வெண்டைக்காய் ஸ்டஃப்டு மசாலா ப்ரை - Okra Stuffed Masala Fryசமைக்க தேவைப்படும் நேரம் : 45 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெண்டைக்காய் – 1/2 கிலோ
·         உப்பு தேவையான அளவு
·         எண்ணெய் சிறிதளவு
ஸ்டஃபிங் செய்ய :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         வெங்காயம் – 2
·         கருவேப்பில்லை -  5 இலை
·         வேர்க்கடலை – 1/4 கப்
·         எள் – 1 மேஜை கரண்டி
·         தேங்காய் சிறிய துண்டு
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – 1 தே.கரண்டி

செய்முறை :
·         வெங்காயம் + கருவேப்பில்லையினை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும். வேர்க்கடலை + எள்ளினை கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

·         மிக்ஸ்யில் வேர்க்கடலை + எள் + தேங்காய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். (தண்ணீர் சேர்த்து அரைக்க கூடாது.)

·         கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பில்லை போட்டு நன்றாக 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு இத்துடன் தூள் வகைகள் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கி கடைசியில் அரைத்த கலவையினை சேர்க்கவும். இப்பொழுது ஸ்டஃபிங் ரெடி.

·         வெண்டைக்காயினை நான்காக பிளந்து அதற்கு நடுவில் ஸ்டஃபிங்கை வைக்கவும். (கொஞ்சம் பொறுமை அவசியம்….)

·         அவனை 400 Fயில் மூற்சூடு செய்யவும். ஸ்டஃபிங் செய்த வெண்டைக்காயினை அவனில் வைக்கும் ட்ரேயில் அடுக்கவும். அதன் மீது சிறிது எண்ணெய் + உப்பு தூவவும்.

·         ட்ரேயினை அவனில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும். அதன்பிறகு அதனை வெளியில் எடுத்து வெண்டைக்காயினை திருப்பி விடவும்.

·         திரும்பவும் அவனில் வைத்து மேலும் 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும்.

·         சுவையான வெண்டைக்காய் ஸ்டஃப்டு மசாலா ப்ரை ரெடி.

குறிப்பு :
தோசை கடாயிலும் இதே மாதிரி செய்யலாம்

29 comments:

Unknown said...

really healthy and yummy fry...luks very tempting and inviting...

Mahi said...

புது ரெசிப்பியா இருக்கு கீதா! நல்லா இருக்கு.

Pavithra Srihari said...

super with peanut and till ... i think i will love this version

vanathy said...

My in-law used to do this. I will try this one very soon. Nice one!

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பரா இருக்கு.

Srividhya Ravikumar said...

drooling fry dear... very nice..

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு கீதா.

Valarmathi Sanjeev said...

Looks superb and delicious.

Unknown said...

இன்று செய்தே ஆக வேண்டும்ன்னு கோரிக்கை வைத்தாயிற்று

நன்றிங்கோ ...

Anonymous said...

சூப்பர்... பார்த்த உடன் சாப்பிட தோனறதே ..நன்றி

சாருஸ்ரீராஜ் said...

super geetha ....

Krishnaveni said...

Geetha romba nalla nalla food itemaa podareega, romba arumayaa irukku

Saraswathi Iyer said...

Thanks Geetha for visiting my blog and your lovely comments. Unga blog romba nalla yirukku.

சசிகுமார் said...

எப்பவும் போல நல்லாயிருக்கு அக்கா பதிவு, உங்கள் குட்டி செல்லம் எப்படி இருக்கா

ஜெய்லானி said...

எனக்கு இந்த டைப்புதான் ரொம்ப பிடிக்கும்..!!

Menaga Sathia said...

மிகவும் அருமையாக இருக்கு....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...நன்றி மகி...நன்றி பவித்ரா...நன்றி வானதி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி புவனா...நன்றி ஸ்ரீவித்யா...நன்றி கஞ்சனா...நன்றி வளர்மதி...நன்றி ஜமால் அண்ணா...கண்டிப்பாக செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சந்தியா...நன்றி சாரு அக்கா...நன்றி கிருஷ்ணவேணி...நன்றி சரஸ்வதி...அடிக்கடி வாங்க...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி...நன்றி ஜெய்லானி...உங்களுக்குமா....நன்றி மேனகா...

சுவீட் 16 அதிரா:) said...

Very nice, simple and super.

Asiya Omar said...

மணமும் சுவையும் செமையாக இருக்கு.

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கே!!!

Asiya Omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

Torviewtoronto said...

okra looks delicious
Pls accept this award
http://torviewtoronto.blogspot.com/p/awards-and-publications.html
regards

கடல் said...

தமிழின் முதல் மகளிர் திரட்டி.
மகளிர் கடல்
அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.

நன்றி.

தெய்வசுகந்தி said...

நான் இதில தேங்காய், எள் சேர்க்காமல் செய்வேன். அடுத்த முறை சேர்த்து செஞ்சு பார்க்கிறேன்.

Bharathy said...

Rrrromba soooooper a irukku!!!
Bookmarked!! :)

Akila said...

stuffed vendakkai superao super... i have read about this, but not yet tried... but by seeing ur wonderful pic, i planned to do it surely....

Related Posts Plugin for WordPress, Blogger...