ஸ்பைசி சிக்கன் சாலட் - Spicy Chicken Salad

எளிதில் செய்ய கூடிய சுவையான சத்தான சிக்கன் சாலட்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         Boneless skinless சிக்கன் – 1/2 கிலோ
·         ஸ்பினாச் கீரை – 2 கப்
·         எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி
·         உப்பு – 1/4 தே.கரண்டி
·         ஆலிவ் ஆயில் – 1 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டி தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
·         தனியா தூள் - 1 தே.கரண்டி
·         மிளகுதூள் - 1 தே.கரண்டி
·         சீரகதூள் - 1 தே.கரண்டி
·         சோம்புத்தூள் - 1 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

செய்முறை:
·         சிக்கனை சுத்தம் செய்து பெரிய பெரிய நீண்ட துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

·         சிக்கனுடன் சேர்த்து வேண்டிய தூள் வகைகள் + எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  
·         அகலமான அடிகணமான கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி, சிக்கனை சேர்க்கவும். இதனை தட்டு போட்டு முடிவேகவிடவும்.

·         ஒரு பக்கம் நன்றாக வெந்தபிறகு சிக்கனை மறுபக்கம் திருப்பி போட்டு மேலும் 2 – 3 நிமிடங்கள் தட்டு போட்டு வேகவிடவும்.

·         பிறகு, சிக்கனை சிறிய சிறிய துண்டுகளாக கரண்டியால் வெட்டிவிடவும்.

·         சிறிது நேரம் வேகவிடவும். இப்பொழுது சாலடிற்கு சிக்கன் ரெடி.

·         ஸ்பினாச் +ஆலிவ் ஆயில் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         பரிமாறும் தட்டில், ஸ்பினாச் இலைகள் வைத்து அதன் மேலே சிக்கனை வைத்து பரிமாறவும். சுவையான சத்தான சாலட் ரெடி.

கவனிக்க:
சிக்கனை பெரிய பெரிய துண்டுகளாக வேகவைத்த பிறகு அதனை சிறிய துண்டுகளாக வெட்டுவதால் அதனுடைய Juciness அப்படியே இருக்கும்.

சிறிய சிறிய துண்டுகளாக முதலிலேயே வெட்டினால சிறிது Dryயாக இருக்கும்.

சிக்கன் வெந்த பிறகு, கடாயிலேயே கரண்டியால் வெட்டலாம். அப்படி வெட்ட முடியவில்லை என்றால், சிக்கனை எடுத்து Cutting Boardயில் வைத்து கத்தியினால் வெட்டிய பிறகு, மீண்டும் கடாயில் போட்டு மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிட்டால் சுவையாக இருக்கும்.

17 comments:

Unknown said...

இங்கிட்டு காலை 9 மணி

இப்படியெல்லாம் உசுப்பேத்த கூடாது

:)

எல் கே said...

ullen

Chitra said...

mouth-watering recipe.. Thank you very much.

சசிகுமார் said...

அருமை அக்கா எப்பவும் போல படங்கள் அருமை சாப்பிட தூண்டுகிறது வாழ்த்துக்கள்

சிங்கக்குட்டி said...

சாலட் சூப்பர்...உங்களுக்கு போட்டியா நானும் ஒரு சமையல் குறிப்பு எழுத தீவிரமா யோசிச்சு கிட்டு இருக்கேன் :-).

ஜெய்லானி said...

ஆஹா படத்தை காட்டி ஜொள் விட வச்சிட்டீங்களே..!!

Jayanthy Kumaran said...

wow Geetha...very spicy and innovative chicken recipe...bookmarked ...:)

ஸாதிகா said...

ஹை..வித்தியாசமாக இருக்கே.அசத்துறீங்க கீதாஆச்சல்

Vijiskitchencreations said...

சாலட் படம் பார்க்க சூப்பரா இருக்கு கீதா.

உங்களை என் தொடர் பதிவில் அழைத்துள்ளேன்.
கெதியா வாங்கோ வந்து சட்பட்னு எழுதுங்கோ. எல்லாரும் வெயிட்டிங்.
ஆல் தெ பெஸ்ட் கீதா.

vanathy said...

சூப்பர் ரெசிப்பி. செய்து பார்க்க வேண்டும்.

Krishnaveni said...

superb....superb...superb..............

Priya Suresh said...

Salad paathathume pasikuthu...very tempting..

Asiya Omar said...

சூப்பர் செய்முறை அருமை.

GEETHA ACHAL said...

நன்றி ஜமால் அண்ணா..

நன்றி கார்த்திக்...

நன்றி சித்ரா..

நன்றி சசி...

நன்றி சிங்ககுட்டி...சீக்கிரம் போடுங்க...நாங்களும் பார்க்க ஆசையாக இருக்கின்றோம்..

GEETHA ACHAL said...

நன்றி ஜெய்லானி...

நன்றி ஜெய்...கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி ஸாதிகா அக்கா...

நன்றி விஜி...ஆஹா திரும்பவும் தொடர் பதிவா...கூடிய சீக்கிரத்தில் எழுத பார்க்கிறேன்...நன்றி...

GEETHA ACHAL said...

நன்றி வானதி...

நன்றி கிருஷ்ணவேனி..

நன்றி ப்ரியா...

நன்றி ஆசியா அக்கா...

jeevitha jagadeesh said...

nice chiken fry....u gave many tips geetha...superb

Related Posts Plugin for WordPress, Blogger...