல இருக்கு.முதல்ல தயிர் சாதத்தில் கலந்து சாப்பிட்டு பார்க்கறேன். பின்னர் இது செய்யறேன்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வளர்மதி...நன்றி கஞ்சனா...நன்றி ப்ரியா...நன்றி ஜெய்லானி..ஒரு கிலோ போதுமா...சரி அனுப்பிவிடுகிறேன்...

GEETHA ACHAL said...

அனாமிகா துவாரகன் said...
//ஹல்லோ, இப்படி எல்லாம் சொன்னா எங்களுக்கு எப்படி சமைக்கறது புரியும். கொள்ளை கொண்டைக்கடலை மாதிரி ஊறவைச்சு சமைக்க வேணுமா? இதெல்லாம் சொல்ல மாட்டீங்களா? அப்புறம் எப்படி நாங்க கத்துக்கறது. //தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் முதலில் நன்றி அனாமிகா….கொள்ளினை துவரம்பருப்பு(சாம்பார் பருப்பு) வேகவைப்பது போலவே பிரஸர் குக்கரில் வேகவைக்கலாம்…
Time இருந்தால் 1 - 2 மணி நேரம் ஊறவைத்து பின் 5 நிமிடங்கள் வேகவைத்தாலே போதும் …சீக்கிரமாக வெந்துவிடும்…
//பிரச்சர் குக்கரில் ஊறவைக்காமல் சமைத்தால் சமைக்கலாமா? எத்தனையோ சைட் பாத்திருக்கறேன். கொள்ளு போட்டு சாதம் இப்பத் தான் பாக்கறேன். So, WOW!!!//பிரஸர் குக்கரில் 1 கப் கொள்ளுக்கு 2 கப் தண்ணீர் என்று வைத்து 5 – 6 விசில் வேகவைத்தால் பொதும் வெந்துவிடும்….

//நான், கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, பயறு, கௌப்பி, பளக் ஐட் பீன்ஸ் எல்லாம் அரைச்சு போட்டு தயிர் கலந்து சமைச்சிருக்கேன். கொள்ளு பார்த்தே இல்லை. இதைப்பார்த்த பின்னர் சமைக்கவேணும் போல இருக்கு.முதல்ல தயிர் சாதத்தில் கலந்து சாப்பிட்டு பார்க்கறேன். பின்னர் இது செய்யறேன் //கண்டிப்பாக செய்து பாருங்கள்..மிகவும் நல்லா இருக்கும்…நன்றி

sss said...

geetha அக்கா நான் சுதா..உங்கள் கொள்ளு சாதம் கலர்ஃபுல்லா நல்லா இருக்கு...என் அம்மா வேர மாதிரி பன்னுவாங்க...சாதத்தோடவே கொள்ளு+பூண்டு+உப்பு சேர்த்து வேகவைத்து கொடுப்பாங்க...காரம் இருக்கது ஆனால் நல்லா இருக்கும்.

Unknown said...

super taste priyani.Thka for ur Tips and cooking style also

Unknown said...

super taste priyani.Thka for ur Tips and cooking style also

Related Posts Plugin for WordPress, Blogger...