வாழைக்காய் வாழைப்பழம் தோலினை சாப்பிடலாமா???? - பகுதி - 2


இந்த தலைப்பிற்காக, தங்களுடைய அன்பான கருத்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகள் பல….

நாம் வாழைப்பழம் சாப்பிடும் பொழுதும் சரி…. அல்லது வாழைக்காயினை சமைக்கும் பொழுதும் சரி…. எப்பொழுதும் அதனுடைய தோலினை பெரும்பாலும் நீக்கிவிடுவோம்…அப்படி தான் நானும் இருந்தேன்…….சரி சரி மேட்டருக்கு வருவோம்….

வாழைக்காய் வாழைப்பழம் தோலினை சாப்பிடலாமா????..

போன மாதம் தோழி நிது நடத்திய Eventயில் வாழைக்காய், வாழைப்பழம் தோலினை உபயோகித்து ஒன்று இரண்டு குறிப்புகள் பார்த்தேன்…..மிகவும் ஆச்சரியமாக இருந்ததுஇதுல கூட சமைக்கலாமா என்று நானும் மேனகாவும் கூட பேசிக்கொண்டோம்…..

சின்ன பொண்ணாக இருந்த பொழுது என்னுடைய ப்ரெண்ட்ஸ் சொன்னாதாக நினைப்புவாழைக்காய் தோல் பல்லில் பட்டுவிட்டால் அவ்வளவு தான் பல் கருப்பாக ஆகிவிடும் என்று ….அப்பொழுதில் இருந்து இந்த வாழைக்காய் என்றால் அப்படி ஒரு பயம்

சரிசரிவாழைப்பழம் தோல் , வாழைக்காய் தோலினை சாப்பிடலாமா?????
அவற்றால் எதாவது பயன் இருக்கின்றது???????????
அதனை சாப்பிடால் முக்கியமாக பல் கருப்பாகமல் இருக்குமா?????????….(என்னுடைய பயம் எனக்கு!!!!!!!!!)….
இப்படி பல கேள்விகள் தோன்றவே அதன் தேடுதல் வேட்டை தொடங்கியது…..

முதலில் வாழைப்பழத்திற்கு வருவோம்….வாழைப்பழத்தில் அதிக அளவு நார்சத்து, பொட்டஸியம்,இரும்பு சத்துவிட்டமின்ஸ் இருக்கின்றது .

வாழைப்பழம் சாப்பிடுவதால் பல பயன்கள் அடைக்கிறோம் என்பது பலரும் அறிந்ததே…..…” தினம் ஒரு ஆப்பிள் போல தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் கண்டிப்பாக உடலிற்கு நன்மை தான்…பர்ஸுக்கும் தான்…..

வாழைப்பழம் தோலில் வாழைப்பழத்தில் இருக்கும் சத்துகளை விட இரண்டு மடங்காக இருப்பது என்பது ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

வாழைப்பழம் தோலில் வாழைப்பழத்தினை விட இரண்டு பங்கு பொட்டஸியம் சத்துகள் காணப்படுக்கின்றதுஅதனால் உடலிற்கு மிகவும் நல்லது. அதுவும் வளரும் குழந்தைகளும், வயதனவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

முதலில் இதனை படிக்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருந்தாலும், பல தேடுதலில் கிடைத்த தகவல் இது தான்….

வாழைப்பழம் தோல் சாப்பிடுவது என்பது மிகவும் கஷ்டம் என்றாலும் அதனை சிறிய அளவில் சாப்பிட்டு பழகிவிட்டால் பழகிவிடும்.

வாழைப்பழம் தோலினை அப்படியே சாப்பிட பிடிக்கவில்லை என்றால், ஜுஸ், ஸ்மூத்தீ போன்றவை செய்யும் பொழுது வாழைப்பழத்துடன் தோலினையும் சேர்த்து மிக்ஸியில் அடித்து குடிக்கலாம்….

வாழைப்பழத்தினை விட அதனுடைய தோலில் அதிக அளவில் நார்சத்துகள் (Dietary Fiber) இருக்கின்றது…. இதனால் கொலஸ்டிரால் அளவு  அதிகரிக்காமல் பார்த்து கொள்ளமுடிகின்றது .

கவனிக்க : வாழைப்பழம் தோலினை சாப்பிடும் பொழுது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதில் அதிக அளவு நார்சத்து இருப்பதால், நன்றாக மென்று சாப்பிட்டால் தான் சீக்கிரமாக ஜீரணம் ஆகும்.

அதே போல வாழைப்பழம் தோலினைபகல்  பொழுதில் சாப்பிடுவதால் பசி சீக்கிரமாக எடுக்காதுடயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது

இதே போல தான் வாழைக்காயிலும் இருக்கின்றதுஅதனால் கூடுமான வரையில் தோலுடன் சமைப்பதே மிகவும் சிறந்தது….(…அதனால் தான் பாட்டி காலத்து சமையலில் தோலுடனே சேர்த்து சமைத்தாங்க போல…..இப்ப தான் சமையலில் எல்லாத்தையும் தூக்கி போடுகிறேன் பேர்வழி என்று நல்லதையும் தூக்கி வெளி போடுகிறோம்….)

கவனிக்க : வாழைக்காயின் தோலினை நன்றாக வதக்கியோ அல்லது வேகவைத்தோ தான் சாப்பிட வேண்டும்… சமைக்காமல் சாப்பிட கூடாது…

பெரும்பாலும் வாழைக்காயினை க்ரேவியில், குழம்பில் சேர்க்கும் பொழுது அப்படியே தோலுடன் சேர்த்து சமைப்பது நல்லது.

தோலினை நீக்குவதால், காயில் உள்ள விட்டமின்ஸ் மற்றும் சத்துக்களையும் நீக்கிவிடுகிறோம்… உங்களுக்கு தோல் நீக்காமல் சமைப்பது பிடிக்கவில்லை என்றால் மெல்லியதாக தோலினை நீக்கவும்…

கொசு கடி, தோல் எரிச்சல் போன்ற இடத்தில் வாழைப்பழ தோலினை வைத்து தேய்த்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.

சரிசரிவாழைக்காய் தோல், வாழைப்பழம் தோலினை சாப்பிடுவது நல்லது என்று நான் (நீங்களும் தான் என்று நினைக்கிறேன்…) ஓர் அளவிற்கு ஏற்று கொண்டாகிவிட்டதுஅப்புறம் என்ன….அதனை வைத்து எதவாது செய்யலாம் என்று செய்த துவையல் இது….நீங்களும் செய்து பார்த்து உங்கள் அன்பான கருத்துகளை தெரிவிக்கவும்….

வாழைக்காய் தோல் துவையல்

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வாழைக்காய் தோல் – 1 கப் ( 1 காயில் இருந்து தோல் நீக்கியது)
·         காய்ந்த மிளகாய் – 4
·         கடலை பருப்பு  - 2 மேஜை கரண்டி
·         உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி
·         கடுகு, எண்ணெய் – 1 தே.கரண்டி
·         தேங்காய் சிறிதளவு
·         பெருங்காயம் சிறிதளவு
·         உப்பு தேவைக்கு

செய்முறை :
·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு + கடலைப்பருப்பு + காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

·         பின்னர் பொடியாக நறுக்கிய வாழைக்காய் தோலினை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.

·         வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு அத்துடன் தேங்காய் + பெருங்காயம் + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·         சுவையான சத்தான வாழைக்காய் தோல் துவையல் ரெடி.

குறிப்பு :
வாழைக்காய் தோலினை நன்றாக வதக்கிகொத்தமல்லி சட்னி, புதினா சட்னி போன்றவை செய்யும் பொழுது சேர்த்து அரைத்தால் இட்லி , தோசைக்கு சூப்பர்ப் காம்பினேஷன்.

வாழைப்பழம் தோலினை, வாழைப்பழம் குழிப்பணியாரம், தோசை போன்றவை செய்யும் பொழுது தோலையும் சிறிது அரைத்தோ அல்லது மிகவும் பொடியாக நறுக்கி போட்டு செய்தாலோ சூப்பராக இருக்கும்

29 comments:

எல் கே said...

நல்லத் தகவல்கள்

Unknown said...

gr8! info,really wounderfull...thanks for sharing.

ஹுஸைனம்மா said...

அருமையான ஆராய்ச்சி கீதா; உங்கள் முயற்சியைக் கண்டு வியக்கிறேன். பாராட்டுகள்!!

முன்பே சொல்லுவார்கள், பழங்களில் தோலில்தான் அதிகச் சத்துண்டு என்று. நான் வாழைப்பழத் தோலின் உட்புறத்தில் இருக்கும் வெண்மையான சதைப் பகுதியை சாப்பிடுவதுண்டு.

ஆனால், தற்கால காய்கறிகள், பழங்களில் தோலில் பெரும்பாலும் ரசாயனப் பொருட்கள் தடவப்படுவதுண்டு (பளபளப்பு மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவைக்க) என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகையால் நன்றாகக் கழுவி விட்டுப் பயன்படுத்துவது நல்லது.

Chitra said...

இத்தனை விஷயங்களா? ஆனாலும் யோசனையாய் இருக்குது. :-)

அமுதா கிருஷ்ணா said...

ஒன்றை கூட வேஸ்ட் ஆக்க மாட்டீங்க போல..என் அம்மா வாழைக்காய் ரோஸ்ட் செய்யும் போது சிறிது தோலுடன் தான் நறுக்கி செய்வார்..

Unknown said...

நிறைய தகவல்கள் திரட்டி இருக்கீங்க நன்றி பகிர்வுக்கு

வாழைக்காய் தோலை இன்னும் சிறுது சிறுதாக கட் செய்து சமைக்கலாம் நல்ல ருசியாக இருக்கும் ...

ஜெய்லானி said...

இனி விடமாட்டோமுல்ல எவ்வளவோ டிரை பண்ணியாச்சி இதையும் பாத்துடுவோம்

சாருஸ்ரீராஜ் said...

geetha very nice information , u have done a great job thanks for sharing

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாழைக் காயைத் தோல் நீக்கிச் சமைத்த போதும் அதன் தோலில் ஒரு துவையலோ, சம்பலோ செய்யும் பழக்கம் என் பேத்தியார்(பாட்டி) மூலம் தாயாரிடமும் இருந்தது. அது மிகச் சுவையானதும் கூட.
வாழைப்பழத்தோல் சாப்பிடவே இல்லை. ஆனால் எனக்கு வாழைப்பழத்தோலின் உள்பகுதி மிகப் பிடிக்கும்;எனது வீட்டில் இருக்கும் போது வாழைப்பழம் உண்டதும் அதன் உள்தோலை பல்லால் வழித்து
உண்பேன். இதைப் பொது இடத்தில் செய்தால் காட்டான் என்பார்கள். என் மனைவி கூட ஆரம்பத்தில்
"என்னங்க" என்று வியந்து, இப்போ சகிக்கப் பழகிவிட்டார்.
உங்கள் பதிவு பல விடயங்களையும் சந்தேகத்தையும் நீங்கியது.

ADHI VENKAT said...

கேட்கவே புதுசா இருக்கு. முயற்சி செய்து பார்க்கிறேன்.

சசிகுமார் said...

பெரிய ஆராய்ச்சியே பண்ணி அதுல வெற்றி பெற்று விட்டீங்க போல வாழ்த்துக்கள் அக்கா உங்கள் தேடல் அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும்.

GEETHA ACHAL said...

தங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்...நன்றி ப்ரேமலதா...நன்றி ஹுஸைனம்மா...எப்படி இருக்கின்றிங்க..//தற்கால காய்கறிகள், பழங்களில் தோலில் பெரும்பாலும் ரசாயனப் பொருட்கள் தடவப்படுவதுண்டு (பளபளப்பு மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவைக்க) என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகையால் நன்றாகக் கழுவி விட்டுப் பயன்படுத்துவது நல்லது//நிச்சயம் உண்மை தான்..நன்றாக கழுவிய பிறகு சாப்பிடுவது நல்லது...அப்படியும் பயமாக இருந்தால் atleast அதனுடைய உள்பகுதியில், அதிகம் தோல் நீக்காமல் சாப்பிடுவது சிறந்தது..நன்றி....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...ஒரு முறை சமைத்து பாருங்க...அப்புறம் யோசனை எல்லாம் இருக்காது....

GEETHA ACHAL said...

// அமுதா கிருஷ்ணா said...
ஒன்றை கூட வேஸ்ட் ஆக்க மாட்டீங்க போல..என் அம்மா வாழைக்காய் ரோஸ்ட் செய்யும் போது சிறிது தோலுடன் தான் நறுக்கி செய்வார்//நன்றி அமுதா...ஆமாம் வாழைக்காய் வறுவல், ரோஸ்ட் போன்றவை செய்யும் பொழுது சிறிது தோலுடன் இருந்தால் நன்றாக இருக்கும்...

GEETHA ACHAL said...

// நட்புடன் ஜமால் said...
நிறைய தகவல்கள் திரட்டி இருக்கீங்க நன்றி பகிர்வுக்கு//நன்றி ஜமால் அண்ணா..

//வாழைக்காய் தோலை இன்னும் சிறுது சிறுதாக கட் செய்து சமைக்கலாம் நல்ல ருசியாக இருக்கும் //அடுத்த முறை செய்துவிடுகிறேன்...நன்றி...

GEETHA ACHAL said...

// ஜெய்லானி said...
இனி விடமாட்டோமுல்ல எவ்வளவோ டிரை பண்ணியாச்சி இதையும் பாத்துடுவோம்//ட்ரை செய்து பாருங்க ஜெய்லானி ...நன்றி...

GEETHA ACHAL said...

தங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி சாரு அக்கா...நன்றி ஆதி...

மனோ சாமிநாதன் said...

அருமையான ஆராய்ச்சி செய்து தகவல்கள் திரட்டியிருப்பதற்கு வாழ்த்துக்கள் கீதா!

கொயினி said...

கீதா நல்ல தகவல் கொடுத்து இருக்கீங்க....ரொம்ப நன்றி.வாழைக்காய் தோலை இனிமேல் சட்னி அரைத்து விடுகிரேன்.

Jayadev Das said...

வாழைப்பழத்தை கார்பைடு கல்லு வச்சு பழுக்க வச்சா அந்த தோலை சாப்பிடாதீங்க.

Priya Suresh said...

Such a beautiful post, romba arumaiyana, romba usefulana post...thovaiyal supera irruku ponga..

தெய்வசுகந்தி said...

வாவ்!! நல்ல ஆராய்ச்சி கீதா! நல்ல தகவலும் கூட. இனிமேல் நானும் தோல் நீக்காமல் சமைக்கிறேன்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி....

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி யோகன்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மனோ...நன்றி கொயினி...நன்றி ஜெயாதேவா...நன்றி ப்ரியா...நன்றி தெய்வசுகந்தி...

Menaga Sathia said...

Gr8 information, thxs for sharing..Banana peel thuvaiyal looks superrr!!

Raks said...

I too make use of the plantain skin by making pakoras :) Love this post!

Akila said...

thats incredible... never ever tried this or heard of this..... romba nalla usefullana post... thanks for sharing... book marked...

http://akilaskitchen.blogspot.com

senthiil said...

ரொம்ப வருடமாக சப்போட்டா, பப்பாளி, வாழை தோலுடன் சாப்பிடுகிறேன். அதுசரி யாராச்சும் பலாபலம், தோலுடன் சாப்பிட்டா டேஸ்ட் எப்படினு சொல்லுங்க.

ஆமா சிஸ்டர். தெரிந்துகொள்வோம் சூப்பர் சூப்பர்

Related Posts Plugin for WordPress, Blogger...