வெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் - Okra Oats Poriyalவெண்டைக்காயில் குறைந்த அளவு கலோரிஸும் அதிக அளவு விட்டமின்ஸ், நார்சத்து, கல்சியம் இருப்பதால் அனைவருக்கும் மிகவும் நல்லது.

இந்த பொரியலில் ஒட்ஸ் சேர்த்து கொள்வதால் மிகவும் சத்தான பொரியல்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெண்டைக்காய் – 1/2 கிலோ
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு தாளிக்க
·         உளுத்தம் பருப்பு – 1 மேஜை கரண்டி
·         கருவேப்பில்லை – 4 இலை

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

அரைத்து கொள்ள :
·         தேங்காய் – 2 துண்டுகள் (விரும்பினால்)
·         ஒட்ஸ் – 1/2 கப்
·         காய்ந்த மிளகாய் - 2

செய்முறை :
·         வெண்டைகாயினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
·         Non-stick கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம்பருப்பு + கருவேப்பில்லை சேர்த்து அதன்பிறகு, வெண்டைக்காய் + தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
·         அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொரவென அரைத்து கொள்ளவும்.
·         வெண்டைக்காய் நன்றாக வதங்கியவுடன் கடைசியில் அரைத்த பொருட்களை சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கவும். சுவையான சத்தான வெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் ரெடி.

25 comments:

Mahi said...

ஓட்ஸ் இன் எனிதிங்&எவ்ரிதிங்! கலக்குங்க கீதா!:)

Jayanthy Kumaran said...

wow...wat a vibrant healthy color...loved your detailed presentation deaar.

Krishnaveni said...

veru nice combo, innovative, great

Srividhya Ravikumar said...

kandipaga moru moru vena irukum ena ninaikiren... vithiyasamana combo...love it..

Unknown said...

வெண்டைக்காய் - ஆஹா! மிகவும் பிடித்தவற்றில் உள்ளது

வித்தியாச முயற்சி :)

சாருஸ்ரீராஜ் said...

கீதா ரொம்ப நல்லா இருக்கு ....

Pavithra Srihari said...

lovely combo

ஜெய்லானி said...

இது வரை கேக்காத ரெஸிபி...குட்

சசிகுமார் said...

நல்லாயிருக்கு அக்கா வாழ்த்துக்கள், வேலைப்பளு அதிகமாக உள்ளதோ பதிவு தினமும் இல்லையே

Raks said...

Cool idea,will try sometime!

Akila said...

vendakkai varuval pramatham

vanathy said...

கீதா, நல்லா இருக்கு. படங்கள் அழகா இருக்கு.

Menaga Sathia said...

supera irukku...

பிஞ்சுக் கவிஞர்:) அதிரா:) said...

புதுசு அண்ட் சத்தான ரெசிப்பி. நன்றாக இருக்கு கீதா....

Mrs.Mano Saminathan said...

சுவையான, வழக்கம்போல சத்தான் வெண்டைக்காய் பொரியல்! ஓட்ஸ் சேர்ந்த கலவை ருசிகரமாகத் தெரிகிறது. ஓட்ஸை தண்ணீர் விட்டு அரைக்க வேண்டுமா கீதா?

Asiya Omar said...

ஓட்ஸ் சேர்த்து வெண்டைக்காயும் செய்தாச்சா?குட்.

சிங்கக்குட்டி said...

சூப்பர்.

இத சாப்ட்டா கணக்கு நல்லா வரும்ன்னு சொல்றாங்க ஆனா எனக்கு அப்படி வர மாதிரி தெரியல... :-)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி...நன்றி ஜெய்...நன்றி கிருஷ்ணவேணி...நன்றி ஸ்ரீவித்யா...நன்றி ஜமால் அண்ணா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாரு அக்கா...நன்றி பவித்ரா...நன்றி ஜெய்லானி...நன்றி ராஜி...நன்றி அகிலா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசிகுமார்....இப்பொழுதும் எல்லாம் நேரம் அவ்வளவாக கிடைப்பது இல்லை...நேரம் கிடைக்கும் பொழுது பதிவுகளை போடுகிறேன்...மிகவும் நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...நன்றி மேனகா...நன்றி அதிரா....நன்றி மனோ ஆன்டி....ஒட்ஸினை தண்ணீர் விட்டு அரைக்க வேண்டாம்...தேங்காயுடன் சேர்த்து அரைத்தால் போதும்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சிங்ககுட்டி...//இத சாப்ட்டா கணக்கு நல்லா வரும்ன்னு சொல்றாங்க ஆனா எனக்கு அப்படி வர மாதிரி தெரியல//அது எல்லாம் நம்மளை சாப்பிட வைக்க சொல்லுவது...

Padhu Sankar said...

Nice combination .Ladiesfinger with oats. will try this for sure

Priya Suresh said...

Naan adikadi seyum poriyal, arumai..

Related Posts Plugin for WordPress, Blogger...