காளிப்ளவர் குருமா - Cauliflower Kurma

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         காளிப்ளவர் – 1
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         தேங்காய் சிறிய துண்டு (2 மேஜை கரண்டி)விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         உப்பு - தேவைக்கு

முதலில் தாளிக்க :
·         பட்டை ,கிராம்பு, ஏலக்காய் – 1
·         சோம்பு – 1 தே.கரண்டி

வதக்க வேண்டிய பொருட்கள் :
·         வெங்காயம் – 1 பெரியது நறுக்கியது
·         பச்சைமிளகாய் – 2
·         மிளகு – 10 – 15 (காரத்திற்கு ஏற்றாற் போல)

செய்முறை :
·         காளிப்ளவரினை சிறிய சிறிய பூக்களாக நறுக்கி கொள்ளவும்.

·         வதக்க வேண்டிய பொருட்களை வதக்கி சிறிது நேரம் ஆறவிடவும். தேங்காயினை மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும். தேங்காய் நன்றாக அரைந்தவுடன், கடைசியில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் தாளித்து அத்துடன் காளிப்பளவர் + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

·         இத்துடன் அரைத்து வைத்துள்ள விழுது + 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.

·         சுவையான காளிப்பளவர் குருமா ரெடி. இதனை சாப்பாத்தி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
வெங்காயத்தினை வதக்கும் பொழுது எண்ணெய் சேர்த்து வதக்க தேவையில்லை

குருமா ரொம்பவும் தண்ணீயாக இல்லாமல் இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
இதில் காரத்திற்கு மிளகு + பச்சைமிளகாய் மட்டுமே சேர்த்து கொள்ளவும்.

35 comments:

எல் கே said...

try pannalam

புவனேஸ்வரி ராமநாதன் said...

Superb presentation.

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

நன்றி புவனா...

Chitra said...

Looks good..... :-)

சசிகுமார் said...

சூப்பர் குருமா ரெடி வாங்க வாங்க சீக்கிரம் காலியாயிடும் நம்ம கீதாக்கா செய்ததாச்சே

ஸாதிகா said...

சூப்பர் குறிப்பு!

Menaga Sathia said...

அருமையான சைட் டிஷ்!!

ADHI VENKAT said...

செய்து பார்க்கிறேன்.

Priya said...

Looks awesome! Thanks Geetha!

Priya Suresh said...

Very interesting and wonderful looking kurma..

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா..

நன்றி சசி..//சூப்பர் குருமா ரெடி வாங்க வாங்க சீக்கிரம் காலியாயிடும் நம்ம கீதாக்கா செய்ததாச்சே//எற்கனவே படம் எடுக்கும் பொழுதே காலியாயிடுச்சு - படத்தில் தெரிக்கின்றதா...ரொம்ப நன்றி...

நன்றி ஸாதிகா அக்கா...

GEETHA ACHAL said...

நன்றி மேனகா...

நன்றி கோவை2தில்லி...

நன்றி ப்ரியா...

நன்றி ப்ரியா..

Nithu Bala said...

enakku pidicha kurma..make it almost in same way..nice picture..

Asiya Omar said...

அருமை.கீதா.

தெய்வசுகந்தி said...

சப்பாத்தியும் குருமாவும் பார்க்கும்போதே சாப்பிடனும்போல தோணுது. சூப்பர்!

Sadhana Valentina said...

arumayana kuruma!!!

Jagruti said...

colourful kurma..!

Krishnaveni said...

my fav kurma, looks so good

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_22.html

Mrs.Mano Saminathan said...

வித்தியாசனமான காலிஃபிளவர் குருமா! பக்கத்திலிருக்கும் சப்பாத்தியும் அருமை!

Asiya Omar said...

உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கேன்.
http://asiyaomar.blogspot.com/2010/09/blog-post_24.html

Thenammai Lakshmanan said...

எங்கள் வீட்டில் எல்லாருக்கும் எப்போதும் பிடித்தது காலிளவ கீதா.. சூப்பரா இருக்கு டா..:)

Kanchana Radhakrishnan said...

சூப்பர் குருமா.

Kanchana Radhakrishnan said...

சூப்பர் குருமா.

Raks said...

I love cauliflower kurma,my kid too, tastes grate with roti !! Nice version Geetha!

Chef.Palani Murugan, said...

Superb!

GEETHA ACHAL said...

நன்றி நிது...

நன்றி ஆசியா அக்கா...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி சாதனா...

GEETHA ACHAL said...

நன்றி நிது...

நன்றி ஆசியா அக்கா...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி சாதனா...

GEETHA ACHAL said...

நன்ரி கிருஷ்ணவேனி...

நன்றி ஜெய்லானி...

நன்றி மனோ ஆன்டி...

நன்றி ஆசியா அக்கா...

நன்றி தேன் அக்கா...

நன்றி கஞ்சனா...

GEETHA ACHAL said...

நன்றி பழனி...

Anonymous said...

anbu geetha achal avargallukku,
pudhumaiyana recipegal kodutthukkondiruppadharku nandri.Recipeyudan adhanudaiya calorie countaiyum serthu koduththaal migavum payanullathaaga irukkum. seiveergala?

ராஜேஷ் said...

நன்றி கீதா ஆச்சல்.
இன்றைக்கு நான் இந்த காளிப்ள்வேர் குருமா செய்தேன் . மிகவும் ருசியாக இருந்தது.

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கு நன்றி ராஜேஷ்...

செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி...

பிரதீபா said...

இதையும் செஞ்சு பாத்தேன்.. இந்த ரெசிபியோட சிறப்பே அந்த மிளகு சேர்க்கை தாங்க கீதா. காரமா, ஸ்ஸ், அடடா. காளிபிளவர் ன்னா ஓடிருவார் எங்க மச்சான்; இதை நல்லா இருக்கே அப்படீன்னு சொல்லி சாப்பிட்டார். எங்க அண்ணாவும் சூப்பர்ன்னு சொன்னாங்க. எல்லாம் கீதா ஆச்சல் மகிமை ன்னு நான் சொன்னேன். மிக்க நன்றி கீதா.

இனியும் உங்களுடைய ரெசிபிக்கள் முடிந்தவரை செய்து பார்க்கிறேன்; எப்படி வந்ததென்றும் சொல்கிறேன்.

GEETHA ACHAL said...

நன்றி பிரதீபா...செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி...

கண்டிப்பாக நேரம் கிடைக்கும் பொழுது செய்து பாருங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...