கோங்கூரா - புளிச்சக்கீரை துவையல் - Kongura Thuvayal


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         புளிச்சக்கீரை - 1 கட்டு
·         முழு பூண்டு – 2 (சுமார் 40 பூண்டு பல்)
·         காய்ந்த மிளகாய் – 6
·         புளி – நெல்லிக்காய் அளவு
·         வடகம் - 1 மேஜை கரண்டி
·         உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :
·         கீரையை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசிய பிறகு, பொடியாக வெட்டி கொள்ளவும். பூண்டை தோல் நீக்கி,  நசுக்கிக் வைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் விட்டு கீரையினை வதக்கி தனியாக வைக்கவும். மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டு + காய்ந்த மிளகாயினை போட்டு தனி தனியாக வதக்கி கொள்ளவும்.கடைசியில் வடகத்தையும் பொரித்துக் வைக்கவும்.

·         முதலில் மிக்ஸியில் கீரை + காய்ந்த மிளகாய் + உப்பு + புளி சேர்த்து அரைக்கவும். இந்த கலவை முக்கால் பாகம் அரைப்பட்டதும் வடகத்தை போட்டு அரைக்கவும்.

·         கடைசியாக இத்துடன் வதக்கிய பூண்டையும் சேர்த்து ஒருமுறை pulseயில் அரைக்கவும்.. கடாயில் சிறிது எண்ணெய் காயவைத்து ஆறவைத்து அரைத்த கீரையில் ஊற்றவும்.

·         இந்த துவையல் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். இதனை சாதம், கலந்த சாதம், இட்லி, தோசை போன்றவையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

24 comments:

Pavithra said...

One of my fav thuvaya..paarkave vaai urudhu geetha..

Priya said...

Such a tempting thuvaiyal...mouthwatering..

Chitra said...

ஆந்திரா சமையல் மணம் மூக்கைத் துளைக்குது....

ஜெய்லானி said...

நல்லா இருக்கு ,
ஊருக்கு போனால்தான் தான் கிடைக்கும்..!!

Krishnaveni said...

this is my dad's fav thuvayal, looks so good

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா...நன்றி ப்ரியா...நன்றி சித்ரா...நன்றி ஜெய்லானி...நன்றி கிருஷ்ணவேனி...

vanathy said...

வித விதமா அசத்திறீங்க. நல்லா இருக்கு, கீதா.

சசிகுமார் said...

கீரை எனக்கு பிடித்த ஒன்று, ஆனால் குழம்பு தான் சாப்பிட்டு உள்ளேன் இது புதுவிதமாக உள்ளது அக்கா, தினமும் புது புது விஷயங்களை பரிமாரிகொண்டிருக்கிரீர்கள் அருமை அக்கா

சாருஸ்ரீராஜ் said...

nalla irukku geetha , seithu parkiren .. mouth watering after seeing this.....

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

புளிச்ச‌க் கீரை ந‌ல்ல‌ உண‌வு. வாழ்த்துக்க‌ள்

சிங்கக்குட்டி said...

வாவ் சூப்பர் கலக்குங்க.

படங்கள் பார்க்க ரொம்ப பசுமையா இருக்கு :-)

ஸாதிகா said...

ஆந்திரா சாப்பாட்டில் தவறாது கிடைக்கும் துவையல்.செய்முறை அறியத்தந்தமைக்கு நன்றி கீதாஆச்சல்.

Mrs.Menagasathia said...

எனது குறிப்பை செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!! படங்களுடன் மிக அருமை!!

Anonymous said...

I am looking for this reciepe . Thank you!
I found two blogspot in the same name. Did you check?
Sangamithra

Mahi said...

துவையல் நல்லாருக்கு கீதா.

இந்த கீரை நான் இதுவரை சாப்பிட்டதே இல்ல.கீரைய வாங்கவே தைரியம்(!!?) வரமாட்டேன்னுது.ஒரு முறை டேஸ்ட் பண்ணிட்டா வாங்கிடுவேன்.:)

Sadhana said...

Nice recipe dear!

GEETHA ACHAL said...

நன்றி வானதி..

நன்றி சசிகுமார்...இந்த முறையிலும் செய்து பாருங்க...அருமையாக இருக்கும்...

நன்றி சாரு அக்கா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி செப்.பழனி...

நன்றி சிங்ககுட்டி.

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி மேனகா...

நன்றி சங்கமித்ரா..//I found two blogspot in the same name. Did you check?//அப்படியா.பார்க்கிறேன்...

நன்றி மகி...ஒரு முறை இந்த கீரையினை வாங்கி பார்த்துவிட்டு சமைத்து பாருங்க...டேஸ்ட் சூப்பராக இருக்கும்...

நன்றி சாதனா...

Chitra said...

I make it in a different way.will try this method soon :)

Padhu said...

My family's favorite .I love it with hot rice

Akila said...

Wow lovely and mouthwatering recipe... love the greeny colour.

http://akilaskitchen.blogspot.com

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு, கீதா.

koini said...

waw..mouthwatering thuvayal...geetha ithil vadagam use pannaama araikkalaamlaiyaa???yenna enkitta vadagam illai.

Anonymous said...

vadagam endral enna?

Related Posts Plugin for WordPress, Blogger...