வெங்காய தக்காளி சட்னி - Venkaya Thakkali Chutney / Onion Tomato Chutney

இந்த வெங்காய சட்னி மிகவும் சுவையாக இருக்கும்..

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெங்காயம் – 2
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் – 2 + 2
·         புளி - சிறிதளவு
·         உளுத்தம்பருப்பு + கடுகு – 1 தே.கரண்டி
·         தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு + உளுத்தம்பருப்பு – தாளிக்க

கடைசியில் சேர்க்க :
·         பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளியினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
·         கடாயில் கடுகு + உளுத்தம்பருப்பினை வறுத்து கொள்ளவும்.

·         வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாயினை கடாயில் போட்டு வதக்கி கொள்ளவும்.
·         மிக்ஸியில் முதலில் கடுகு + உளுத்தம்பருப்பு +காய்ந்த மிளகாய் + தேங்காய் துறுவல் + புளி போட்டு மைய அரைக்கவும்.

·         இத்துடன் வதக்கி வைத்துள்ள பொருட்களை + உப்பு சேர்த்து கொரகொரவென் அரைத்து கொள்ளவும்.
·         கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

·         சட்னியில் தாளிப்பு + கொத்தமல்லி சேர்த்து கலக்கவும். சுவையான சட்னி ரெடி. இதனை இட்லி , தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

கவனிக்க :
கடைசியில் தாளிக்க மட்டும் எண்ணெய் சேர்த்தால் போதும்…மற்றபடி வெங்காயம் தக்காளி வதக்கும் பொழுது எல்லாம் எண்ணெய் சேர்க்க தேவையில்லை….

33 comments:

எல் கே said...

நாங்கள் அடிக்கடி செய்யும் ஒன்று

Pavithra Elangovan said...

Heavenly combo.. idli and tomato chutney..

Jey said...

எனக்கு பிடிச்சது தேங்காய் சட்னிதான், வீட்டு அம்மனிக்கு தக்காளி சட்னி, இட்லி/தோசை போடும்போது வீட்ல ஒரே ஃபைட்.:)

ஜெய்லானி said...

ஆஹா,,பிடிச்ச ஐட்டம் ஆச்சே..!!

தெய்வசுகந்தி said...

நான் அடிக்கடி செய்யும் சட்னி!! டேஸ்டியாக இருக்கும்.

Anonymous said...

ஒரே பொருட்களைப் போட்டு செய்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு கைக்கணக்கு இருக்கும். டேஸ்ட்டும் வித்தியாசமாக புதுசா இருக்கும். அதனால் என்ன சட்னி போஸ்ட் பார்த்தாலும் செய்து பார்க்கத் தவறுவதில்லை.

காலையில் தோசை தான் செய்கிறோம். தொட்டுக்கொள்ள இதையே செய்தேன். சிறு துண்டு தோசையில் தொட்டு ருசி பார்த்தேன். நன்றாக இருந்தது. தோசை ஊத்திக்கொண்டே எழுதறேன். நன்றி.

வழமையாக‌ தாளித்து கொட்டாமல், தாளித்த பின்னர் அரைத்த விழுதைப் போட்டு ஒரு கொதி கொதிக்க வைத்து நல்லெண்ணெய் உற்றி இறக்குவேன். இன்று ஒரு மாற்றத்திற்கு இப்படி செய்தேன். நன்றி. நன்றி. நன்றி.

Anonymous said...

@ L.K.
இருங்க, எல்.கே அவரு செய்யற மாதிரி எழுதறார். நிஜமாவே சமைப்பீங்களா கார்த்தி சார்? ரொம்ப நல்லவராக இருக்கீங்க. எங்கே எங்கள் ரங்கசை படத்தற அப்பாவி தங்கமணி.

athira said...

நல்ல சட்னி. கா+ப, இரு மிளகாயையும் சேர்த்துச் செய்வது வித்தியாசமாக இருக்கு.

ஹைஷ்126 said...

//athira said...
நல்ல சட்னி.// அப்ப வில்லன்/வில்லி சட்னி என ஏதாவது இருக்கோ?

அத்திரி said...

பேச்சிலரா இருக்கும்போது என்னுடைய பேவரைட் சட்னி இதுதான்........சீக்கிரமா செஞ்சிரலாமே

malarvizhi said...

எனக்கு பிடித்த ,நான் அடிக்கடி செய்யும் சட்னி.சூப்பர்.படம் பார்த்ததும் செய்து சாப்பிட ஆசையாக உள்ளது.

Menaga Sathia said...

நானும் இதுபோல் செய்வதுண்டு..ரொம்ப பிடிக்கும் இந்த சட்னி!!

Priya Suresh said...

Yennaku romba romba pidicha chutney, piramaadham..

Gayathri said...

எனக்கு மிகவும் பிடித்த சட்னி ஆனால் இதுவரை சரியக வரவெ இல்லை உங்க குரிப்புபடி செய்துப் பார்த்து சொல்ரேன் நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்...நன்றி பவித்ரா....நன்றி ஜெய்...//எனக்கு பிடிச்சது தேங்காய் சட்னிதான், வீட்டு அம்மனிக்கு தக்காளி சட்னி, இட்லி/தோசை போடும்போது வீட்ல ஒரே ஃபைட்.:)//இங்க தான் அதே கதை என்றால்...உங்க வீட்டிலையுமா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...நன்றி தெய்வசுகந்தி...

GEETHA ACHAL said...

அனாமிகா துவாரகன் said...
//ஒரே பொருட்களைப் போட்டு செய்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு கைக்கணக்கு இருக்கும். டேஸ்ட்டும் வித்தியாசமாக புதுசா இருக்கும். அதனால் என்ன சட்னி போஸ்ட் பார்த்தாலும் செய்து பார்க்கத் தவறுவதில்லை. //தங்கள் சொல்வது உண்மை தான் அனாமிகா…ஒவ்வொரு பொருளையும் சேர்க்கும் விதத்திலும்…அதன் அளவு ஒவ்வொரும் ஒவ்வொரு மாதிரி எடுத்து கொண்டு செய்வாங்க…அதான் சுவை வித்தியசமாக இருக்கும்…நன்றி…

//காலையில் தோசை தான் செய்கிறோம். தொட்டுக்கொள்ள இதையே செய்தேன். சிறு துண்டு தோசையில் தொட்டு ருசி பார்த்தேன். நன்றாக இருந்தது. தோசை ஊத்திக்கொண்டே எழுதறேன். நன்றி. //மிகவும் சந்தோசம்…அதுவும் தோசை ஊத்தி கொண்டே இரண்டு வேலை பார்க்கின்றிங்க…வாழ்த்துகள்….செய்து பார்த்தில் மிகவும் மகிழ்ச்சி….

//வழமையாக தாளித்து கொட்டாமல், தாளித்த பின்னர் அரைத்த விழுதைப் போட்டு ஒரு கொதி கொதிக்க வைத்து நல்லெண்ணெய் உற்றி இறக்குவேன். இன்று ஒரு மாற்றத்திற்கு இப்படி செய்தேன். நன்றி. நன்றி. நன்றி.// நன்றி அனாமிகா…

GEETHA ACHAL said...

அனாமிகா துவாரகன் said...
//@ L.K.
இருங்க, எல்.கே அவரு செய்யற மாதிரி எழுதறார். நிஜமாவே சமைப்பீங்களா கார்த்தி சார்? ரொம்ப நல்லவராக இருக்கீங்க. எங்கே எங்கள் ரங்கசை படத்தற அப்பாவி தங்கமணி.//அனாமிகா உங்களுக்கு தெரியாதா...கார்த்திக் தான் வீட்டில் சமையல்..அருமையாக சமைப்பாருனு நினைக்கிறேன்...அவரும் சில சமையல் குறிப்புகள் எல்லாம் கொடுத்து இருக்கின்றார்...போய் பாருங்க..நல்லா இருக்கும்....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா...ஆமாம்...இரண்டு விதமானமிளகாய் சேர்ப்பதால் மிகவும் நல்ல இருக்கும்...

GEETHA ACHAL said...

ஹைஷ்126 said...
//athira said...
நல்ல சட்னி.// அப்ப வில்லன்/வில்லி சட்னி என ஏதாவது இருக்கோ?// பாவம் அதிரா...வில்லன்/வில்லி சட்னி தானே ஹைஷ் அங்கிள்...அது தான் கார சட்னி இருக்கே...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அத்திர்...கண்டிப்பாக செய்து பாருங்க...நன்றி மலர்விழி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா...நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி காயத்ரி...ஒவ்வொருத்தர் ஒவ்வொறு மாதிரி செய்வாங்க...ஒவ்வொரு பொருட்களின் அளவில் தான் இருக்கின்றது...அளவு மாறினால் சுவையும் மாறுபடும்..இந்த முறையில் செய்து பாருங்க...நன்றி

அன்புடன் நான் said...

மிக எளிமையான ஒன்று.
மிக்க நன்றி.

Unknown said...

My all time fav,without this i wont have idly...Too gud pics and well explained.

vanathy said...

super chutney.

ராமலக்ஷ்மி said...

நான் அடிக்கடி செய்வது:)! நல்ல குறிப்பு.

ராமலக்ஷ்மி said...

நான் அடிக்கடி செய்வது:)! நல்ல குறிப்பு.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கருணகரசு...நன்றி ப்ரேமலதா...நன்றி வானதி...நன்றி ராமலஷ்மி..

Priya dharshini said...

entha chutney seithu parthen..nandraga erunthathu..

GEETHA ACHAL said...

செய்து பார்த்துவிட்டு கருத்து தெரிவித்தற்கு மிகவும் சந்தோசம் ப்ரியா...நன்றி..

Anonymous said...

really nice to hear if do means yummmmy

exercise4health said...

very tasty geetha..

Related Posts Plugin for WordPress, Blogger...