சீரக சிக்கன் - Jeera Chicken - Cumin Chicken

எப்பொழுது ஒரே மாதிரி சிக்கன் மசாலா, பெப்பர் சிக்கன், சிக்கன் குருமா என சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்பதால், நான் சமைத்த சீரக சிக்கன்எதிர்பார்ததினை விட சூப்பராக வந்து இருந்தது

நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

தேவையான பொருட்கள் :
சிக்கன – 1/2 கிலோ
எண்ணெய் – 2 – 3 மேஜை கரண்டி
              
முதலில் தாளிக்க:
·         பட்டை – 1
·         ஏலக்காய் – 2
·         கிராம்பு – 2

கொரகொரப்பாக அரைத்து கொள்ள :
·         வெங்காயம் – 2 - 3
·         பூண்டு – 10 பல்
·         இஞ்சி – 1 பெரிய துண்டு

வறுத்து அரைத்து கொள்ள :
·         கசகசா – 2 மேஜை கரண்டி
·         காய்ந்த தேங்காய் துறுவல் – 1 மேஜை கரண்டி


ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ள :
·         மிளகு – 10 – 15 (காரத்திற்கு எற்றாற் போல)

பொடித்து கொள்ள :
·         சீரகம் – 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டி தூள் வகைகள் :
·         மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு தேவைக்கு

செய்முறை :
·         சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி + பூண்டு + நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.


·         கசகசாவினை சிறிது வறுத்து அத்துடன் தேங்காயும் சேர்த்து வறுத்து கொண்டு சிறிது தண்ணீரில் ஊறவைத்து மைய அரைத்து கொள்ளவும்.

·         சீரகத்தினை பொடித்து கொள்ளவும். மிளகினை ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.

·         அரைத்த கசகசா + சிக்கன் + பொடித்த மிளகு + 1 தே.கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பிறகு, அரைத்த வெங்காய விழுதினை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

·         அத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து மேலும் 5 – 6 நிமிடங்கள் வதக்கவும்.

·         பிறகு, ஊறவைத்துள்ள சிக்கனை இத்துடன் சேர்த்து கிளறவும்.

·         சிக்கன் பாதி வெந்தவுடன், சீரகத்தினை சேர்த்து கிளறி மேலும் வேகவிடவும்.

·         சுவையான சீரக சிக்கன் ரெடி. இதனை சாதம், குழம்பு, சாப்பத்தி, தோசை போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
சீரகம், மிளகு போன்றவையினை Freshஆக பொடித்து கொண்டு சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

வெங்காயத்தினை கொரகொரப்பாக தான் அரைக்க வேண்டும். மைய அரைத்தால் சுவை வேறுப்படும்.

கசகசாவிற்கு பதிலாக 4 முந்திரி பருப்பினை விரும்பினால் சேர்த்து கொள்ளலாம். அதிகம் சேர்க்க வேண்டாம்.

சிறிது கிரேவியாக விரும்பினால் வெங்காயத்தினை கூடுதலாக சேர்த்து கொள்ளவும். அல்லது சிக்கன் ஸ்டாக் சேர்த்து கொள்ளலாம்.

21 comments:

Mahi said...

looks nice Geetha!

எல் கே said...

ok

Chitra said...

Looks yummy and delicious! :-)

சசிகுமார் said...

படங்கள் தூள்

ஸாதிகா said...

சீரகசிக்கன்..அருமை!

சிங்கக்குட்டி said...

சூப்பர் கீதா குறித்துக்கொண்டோம், சிக்கன் எப்படி செய்தாலும் எனக்கு பிடிக்கும் :-).

ஹுஸைனம்மா said...

நாங்க மிலகு கறின்னு மட்டன்ல செய்வோம்; கிட்டத்தட்ட அதுபோல. ஆனா அதுல கசகசா சேக்கிறதில்ல.

'பரிவை' சே.குமார் said...

Wow...

Photos Kalalkkal.

Nalla irukkum pola irukkey... mmm... intha varam parkalam.

Menaga Sathia said...

சூப்பர்ர்ர்,மிகவும் அருமையாக இருக்கு!!

Asiya Omar said...

செய்முறை வித்தியாசமாக இருக்கு,அசத்தல்.

Jayanthy Kumaran said...

delicious recipe..sounds very tempting...

Tasty Appetite

Gita Jaishankar said...

HI Geetha, how are you? This is a very interesting chicken preparation...looks very tasty...I have to try this soon :)

Krishnaveni said...

super geetha, beautiful recipe looks great

Unknown said...

மிகவும் சுவையாக இருக்கும்.. இந்த சீரக சிக்கனை மிளகு சிக்கன் என்று சொல்லுவோம்... உடல்லின் ஈரத்தினை இது எடுக்குமுனு சொல்லுவாங்க

GEETHA ACHAL said...

நன்றி மகி...

நன்றி கார்த்திக்...

நன்றி சித்ரா..

நன்றி சசி..

நன்றி ஸாதிகா அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி சிங்ககுட்டி...செய்து பாருங்க...அருமையாக இருக்கும்.

நன்றி ஹுஸைனம்மா...

நன்றி குமார்...

நன்றி மேனகா....

GEETHA ACHAL said...

நன்றி ஜெய்...

நன்றி கீதா...இங்கு அனைவரும் நலம்...நீங்க எப்படி இருக்கிங்க...வருகைக்கு நன்றி...

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி சிநேகிதி...

Niloufer Riyaz said...

supera irukku!!

vanathy said...

looking very yummy. Will try this one very soon.

Latha said...

I am watching your blog for 2 months...really tasty & colourful recipies...thank u so much for your dedicative job...I need a recipe of vegetable avial...

once again thank u

PLAVIO said...

I LIKE UR VARITES OF FOODS IT'S SO TASTEY

Related Posts Plugin for WordPress, Blogger...