காளிப்ளவர் வறுவல் - Cauliflower Varuval


ஒரு மாதம் Vacationயிற்கு பிறகு திரும்பவும் உங்கள் அனைவரையும் ப்ளாக் பக்கம் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி….ஒரு மாதம் சீக்கிரமாக ஒடிவிட்டது….

என்னை அன்புடன் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி….

சரி…சரி…வாங்க….எப்பொழுதும் காளிப்ளவரில் பொரியல், குருமா, பகோடா என்று சாப்பிட்டு போர் அடித்துவிட்டாதா…வாங்க வந்து இந்த காளிப்ளவர் வறுவலினை செய்து சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்க…

மிகவும் குறைந்த அளவு எண்ணெய் உபயோகித்து செய்ய கூடிய ஹெல்தியான ரிச்சான வறுவல் இது….

சமைக்க தேவைப்படும் நேரம் : 25 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         காளிப்ளவர் – 1
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய பொருட்கள் :
·         கடலைமாவு – 1/2 கப்
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி 
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
காளிப்ளவரினை சிறிய சிறிய பூக்களாக வெட்டி கொள்ளவும்.

சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் + 1 மேஜை கரண்டி + காளிப்ளவர் பூக்களினை சேர்த்து நன்றாக கலந்து  5 - 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

நான்-ஸ்டிக் கடாயில் 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி சூடனாதும், ஊற வைத்துள்ள காளிப்ளவரினை போட்டு வதக்கவும்.

ஒரு பக்கம் நன்றாக வெந்தபிறகு(சுமார் 4 - 5 நிமிடங்கள்) கழித்து காளிப்ளவரினை கிளறிவிடவும்.

அடிக்கடி கிளறாமல் 3 – 4 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறினால் போதும். சுவையான எளிதில் செய்ய கூடிய வறுவல் ரெடி.

கவனிக்க :
அவரவர் விரும்பத்திற்கு ஏற்றாற் போல மசாலா பொருட்களை சேர்த்து கொள்ளலாம்….

கார்ன்மீல் தோசை & அவசர பூண்டு மிளகாய் பொடி - Corn Meal Dosai & Garlic Podi

கார்ன்மீல் தோசை மிகவும் மொருமொருப்பாகவும் சுவையாகவும் இருந்தது…

எப்பொழுதும் இட்லி மாவு அரைத்து 3 - 4  நாட்கள் ஆகியபிறகு, இட்லி செய்தால் அதில் இட்லி நல்லா இருக்காது…அதனால அந்த சமயத்தில் தோசை தான் எப்பொழுதும் இருக்கும்.

தோசை மாவு அதே மாதிரி தான், கடைசியில் இருக்கும் தோசை மாவிலும் தோசை ஒழுங்காக வராது…அல்லது தோசை நன்றாக இருக்காது…(தோசை & இட்லி மாவு உடனே 2 – 3 நாட்களில் காலி செய்துவிட்டால் இந்த பிரச்சனை இருக்காது….)

எப்பொழுதும் கடைசியில் இருக்கும் மாவில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஊத்தாப்பம் செய்வோம் அல்லது ரவை சேர்த்து தோசை சுடுவேன்…ஒரு மாறுதலுக்காக கார்ன்மீல் (Corn Meal Flour) சேர்த்து தோசை செய்தேன்…

இந்த தோசை மிகவும் சூப்பரான சுவையான இருக்கும்…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 1 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         இட்லி / தோசை மாவு – 1 கப்
·         கார்ன் மீல் மாவு – 1/2 கப்
·         உப்பு – தேவைக்கு

செய்முறை :
·         இட்லி மாவு + கார்ன்மீல் மாவு + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

·         இந்த மாவினை குறைந்தது 1 – 2 மணி நேரம் வரை சிறிது புளிக்கவிட்டு தோசை சுடலாம்.

·         தோசைமிகவும் மொருமொருப்பாக வரும். ஒரு பக்கம் நன்றாக சிவந்த பிறகு மறுபக்கம் திருப்பி போடவும்.

·         சுவையான கார்ன்மீல் தோசை ரெடி. இதனை சட்னி, சாம்பாருடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

அவசர பூண்டு மிளகாய் பொடி

அடிக்கடி எங்கள் வீட்டில் செய்யும் பொடி … எளிதில் 1 நிமிடத்தில் பொடி ரெடி…

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 நிமிடம்
தேவையான பொருட்கள் :
·         பூண்டு – 10 பல் தோல் நீக்கியது
·         காய்ந்த மிளகாய் – 4
·         நல்லெண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         உப்பு – சிறிதளவு

செய்முறை :
·         பூண்டு + காய்ந்த மிளகாய் + உப்பு சேர்த்து மிக்ஸியில் Pulse Modeயில் 2 – 3 முறை அடிக்கவும்.

·         அரைத்த கலவை + நல்லெண்ணெய் சேர்த்து கலந்து பரிமாறவும். எளிதில் செய்ய கூடிய பொடி இது.

கவனிக்க :
இந்த பொடியிற்கு நல்லெண்ணெய் சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்…

ப்ரிஜில் வைத்தால், 2 – 3 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...