புதினா துவையல் - 2 - Mint Thuvayal - Pudina

புதினாவில், அதிக அளவு நார்சத்து, விட்டமின்ஸ் ஏ & சி(Vitamins A & C) காணப்படுகின்றது. அத்துடன், பிரோட்டின்(Protien), விட்டமின் பி1(Vitamin B1 - Thiamin), விட்டமின் பி3(Vitamin B3 – Niacin), விட்டமின் பி6 (Vitamin B6) மற்றும் Calcium, Iron, Phosphorous, Zinc போன்றவை இருக்கின்றது. புதினாவில் கொழுப்பு சத்து மற்றும் கொலஸ்டிரால் மிகவும் குறைவு.


விட்டமின்ஸ் B1, B3, B6 மற்றும் விட்டமின் C தண்ணீரில் கரையும் விட்டமின்ஸ்(Water Soluble Vitamins) என்பதால், இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது இதனை சாப்பிடுவது மிகவும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.


உடல் எடையினை குறைக்க விரும்புவோர் புதினாவினை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.


புதினாவில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. புதினாவினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்,

·         ஜீரணம் எளிதில் செய்ய உதவுகின்றது.

·         பசியினை தூண்டுகின்றது.

·    இரத்ததினை சுத்தம் செய்து உடலினை ஆரோக்கியத்துடன் இருக்க செய்கின்றது. 

·    வாய் தூற்நாற்றத்தினை அகற்றுகின்றது…(பல Chewing Gums புதினா சேர்த்து இருப்பதை பலரும் கவனித்து இருப்போம்…)

·         உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         புதினா – 1 கட்டு
·         கொத்தமல்லி – 1 கட்டு
·         கருவேப்பில்லை – 1/2 கப்
·         உளுத்தமப்பருப்பு – 3 மேஜை கரண்டி
·         இஞ்சி – 1 சிறிய துண்டு
·         பச்சைமிளகாய் – 5 – 6
·         புளி நெல்லிக்காய் அளவு
·         பெருங்காயம் - சிறிதளவு


கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு தாளிக்க
·         உளுத்தமபருப்பு – 1 தே.கரண்டி

செய்முறை :
·         புதினா + கொத்தமல்லி + கருவேப்பில்லை அனைத்தும் நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

·         கடாயில் 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பினை வறுத்து எடுத்து கொள்ளவும்.

·         பிறகு புதினா + கொத்தமல்லி + கருவேப்பில்லை + இஞ்சி + பச்சைமிளகாயென தனி தனியாக வதக்கி  10 நிமிடங்கள் ஆறவைத்து கொள்ளவும்.

·         வதக்கிய பொருட்கள் + பெருங்காயம் + புளி + சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

·         கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து அத்துடன் அரைத்த விழுதினையும் சேர்த்து 3 - 4 நிமிடங்கள் கிளறவும்.

·         சுவையான சத்தான புதினா துவையல் ரெடி. இதனை இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

கவனிக்க :
புதினா, கொத்தமல்லி, கருவேப்பில்லையினை மண் இல்லாமால் கழுவி கொள்ளவும்.

புளியினை பொடியாக கத்தியினால் வெட்டி கொண்டால் எளிதில் அரைப்பட்டுவிடும்.

இந்த துவையல் சுமார் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.

42 comments:

Mahi said...

//புளியினை பொடியாக கத்தியினால் வெட்டி கொண்டால் எளிதில் அரைப்பட்டுவிடும்// இது எனக்குன்னே சொன்ன மாதிரியே இருக்கே?அவ்வ்வ்வ்!

உங்க வீட்டுப்புதினாவா கீதா? நல்லா இருக்குங்க.

Cool Lassi(e) said...

This idli and pudina-chutney combo is bringing back memories of my stay in hostel back in India. Every monday they used to serve this for breakfast and this was the only thing besides yogurt that was good in the hostel.
Never did add curry leaves in my pudina chutney before. Lovely recipe and definitely going to try your variation.

Chitra said...

புதினா துவையலும் தோசையும் சூப்பர் combination !

Unknown said...

yummy chutney geetha!love the kutti idly.

Nithu Bala said...

karuveppillai serpathu pudusa irukku..kothamalli and pudina serthu araipen..thaniya karuveppillai thuvayal arappen..moonayum mix panniyathu illai..will try soon..btw, en mamiyar, konjam puliya konjama thanni vittu oora vachupanka araipatharku munbu..

Nithu Bala said...

karuveppillai serpathu pudusa irukku..kothamalli and pudina serthu araipen..thaniya karuveppillai thuvayal arappen..moonayum mix panniyathu illai..will try soon..btw, en mamiyar, konjam puliya konjama thanni vittu oora vachupanka araipatharku munbu..

தெய்வசுகந்தி said...

நானும் கறிவேப்பிலை சேர்த்ததில்லை! கொத்தமல்லி சேர்த்து செய்திருக்கிறேன். இஞ்சி சேர்ப்பதும் புதுசா இருக்குது. அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

Superb Presentation.

deen_uk said...

unga puthina style ninaichaale vaai vooruthu!!! voorla enga amma seiyum style gnabaga paduthitteenga! inga london la entha hotellayum kooda suvayaana chutney kidayathu..inimel unga style follow pannida vendiyathu thaan..!! thanx..!!
im very new for ur site...but i jus enjoyed ur site..thnx 4 all ur gr8 usefull tips...inimel naanum unga samalaraikku daily vanthu unga samayal palagikka vendiyathu thaan! thnx..

Raks said...

Lovely thogayal,should be so flavorful and very healthy too!

Unknown said...

ஆஹா பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு

Unknown said...

ஆஹா பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு

Pushpa said...

Ungal Pudhina thogayal supero super....

Pushpa @ simplehomefood.com

மனோ சாமிநாதன் said...

புதினா துவையலைச்சுற்றி இட்லி அலங்காரம் ரொம்பவும் அழகாக இருக்கிறது கீதா!!

சசிகுமார் said...

படம் அருமை, இட்லியை வைத்தே ஒரு அழகிய தோற்றத்தை உருவாக்கி உள்ளீர்கள்.

Pavithra Srihari said...

Wow ... That is one super dooper pic ... Love this chutney anytime and Adding curry leaves is a variation to normal chutney which makes it more healthier

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி..ஆமாம் மகி...நான் எப்பொழுதும் புளியினை வெட்டி தான போடுவேன்...அப்பொழுது தான் இங்க புளி நல்லா அரைப்படுவது மாதிரி இருக்கு...

ஆமாம் மகி...இதுல பாதி எங்க வீட்டு புதினா தான்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கூல்..எங்க வீட்டில் இது அனைவரின் விருப்பம்...தேங்காய் சேர்க்காமல் செய்வதால் அருமையாக இருக்கும்.

எப்பொழுதும் கருவேப்பில்லை சேர்த்து தான் செய்வோம்...நீங்கள் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

GEETHA ACHAL said...

// Chitra said...
புதினா துவையலும் தோசையும் சூப்பர் combination !//எனக்கு பிடித்த காம்பினேஷன்...
நன்றி சித்ரா...

நன்றி ப்ரேமலதா....

GEETHA ACHAL said...

நன்றி நிது...இதில் கருவேப்பில்லை சேர்த்து செய்து பாருங்க...சூப்பராக இருக்கும்...உங்க மாமியார் கொடுத்த டிப்ஸும் சூப்பர்ப்..அம்மா கூட சொல்லியிருங்க..கண்டிப்பாக அடுத்த முறை உங்கள் டிப்ஸுனை follow செய்துவிடுகிறேன்...

GEETHA ACHAL said...

நன்றி தெய்வசுகந்தி...கண்டிப்பாக செய்து பாருங்க...இஞ்சி சேர்த்தால் தான் நல்லா மணமாகவும் சுவையாகவும் இருக்கும்...

நன்றி புவனா...

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தீன்...

கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

GEETHA ACHAL said...

நன்றி ராஜி...

நன்றி பாயிஜா...

நன்றி புஷ்பா...

நன்றி மனோ ஆன்டி

GEETHA ACHAL said...

நன்றி சசி...

நன்றி பவித்ரா..

Padhu Sankar said...

I love this chutney very much .Your idlys are tempting me

Thenammai Lakshmanan said...

சூப்பர் துவையல்.. தேங்காய் இல்லாமல் நல்லா இருக்கு கீதா..

Asiya Omar said...

கீதா ஆச்சல் ஏகப்பட்ட துவையல் வெரைட்டி செய்து அசத்துறீங்க.எங்கிட்ட வந்து துவையல் பற்றி ஒரு முறை கேட்டது நினைத்து இப்ப சிரிப்பு தான் வருது,அருமை.

Jayanthy Kumaran said...

Now, I crave for those hot soft baby idlies and delicious chutney....

Tasty appetite

Chitra said...

New to me.never tried this way. will try for idly :)

ஸாதிகா said...

அருமையான பிரஷண்டேஷன்

Menaga Sathia said...

சூப்பர்ர் துவையல் மற்றும் ப்ரெசண்டேஷன்...

priya.r said...

ஆரோக்கியத்தை கொடுக்கும் சமையல் குறிப்புக்கு நன்றிங்க கீதா

Krishnaveni said...

all time fav for idly, looks so good

Sadhana Valentina said...

Supero super!

அப்பாவி தங்கமணி said...

வாவ்... பாத்தாலே சாப்பிட ஆசையா இருக்கு... thanks for sharing the recipe

GEETHA ACHAL said...

நன்றி பத்மா...

நன்றி தேனம்மை...

நன்றி ஆசியா...

நன்றி ஜெய்...

நன்றி சித்ரா...

GEETHA ACHAL said...

நன்றி மேனகா...

நன்றி ப்ரியா...

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி சதனா...

நன்றி தங்கமணி...

Priya Suresh said...

Mouthwatering thuvaiyal..

Anisha Yunus said...

கீதா க்கா,

துவையலை விட இட்டிலிதேன் கண்ணுலயே நிக்குது. அந்த மாதிரி பூப்போல இட்டிலிக்கு ஒரு குறிப்பு போடுங்களேன். இங்க இட்லி ரைஸ்கிடைப்பதில்லை. பச்சரிசி வாங்கி வச்சிருக்கேன். இனிமேதேன் செஞ்சு பாக்கனும். சீக்கிரம் அதற்கான் குறிப்பும் போடுங்க ப்ளீஸ்

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...

நன்றி அன்னு...இட்லிக்கு கண்டிப்பாக குறிப்பு போட்டுவிட்டால் போச்சு...பொதுவாக இட்லிக்கு அரைக்கும் பொழுது வெந்தயம் சேர்க்காமல் அரைத்தால் நன்றாக வெண்மையாக படத்தில் இருப்பது போல இட்லி வரும்...செய்து பாருங்கள்...நன்றி...

Jaleela Kamal said...

தூரத்தில் இருந்து பார்க்க
அவித்த முட்டையின் நடுவில் துவையல் வைத்த மாதிரி இருந்தது.
ஏன் கெட்டியாக இருக்கு.
குஸ்காவிற்குதொட்டு கொள்வது போல்.
இட்லிக்கு கொஞ்சம் தண்ணீர் மாதிரி இருந்தால் நல்ல இருக்கும்./

Jaleela Kamal said...

கலர் காம்பினேஷன் ரொம்ப நல்ல இருக்கு, நானும் சில நேரம் இந்த முன்று இலைகளும் சேர்த்து அரைப்பதுண்டு

ரொம்ப நல்ல இருக்கும்.

(ஏன் கேட்கிறிங்க பிலாக்கே மொத்தமா போயிருக்கும்) நேற்று க்காலையில் பார்த்துட்டு பக்குனு ஆகிவிட்டது, உடனே மாற்றியாச்சு.

Related Posts Plugin for WordPress, Blogger...