கார்ன்மீல் தோசை & அவசர பூண்டு மிளகாய் பொடி - Corn Meal Dosai & Garlic Podi

கார்ன்மீல் தோசை மிகவும் மொருமொருப்பாகவும் சுவையாகவும் இருந்தது…

எப்பொழுதும் இட்லி மாவு அரைத்து 3 - 4  நாட்கள் ஆகியபிறகு, இட்லி செய்தால் அதில் இட்லி நல்லா இருக்காது…அதனால அந்த சமயத்தில் தோசை தான் எப்பொழுதும் இருக்கும்.

தோசை மாவு அதே மாதிரி தான், கடைசியில் இருக்கும் தோசை மாவிலும் தோசை ஒழுங்காக வராது…அல்லது தோசை நன்றாக இருக்காது…(தோசை & இட்லி மாவு உடனே 2 – 3 நாட்களில் காலி செய்துவிட்டால் இந்த பிரச்சனை இருக்காது….)

எப்பொழுதும் கடைசியில் இருக்கும் மாவில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஊத்தாப்பம் செய்வோம் அல்லது ரவை சேர்த்து தோசை சுடுவேன்…ஒரு மாறுதலுக்காக கார்ன்மீல் (Corn Meal Flour) சேர்த்து தோசை செய்தேன்…

இந்த தோசை மிகவும் சூப்பரான சுவையான இருக்கும்…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 1 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         இட்லி / தோசை மாவு – 1 கப்
·         கார்ன் மீல் மாவு – 1/2 கப்
·         உப்பு – தேவைக்கு

செய்முறை :
·         இட்லி மாவு + கார்ன்மீல் மாவு + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

·         இந்த மாவினை குறைந்தது 1 – 2 மணி நேரம் வரை சிறிது புளிக்கவிட்டு தோசை சுடலாம்.

·         தோசைமிகவும் மொருமொருப்பாக வரும். ஒரு பக்கம் நன்றாக சிவந்த பிறகு மறுபக்கம் திருப்பி போடவும்.

·         சுவையான கார்ன்மீல் தோசை ரெடி. இதனை சட்னி, சாம்பாருடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

அவசர பூண்டு மிளகாய் பொடி

அடிக்கடி எங்கள் வீட்டில் செய்யும் பொடி … எளிதில் 1 நிமிடத்தில் பொடி ரெடி…

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 நிமிடம்
தேவையான பொருட்கள் :
·         பூண்டு – 10 பல் தோல் நீக்கியது
·         காய்ந்த மிளகாய் – 4
·         நல்லெண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         உப்பு – சிறிதளவு

செய்முறை :
·         பூண்டு + காய்ந்த மிளகாய் + உப்பு சேர்த்து மிக்ஸியில் Pulse Modeயில் 2 – 3 முறை அடிக்கவும்.

·         அரைத்த கலவை + நல்லெண்ணெய் சேர்த்து கலந்து பரிமாறவும். எளிதில் செய்ய கூடிய பொடி இது.

கவனிக்க :
இந்த பொடியிற்கு நல்லெண்ணெய் சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்…

ப்ரிஜில் வைத்தால், 2 – 3 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

41 comments:

எல் கே said...

poondu podi enakum pidikum

புவனேஸ்வரி ராமநாதன் said...

வித்தியாசமா இருக்கு. செய்து பார்க்கணும்.

சசிகுமார் said...

நல்ல டிப்ஸ் அக்கா வாழ்த்துக்கள். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Priya Suresh said...

Crispy dosa and poondu podi paathathum pasikuthu..yumm!

Asiya Omar said...

thoosai arumai.
oru vaaramaaka kaanoom.pathivulakil naan ezutha ungkaLai azaiththiruwtheen.

dsdsds said...

Dosai super geetha.. Corn meal flour and corn flour.. are they the same?? the chutney sounds yummy.. i prepare the same way, except I have been using red chilli pwd instead of whole chilli.. will give it a try some day!

Jayanthy Kumaran said...

irresistable n droolworthy clicks...am feeling hungry now...love the combo...

Tasty Appetite

ஹுஸைனம்மா said...

கார்ன் மீல் மாவுன்னா, 'corn flour'தானே கீதா?

Menaga Sathia said...

சூப்பர்ர் தோசை,எனக்கு ரொம்ப பிடித்த பொடி,ஞாபகபடுத்திட்டீங்க,இன்னிக்கு செய்துடனும்...இதனுடன் 4 கறிவேப்பிலை இலை சேர்த்து அரைத்தால் வாசனை செம தூக்கலா இருக்கும்....

Nithu Bala said...

Crispy dosai..nalla irukku...tempted to grab that plate..

Pavithra Elangovan said...

Geetha pundu podi and dosa..paarkave vaai oorudhu..

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்தல் குறிப்பு அக்கா அப்டியா எனக்கும் பார்சல் ..

Mahes said...

so crispy, looks so tsaty.

Mahi said...

கீதா,தோசை அருமையா இருக்கு.இந்த பொடி எங்க பெரியம்மா அம்மில வச்சு தட்டி குடுப்பாங்க.காரசாரமா இருக்கும்..நாங்க தேங்காயெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிடுவோம்.:P:P

vanathy said...

Yummy recipe!

Unknown said...

பூண்டு பொடி - இண்ட்ரெஸ்டிங்

Chitra said...

We too make poondu molaapdi. dosa is new to me..Looks yummy..

Raks said...

I have to still try buying corn meal and try, dosa looks great! And the garlic podi I too have the same in my blog,except I add coconut too :)

Thenammai Lakshmanan said...

நான் இந்த பொடியை மிளகாய் பொடி போட்டு செய்வேன் மா.. அருமையா இருக்கு

Akila said...

so lovely dosai...

http://akilaskitchen.blogspot.com

Regards,
Akila

T.V.ராதாகிருஷ்ணன் said...

வித்தியாசமா இருக்கு.

Krishnaveni said...

lovely combo, looks so good

ஜெய்லானி said...

இந்த பூண்டு பொடிக்கே நான் 4 தோசை எக்ஸ்டிராவா சாப்பிடுவேன்...!! இதை டைப் அடிக்கும் போதே ஜொள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள் வடியுதே..!!!

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்...

நன்றி புவனா..கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி சசி..

நன்றி ப்ரிய...

நன்றி ஆசியா அக்கா..Vacationயில் இருக்கோம்..அதனான் வரமுடியவில்லை..

GEETHA ACHAL said...

நன்றி ஹேம.. கார்ன்மீல் & கார்ன் மாவு இரண்டுமே வேறு....கார்ன்மீல் மாவிற்கும் ரவையிற்கும் நடுவில் இருப்பது...நன்றி...

நன்றி ஜெய்..

நன்றி ஹுஸைனம்மா...கார்ன் மீல் மாவு என்பது கார்ன்மாவு கிடையாது...இது நன்றாக அரைப்படாமல் , ரவையிற்கும் மாவிற்கும் நடுவில் இருக்கும்...Corn Flour மாவு மிகவும் அரைப்பட்டு இருக்கும்.

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..அம்மாவும் அப்படி தன் செய்வாங்க...இங்கே நான் கருவேப்பில்லை வாங்குவதே இல்லை...

நன்றி நிது...

நன்றி பவித்ரா..

நன்றி புதிய மனிதா...

GEETHA ACHAL said...

நன்றி மகேஷ்...

நன்றி மகி..தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிடுவது வித்தியசமாக இருக்கு..செய்து பார்க்கிறேன்...

நன்றி வானதி...

நன்றி ஜமால் அண்ணா..

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா..

நன்றி ராஜி...

நன்றி தேன் அக்கா..

நன்றி அகிலா..

GEETHA ACHAL said...

நன்றி ராதாகிருஷ்ணன்...

நன்றி கிருஷ்ணவேனி..

நன்றி ஜெய்லானி..

Mrs.Mano Saminathan said...

கார்ன் மீல் தோசை பார்க்க ரொம்ப அருமையா இருக்கு கீதா! நல்ல ஐடியா இது! அவசியம் செய்து பார்க்க வேண்டும்!!

சிங்கக்குட்டி said...

இப்படியே படத்தை பார்த்தே பசியாற்றிக்கொள்கிறேன்.

ஊருக்கு சென்றதும் இதை எல்லாம் நினைவில் வைத்து ஒரு வெட்டு வெட்ட வேண்டும் :-)

Sadhana Valentina said...

supera iruku

ஸாதிகா said...

கார்ன்மீல்தோசை வித்தியாசமாக உள்ளது.மொறுமொறுப்பைப்பார்க்கும் பொழுதே சமைத்து விடத்தூண்டுகின்றது

Unknown said...

Hi Geetha,

Dosa supera irrukku...Sorry for the delay in joining...i didnot know i could add blogs right from the reading dash board...i used to wait for google to load!!!

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

Anisha Yunus said...

கீதாக்கா,
ரொம்ப நாளா காணம்? உடம்பு சுகம்தானே? நல்லபடியாக நலமுடன், மீண்டும் சீக்கிரம் எழுதுங்கள். :)

PriyaRaj said...

cornmeal dosai romba crispy aa eruku ....nice combo with garlic podi....

Vijiskitchencreations said...

super crispy dosa. I luv it. I will try.
podi is super and yumm too.

GEETHA ACHAL said...

நன்றி மனோ ஆன்டி...

நன்றி சிங்ககுட்டி...

நன்றி சதனா....

நன்றி ஸாதிகா அக்கா...

நன்றீ சமீனா...

நன்றி அன்னு...

நன்றி ப்ரியா...

நன்றி விஜி...

mothu said...

I made this dosai came very well.
thanks for sharing receipe.

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கு நன்றி சுமா...

செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி..

Anonymous said...

hi iam anitha...
can you give the preparation of your
malli podi.....

Related Posts Plugin for WordPress, Blogger...