ஆப்பிள் தோட்டம் - Apple Picking 2010


இந்த வாரம் நாங்கள் இங்கு உள்ள ஆப்பிள் தோட்டத்திற்கு சென்ற பொழுது எடுத்த சில படங்கள்….


ஆப்பிள் தோட்டத்திற்கு பல முறை சென்று இருந்தாலும் எப்பொழுதுமே எங்களுக்கு அதனை முதல் முறை பார்ப்பது போல தோன்றும்…அவ்வளவு சந்தோசமாக இருக்கும்..பின்ன இருக்காது என்ன…நீங்கே படங்களை பார்த்துவிட்டு சொல்லுங்க…அக்ஷ்தாவிற்கு ஆப்பிள் பறிப்பதற்கே சரியாக இருந்தது..அப்புறம் எங்க இருந்து போட்டோவிற்கு போஸ் கொடுப்பா .....


Apple Pickingயிற்கு போக அவளுக்கு முதலில் பிடிக்கவில்லை என்றாலும் ,  Pumpkin Picking செய்யலாம் என்று சொல்லி தான் அவளை அழைத்து சென்றோம்…


Pumpkin தோட்டத்தில் அவளே அவளுக்கு விரும்பிய Pumpkinனை தேடி கண்டுப்பிடிக்கிறேன் என்று தேடுகின்றாள்…

ஆஹா…கடைசியாக கண்டுபிடிச்சாச்சு….


இங்கு Farmers கிடையே யார் பெரிய Pumpkin வளர்க்கின்றாங்க என்ற போட்டியிற்காக இந்த தோட்டத்தில் விளைந்த Pumpkin இங்கே அனைவரது பார்வைக்காவும் வைத்து இருந்தாங்க…


கடைசியாக இங்கு Hay Ride, Horse Ride, Farm Animals  எல்லாம சுற்றிவிட்டு வந்து, இங்கு சுடாக நம்முடைய எதிரிலேயே செய்து கொடுக்கும் Apple Cider Donutயிற்காக அரைமணி நேரம் க்யூவில் நின்று வாங்கி சாப்பிட்டாச்சு… oops…Sorry…எல்லாம் காலியாகிவிட்டது…


பல இடங்களில் Donut சாப்பிட்டு இருந்தாலும், இந்த Donut மாதிரி அருமையான சூடான Donutயினை நான் எங்கும் சாப்பிட்டது இல்லை..(நல்ல வேலை அரை மணி நேரம் நின்றதன் பயன் கிடைத்துவிட்டது….)..சரி…திரும்பவும் போய் வாங்கலாம் என்றால் அதற்குள் extraவாக இரண்டு line அதிகமாகிவிட்டது…எப்படியும் 1 மணி நேரமாவது ஆகும் என்பதால் திரும்பி வந்தாச்சு… 


ஆப்பிள் தோட்டம் பார்க்க வேண்டுமா.......வாங்க ..........

காளிப்ளவர் குருமா - Cauliflower Kurma

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         காளிப்ளவர் – 1
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         தேங்காய் சிறிய துண்டு (2 மேஜை கரண்டி)விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         உப்பு - தேவைக்கு

முதலில் தாளிக்க :
·         பட்டை ,கிராம்பு, ஏலக்காய் – 1
·         சோம்பு – 1 தே.கரண்டி

வதக்க வேண்டிய பொருட்கள் :
·         வெங்காயம் – 1 பெரியது நறுக்கியது
·         பச்சைமிளகாய் – 2
·         மிளகு – 10 – 15 (காரத்திற்கு ஏற்றாற் போல)

செய்முறை :
·         காளிப்ளவரினை சிறிய சிறிய பூக்களாக நறுக்கி கொள்ளவும்.

·         வதக்க வேண்டிய பொருட்களை வதக்கி சிறிது நேரம் ஆறவிடவும். தேங்காயினை மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும். தேங்காய் நன்றாக அரைந்தவுடன், கடைசியில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் தாளித்து அத்துடன் காளிப்பளவர் + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

·         இத்துடன் அரைத்து வைத்துள்ள விழுது + 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.

·         சுவையான காளிப்பளவர் குருமா ரெடி. இதனை சாப்பாத்தி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
வெங்காயத்தினை வதக்கும் பொழுது எண்ணெய் சேர்த்து வதக்க தேவையில்லை

குருமா ரொம்பவும் தண்ணீயாக இல்லாமல் இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
இதில் காரத்திற்கு மிளகு + பச்சைமிளகாய் மட்டுமே சேர்த்து கொள்ளவும்.

தர்பூசணி தோல் பச்சடி - Watermelon White Rinds Pachadi

பொதுவாக நாம் எப்பொழுது தர்பூசணி சாப்பிட்டு விட்டு அதனுடைய மேல் பகுதியினை தூக்கிப்போட்டுவிடுவோம். ஆனால் அந்த வெள்ளை பகுதி( White Rinds) சாப்பிடுவது உள்ளிருக்கும், பழத்தினை விட அதில் தான் சத்துகள் நிரம்பியுள்ளது.

தர்பூசணி வெள்ளை பகுதியில் அதிக அளவு விட்டமின் C, B6, A ,மெகனீஸுயம் மற்றும் பொட்டஸுயம் காணப்படுக்கின்றது.

இதனுடைய வெள்ளை பகுதியினை சாப்பிடுவதால், நெஞ்சு எரிச்சல் மற்றும் வாயு தொல்லை நீங்குகின்றது.

கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிடுவதால் உடலிற்கு மிகவும் நல்லது. இது நம்முடைய Immune systemத்தினை அதிகரிக்கின்றது.

இவ்வளவு பயனுள்ள வெள்ளை தோல் பகுதியினை வைத்து பச்சடி, கூட்டு, சாம்பார் போன்றவை செய்து சாப்பிடலாம். உடலிற்கு மிகவும் நல்லது. இதனுடைய சுவை மற்ற தண்ணீர் காய்கள் போலவே இருக்கும்நன்றி ப்ரியா

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         தர்பூசணி வெள்ளை பகுதி – 1 கப் துறுவியது
·         தயிர் – 1  கப்
·         உப்பு சிறிதளவு

செய்முறை :
·         தர்பூசணி வெள்ளை பகுதியினை துறுவிக்கொள்ளவும்.

·         துறுவிய வெள்ளை பகுதி + தயிர் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         சுவையான சத்தான பச்சடி ரெடி. இதனை புலாவ், பிரியாணி, சாப்பாத்தி, பரோட்டா போன்றவையுடம் சாப்பிட சுவையாக இருக்கும்.

சீரக சிக்கன் - Jeera Chicken - Cumin Chicken

எப்பொழுது ஒரே மாதிரி சிக்கன் மசாலா, பெப்பர் சிக்கன், சிக்கன் குருமா என சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்பதால், நான் சமைத்த சீரக சிக்கன்எதிர்பார்ததினை விட சூப்பராக வந்து இருந்தது

நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

தேவையான பொருட்கள் :
சிக்கன – 1/2 கிலோ
எண்ணெய் – 2 – 3 மேஜை கரண்டி
              
முதலில் தாளிக்க:
·         பட்டை – 1
·         ஏலக்காய் – 2
·         கிராம்பு – 2

கொரகொரப்பாக அரைத்து கொள்ள :
·         வெங்காயம் – 2 - 3
·         பூண்டு – 10 பல்
·         இஞ்சி – 1 பெரிய துண்டு

வறுத்து அரைத்து கொள்ள :
·         கசகசா – 2 மேஜை கரண்டி
·         காய்ந்த தேங்காய் துறுவல் – 1 மேஜை கரண்டி


ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ள :
·         மிளகு – 10 – 15 (காரத்திற்கு எற்றாற் போல)

பொடித்து கொள்ள :
·         சீரகம் – 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டி தூள் வகைகள் :
·         மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு தேவைக்கு

செய்முறை :
·         சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி + பூண்டு + நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.


·         கசகசாவினை சிறிது வறுத்து அத்துடன் தேங்காயும் சேர்த்து வறுத்து கொண்டு சிறிது தண்ணீரில் ஊறவைத்து மைய அரைத்து கொள்ளவும்.

·         சீரகத்தினை பொடித்து கொள்ளவும். மிளகினை ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.

·         அரைத்த கசகசா + சிக்கன் + பொடித்த மிளகு + 1 தே.கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பிறகு, அரைத்த வெங்காய விழுதினை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

·         அத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து மேலும் 5 – 6 நிமிடங்கள் வதக்கவும்.

·         பிறகு, ஊறவைத்துள்ள சிக்கனை இத்துடன் சேர்த்து கிளறவும்.

·         சிக்கன் பாதி வெந்தவுடன், சீரகத்தினை சேர்த்து கிளறி மேலும் வேகவிடவும்.

·         சுவையான சீரக சிக்கன் ரெடி. இதனை சாதம், குழம்பு, சாப்பத்தி, தோசை போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
சீரகம், மிளகு போன்றவையினை Freshஆக பொடித்து கொண்டு சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

வெங்காயத்தினை கொரகொரப்பாக தான் அரைக்க வேண்டும். மைய அரைத்தால் சுவை வேறுப்படும்.

கசகசாவிற்கு பதிலாக 4 முந்திரி பருப்பினை விரும்பினால் சேர்த்து கொள்ளலாம். அதிகம் சேர்க்க வேண்டாம்.

சிறிது கிரேவியாக விரும்பினால் வெங்காயத்தினை கூடுதலாக சேர்த்து கொள்ளவும். அல்லது சிக்கன் ஸ்டாக் சேர்த்து கொள்ளலாம்.

டோஃபு ஒட்ஸ் வெஜ்ஜி ஆம்லட் - Tofu Oats Vegetarian Omelet

டோஃபுவில் அதிக அளவு கல்சியம், இரும்பு, புரதம் போன்ற சத்துகள் நிரம்பியுள்ளது. இதனை பன்னீருக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

முட்டை இல்லாமல் டோஃபு + ஒட்ஸ் வைத்து செய்த ஆம்லட் என்பதால் அனைவருக்கும் ஏற்ற காலை நேர புரதம் நிறைந்த Vegetarian Breakfast ….

நீங்களும் செய்து பார்த்து உங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும்

இதில் முட்டையினை சேர்க்க விரும்பினால், ஒட்ஸினை தவிர்த்து முட்டையினை சேர்த்து கொள்ளவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         டோஃபு – 1 கப்
·         ஒட்ஸ் – 1/2 கப்
·         விரும்பிய வெஜ்ஜிஸ் வெங்காயம், குடைமிளகாய்
·         உப்பு தேவையான அளவு
தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு சிறிதளவு
·         மிளகு – 6

செய்முறை :
·         ஒட்ஸினை 2 – 3 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

·         ஊறவைத்த ஒட்ஸ் + டோஃபுவினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·         வெங்காயம் + குடைமிளகாயினை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகினை ஒன்றும் பாதியுமாக நசுக்கி வைக்கவும்.

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.

·         தாளித்த பொருட்கள் + அரைத்த டோஃபு + நறுக்கி வைத்துள்ள வெஜ்ஜிஸ் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         ஆம்லட் பனினை காயவைத்து, சிறிய எண்ணெய் ஊற்றிய பிறகு கலந்து வைத்து இருக்கும் கலவையினை சிறிது ஊற்றி வேகவிடவும்.

·         ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு மேலும் சிறிது நேரம் வேகவிடவும்.

·         சுவையான சத்தான வெஜிடேரியன் ஆம்லட் ரெடி.

கவனிக்க :
இந்த ஆம்லட்டிற்கு Silken Tofu பயன்படுத்தினால் நன்றாக வரும்.

Silken Tofu இல்லை என்றால், சாதரண டோஃபும் கூட பயன்படுத்தலாம்ஆனால் நன்றாக அரைத்து கொள்ளவும்.

அவரவர் விரும்பிய காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்.

இந்த ஆம்லட்டிற்கு முட்டை சேர்க்க தேவையில்லை. முட்டை சேர்பதாக இருந்தால், ஒட்ஸினை சேர்க்க வேண்டாம்.

புதினா துவையல் - 2 - Mint Thuvayal - Pudina

புதினாவில், அதிக அளவு நார்சத்து, விட்டமின்ஸ் ஏ & சி(Vitamins A & C) காணப்படுகின்றது. அத்துடன், பிரோட்டின்(Protien), விட்டமின் பி1(Vitamin B1 - Thiamin), விட்டமின் பி3(Vitamin B3 – Niacin), விட்டமின் பி6 (Vitamin B6) மற்றும் Calcium, Iron, Phosphorous, Zinc போன்றவை இருக்கின்றது. புதினாவில் கொழுப்பு சத்து மற்றும் கொலஸ்டிரால் மிகவும் குறைவு.


விட்டமின்ஸ் B1, B3, B6 மற்றும் விட்டமின் C தண்ணீரில் கரையும் விட்டமின்ஸ்(Water Soluble Vitamins) என்பதால், இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது இதனை சாப்பிடுவது மிகவும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.


உடல் எடையினை குறைக்க விரும்புவோர் புதினாவினை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.


புதினாவில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. புதினாவினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்,

·         ஜீரணம் எளிதில் செய்ய உதவுகின்றது.

·         பசியினை தூண்டுகின்றது.

·    இரத்ததினை சுத்தம் செய்து உடலினை ஆரோக்கியத்துடன் இருக்க செய்கின்றது. 

·    வாய் தூற்நாற்றத்தினை அகற்றுகின்றது…(பல Chewing Gums புதினா சேர்த்து இருப்பதை பலரும் கவனித்து இருப்போம்…)

·         உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         புதினா – 1 கட்டு
·         கொத்தமல்லி – 1 கட்டு
·         கருவேப்பில்லை – 1/2 கப்
·         உளுத்தமப்பருப்பு – 3 மேஜை கரண்டி
·         இஞ்சி – 1 சிறிய துண்டு
·         பச்சைமிளகாய் – 5 – 6
·         புளி நெல்லிக்காய் அளவு
·         பெருங்காயம் - சிறிதளவு


கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு தாளிக்க
·         உளுத்தமபருப்பு – 1 தே.கரண்டி

செய்முறை :
·         புதினா + கொத்தமல்லி + கருவேப்பில்லை அனைத்தும் நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

·         கடாயில் 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பினை வறுத்து எடுத்து கொள்ளவும்.

·         பிறகு புதினா + கொத்தமல்லி + கருவேப்பில்லை + இஞ்சி + பச்சைமிளகாயென தனி தனியாக வதக்கி  10 நிமிடங்கள் ஆறவைத்து கொள்ளவும்.

·         வதக்கிய பொருட்கள் + பெருங்காயம் + புளி + சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

·         கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து அத்துடன் அரைத்த விழுதினையும் சேர்த்து 3 - 4 நிமிடங்கள் கிளறவும்.

·         சுவையான சத்தான புதினா துவையல் ரெடி. இதனை இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

கவனிக்க :
புதினா, கொத்தமல்லி, கருவேப்பில்லையினை மண் இல்லாமால் கழுவி கொள்ளவும்.

புளியினை பொடியாக கத்தியினால் வெட்டி கொண்டால் எளிதில் அரைப்பட்டுவிடும்.

இந்த துவையல் சுமார் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...