வெங்காய புளி சட்னி - Venkayam Puli / Onion Tamrind chutney - Side Dish for Idly and Dosaஇந்த சட்னி எங்க அம்மா அடிக்கடி செய்வதுஅம்மாவிடம் கேட்டு பலமுறை செய்து இருக்கின்றேன்ஆனால் அம்மா செய்வது மாதிரி வருவதில்லை என்று எப்பொழுதுமே அம்மாகிட்ட ஒரே புலம்பல் மயமாகவே இருக்கும் இந்த சட்னியினை செய்யும் பொழுது எல்லாம்…..

அப்பறம் தான் சீக்கிரட் தெரிந்தது…..அம்மா எப்பவும் புளி கொஞ்சம் அதிகம் என்று சொல்லுவதினை நான் கணக்கிலேயே எடுத்து கொண்டது கிடையாதுஉண்மையாகவே கொஞ்சம்(உண்மையில் அந்த அளவு எனக்கு கொஞ்சமாக தெரியவில்லைஅதிகமாகவே தெரிந்தது…) அதிகமாக எடுத்து செய்தால் அதே சுவையுடன் சூப்பரோ சூப்பராக இருந்தது

நீங்களும் செய்து பார்த்துவிட்டு கருத்தினை தெரிவிக்கவும்….

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெங்காயம் – 2
·         காய்ந்த மிளகாய் – 4
·         புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
·         உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         உப்பு தேவையான அளவு
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு தாளிக்க
·         உளுத்தம்பருப்பு – 1/2 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 4 இலை
·         பெருங்காயம் தூள் சிறிதளவு

செய்முறை :
·         வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு + காய்ந்தமிளகாய் ஒவ்வொன்றாக வறுத்துகொள்ளவும்.
·         வெங்காயத்தினை வதக்கி சிறிது நேரம் ஆறவைக்கவும்.


·         மிக்ஸியில் முதலில் உளுத்தம்பருப்பு + காய்ந்தமிளகாய் + புளி சேர்த்து மைய அரைக்கவும்கடைசியில்  வெங்காயம் + உப்பு சேர்த்து கொரகொரவேன அரைக்கவும்.
·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான வெங்காய சட்னி ரெடி.


குறிப்பு :
முதலில் உளுத்தம் பருப்பினை அரைத்து கொள்ள வேண்டும். அப்பதான் சட்னி நல்லா இருக்கும்.
இந்த சட்னியில் புளிஅதிகம் சேர்க்க வேண்டும். புளியினை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்தால் சீக்கிரமாக அரைப்படும்.

34 comments:

ஜெய்லானி said...

இதை வைத்தால் நாலு இட்லி அதிகம் உள்ளே போகுமே..!!!ஊர் நினைவு வந்து விட்டது :-(

Priya Suresh said...

Ithey chutney yenga ammavum seivanga,idli & dosaiyoda inthe chutney superaa irrukum, yennaku pidicha chutney..

athira said...

எனக்குப் பிடித்த சட்னி. சூப்பராக இருக்கு.

ஹைஷ்126 said...

நல்லா இருக்கு.

வாழ்க வளமுடன்

Unknown said...

yummy chutney geetha and with idly perfect combination...super.

Krishnaveni said...

my fav chutney...great

Aruna Manikandan said...

Delicious chutney,perfect with hot Idli's :-)
There's a lot of difference with and without tamarind....

சாருஸ்ரீராஜ் said...

எனக்கு ரொம்ப பிடிக்கு இந்த சட்னி ஆனால நான் உ.பருப்பு சேர்த்ததில்லை அடுத்த முறை டிரை செய்கிறேன்.

Jey said...

சமையல் புக் ரிலீஸ் பண்ணுற ஐடியா ஏதும் இருக்குதுங்களா?.

kousalya raj said...

புளி சேர்த்து இந்த மாதிரி செய்வது உண்மையில் வித்தியாசம்தான். செய்து பார்க்கணும். நன்றி

எல் கே said...

my fav

எம் அப்துல் காதர் said...

ஆஹா அப்படியே இங்க கொஞ்சம் தள்ளுங்க மேடம்!

வேலன். said...

படமும் படைப்பும் சூப்பர்..
வாழ்க வளமுடன்,
வேல்ன.

GEETHA ACHAL said...

ஜெய்லானி said...
//இதை வைத்தால் நாலு இட்லி அதிகம் உள்ளே போகுமே..!!!ஊர் நினைவு வந்து விட்டது :-(//

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...உண்மையில் இந்த சட்னியுடன் நாலு இட்லி அதிகம் கண்டிப்பாக உள்ளே போகும்...தமிலிஷில் சப்மிட் செய்தமைக்கு மிகவும் நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...நன்றி அதிரா...நன்றி ஹைஷ் அங்கிள்....நன்றி ப்ரேமலதா...நன்றி கிருஷ்ணவேணி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அருணா....//There's a lot of difference with and without tamarind....//ஆமாம் அருணா...நிறைய வித்தியாசம் இருக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

சாருஸ்ரீராஜ் said...
//எனக்கு ரொம்ப பிடிக்கு இந்த சட்னி ஆனால நான் உ.பருப்பு சேர்த்ததில்லை அடுத்த முறை டிரை செய்கிறேன்.//உளுத்தம்பருப்பு சேர்த்து செய்து பாருங்கள்...வித்தியசமாக அருமையாக இருக்கும்...நன்றி சாரு அக்கா...

GEETHA ACHAL said...

Jey said...
//சமையல் புக் ரிலீஸ் பண்ணுற ஐடியா ஏதும் இருக்குதுங்களா?.//சமையல் புக் ரீலிஸ் செய்தால் நீங்க புக் வாங்குவிங்களா...ஆனால் உண்மையில் அப்படி ஒரு ஐடியா இருக்கின்றது...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கௌசல்யா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி கார்த்திக்...

GEETHA ACHAL said...

உங்களுக்கு இல்லாமலா அப்துல்...தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அப்துல்...

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி வேலன்...

Menaga Sathia said...

ஆஹா அருமை!! இன்னும் 2 இட்லி உள்ளே போகும்....

தக்குடு said...

suuuuuuuuper chatny geetha madam!!...:)

vanathy said...

super!

மங்குனி அமைச்சர் said...

அட போங்க மேடம் பசி நேரத்துல , இத பாத்தா உடனே ரொம்ப பசிக்குது

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா...நன்றி தக்குடு...நன்றி வானதி....நன்றி மங்குனி....

Niloufer Riyaz said...

enna arumayana chutney, idliyudan sapiduvadarku aetra chutney

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலோஃபர்...

Priya dharshini said...

entha chutney niga nandraga erukum..

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...

Mahi said...

நானும் கிட்டத்தட்ட இதேபோலதான் செய்வேன்.ஆனால் புளி அளவு நீங்க சொன்னதுபோல கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது கீதா! செய்து பார்த்து சொல்கிறேன்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மகி...நானும் இதே மாதிரி தான் செய்வேன்...ஆனால் புளி அதிகம் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்...இதற்கும் புளி குறைந்து செய்வதற்கும் வித்தியசம் சுவையில் அதிகம் உண்டு...செய்து பாருங்க...

Padmajha said...

I prepared this chutney following your recipe.It turned out to be great and we loved it.Thanks for sharing such a wonderful recipe Geeta.

GEETHA ACHAL said...

தங்கள் செய்து பார்த்துவிட்டு பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி பத்மஜா...நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...