எங்களுடைய Vacation

அக்ஷ்தா குட்டிக்கு ரொம்ப நாளாகவே Disney World பார்க்க வேண்டும் என்று சொல்லி கொண்டு இருந்தாள்…குழந்தைக்கு மட்டுமா…சரி…நம்பளும் பார்க்க வேண்டிய இடம் தான் அது..அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்..

சரி…ஒரு வாரம் போகலாம் என்று தீடீரன ப்ளான் போட்டு புறப்பட்டோம்…Disneyயிற்கு போவதற்கு மிகவும் முக்கிய காரணம் இரண்டு பேர்… யார் அந்த இரண்டு பேர் என்று யோசிக்கின்றிங்களா…நீங்களே யார் அது என்று பார்க்க தான் போறிங்க….

New Yorkயில் இருந்து Orlando, Floridaவிற்கு Flightயில் சென்றோம்…அப்பொழுது Connecting Flightயிற்காக Philadelphiaவில உட்கார்ந்து இருக்கும் பொழுது சுமார் 20 -25 பள்ளி மாணவர்களை பார்த்தோம்…

அட …என்னட…பசங்க எல்லாம் Sky Blue Shirt w Dark Blue Pant ,School Uniformயில் இருக்காங்க…இங்க Uniform எல்லாம் கிடையாதே…பார்க்கவும் நம்மூர் பசங்க மாதிரி இருக்காங்களே என்று நினைத்து கொண்டேன்…

அப்பறம் பார்த்தா தான் தெரியுது…உண்மையாக நம்மூர் பசங்க தான்…அது சரி…ஏன் School Uniformயில் இருக்காங்க…என்று விசாரித்த பொழுது தான் தெரிந்த்து…அந்த பசங்க எல்லாம் இங்கே School Tourயிற்காக ஒரு வாரம் Orlando, Florida வந்து இருக்காங்க … ஏதாவது ஸ்கலர்ஷிப் மூலமாக வந்து இருக்காங்க என்றால் இல்லை…நாங்க தான் காசு கொடுத்து வந்து இருக்கோம் என்பது தான் பதில் மாணவர்களிடம் இருந்து கிடைத்தது…

மயக்கம் வாரத குறை தான் எனக்கு… எங்க வீட்டில் எல்லாம் எங்களை யாரையும் ஸ்கூல் படிக்கும் பொழுது டூர் அனுப்பியது இல்லை…எல்லாம் காலேஜ்…அதுவும் UG முடித்து PG படிக்கும் பொழுது தான்…

ஆனா…இப்ப பாருங்க… அந்த மாணவர்கள்  எல்லாம் 8 வது அல்லது 9வது தான் படிப்பாங்க…அப்ப தான் தெரிந்தது இந்தியா எவ்வளவு பணக்கார நாடாக இருக்கின்றது என்று….

இப்படியும் ஒரு ஸ்கூல் இருக்கின்றது…அதுவும் சென்னையில்… யாருக்காவது அந்த ஸ்கூலினை தெரியுமா…Vellammal Mat. Hig. Sec. School, Chennai. இது பிரபலமான ஸ்கூல் என்று அந்த மாணவர்கள் மூலமாக தான் தெரிந்தது…அதற்காக இப்படியா….

சரி…சரி…மேட்டருக்கு வாராமா ஏதோ சொல்லிக்கிட்டு இருக்கேன்… 1 வாரம் என்பதால் முதலில் அக்ஷ்தாவிற்காக Disney World- Magic Kingdomயிற்கு சென்றோம்…

முதலில் எங்களை Daisy தான் வரவேற்றது….அக்ஷ்தாவிற்கு சந்தோசம்…ஆனால் அதன் பிறகு ஒரே அழுகை…

சரி…என்று அவளை அழைத்து கொண்டு Magic Kingdomயின் முக்கிய பகுதியான, Cinderella Castleயினை பார்த்த பிறகு தான் அவளுக்கு கொஞ்சம் சந்தோசம்…

அப்பறம் திரும்பவும் சோகமே உருவான மாதிரி இருந்தா…என்னடா ஆச்சு…என்று கேட்ட பிறகு தான் தெரிந்தது…அவ இன்னும் Mickey Mouseயையும் Cinderellaவையும் பார்க்க வில்லை என்று…
அப்பறம் அடுந்த 10 நிமிடத்தில் அங்கு ஒரு Showயில் Mickey Mouseவந்து டன்ஸ் ஆடியது…அத்துடன் நிறைய Princess, Prince, Disney Characters  எல்லாம் வந்து டன்ஸ் ஆடினாங்க…முக்கியமாக Cinderella…அக்ஷ்தா குட்டிக்கு ரொம்ப சந்தோசம்…அப்பறம் அங்க இருக்கின்றங்க Rides, Show என்று ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு Mickey ToonTown யிற்கு சென்றோம்…அங்கே Minnie House, Mickey House  எல்லாம் இருந்தது…


Mickey Houseயில் மிக்கியினை பார்க்க சுமார் 40 நிமிடங்கள் queueவில் காத்து இருந்து அப்பறம் Mickeyயினை பார்த்தோம்…மிக்கியை பார்த்தவுடனே அக்ஷ்தா குட்டி ஓடி போய் மிக்கியை Hug செய்து கொண்டாள்…அவளுடைய சந்தோசத்திற்கு அளவே இல்லை…

மிக்கியினை பார்த்த பிறகு அவளுக்கு அடுத்தது, Cinderellaவினை பார்க்க வேண்டும் என்பது தான்…சரி…அதுக்காக திரும்பவும் 45 நிமிடம் நின்றோம்…அப்பறம் Cinderellaவினை பார்த்தோம்...அக்ஷ்தாவிற்கு ,மிகுந்த சந்தோசம்…Cinderellaவுடன் 5 நிமிடங்கள் இருந்து இருப்பாள்…கடைசியாக விடைபெரும் பொழுது….U made our Day here…என்று சொல்லி வந்துவிட்டோம்…


அதுக்கு பிறகு நிறைய Rides, Shows என்று பார்தோம்…இரவு 9 மணிக்கு Electric Parade நடத்தினாங்க… சுமார் 30 நிமிடம் நடைப்பெற்றது…

அதன்பிறகு, 9.30 மணிக்கு Firework நடத்தினாங்க…அதுனுடைய Highlightயே Tinker Bell என்ற Fairy, Castleலுடைய மேலே இருந்து பறந்து கீழே வருவது தான்…

சரி..இப்ப கண்டுபிடிச்சிங்களா…யார் அந்த இரண்டு முக்கிய நபர்….என்ன பிடித்து இருந்ததா…முதல் நாள் ட்ரிப்…அடுத்த பதிவுகளில் மேலும் தொடரும்….

33 comments:

Srividhya Ravikumar said...

aha..arumai...nalla kalaki irukeenga akka... vazhthukkal..

ஸாதிகா said...

படங்களும்,பதிவும் அருமை.ஃபிரீயாக டிஸ்னிலாண்ட் அழைத்துச்சென்ற கீதா ஆச்சலுக்கு நன்றி.வேலம்மாள் இண்டர்நேஷனல் ஸ்கூல் சென்னை பூஞ்செட்டியில் உள்ளது.இது போல் புனித ஜான்ஸ் இண்டர்நேஷனல் பள்ளி,அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளி போன்றவை மேல்த்த்ட்டு மக்களுக்காகாவே உருவாக்க்ப்பட்டது.என் ஆர் ஐ கள் தங்கள் பிள்ளைகளை இப்படிப்பட்ட பல்ளிகளில் சேர்த்து விட்டு நிம்மதியாக வெளிநாடுகளில் இருக்கின்றனர்.கட்டணத்துக்கேற்ற வசதிகளையும் அள்ளி வழங்கும் நட்சத்திரப்பள்ளிகள் அவை.

எல் கே said...

படங்கள் அருமை. இந்தியா பணக்கார நாடாகவில்லை. டிஸ்னிய சுத்தி காமிச்சதுக்கு நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

படங்கள் அருமை. ட்ரிப்பும் நல்லாயிருந்தது.

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

சசிகுமார் said...

தமிழ் நாட்டை கொள்ளை அடித்து கொண்டிருக்கும் பள்ளிகளில் இதுவும் ஒன்று.

Jaleela Kamal said...

டிஸ்்ி

டிஸ்னி வேல்ட் சூப்பர்
ஃபைர் கிராக்கர்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்க்கும்
இங்கு ம்ம்ஜார் பார்க்கில் ஷாப்பிங் பெஸ்டிவலில் 5 வருடம் த்துக்கு முன் டிஸ்னி ஷோ நடந்த்த்து ரொம்ப அருமை, இப்படி வலை உலக நட்பு மூலம் அமெரிக்கா டிஸ்னி வேல்ட்டையும் பார்த்தாச்சு ரொம்ப சந்தோஷம்.
ஸ்கூல் டூரா , மூச், எட்டாங்கிளஸிலே இவ்வள்வு தைரியமா தனியாக அனுப்பி இருக்கங்க
இப்ப சென்னையில் தப்பு தான் வேணும் ரொம்ப லக்ஸரியான ஸ்கூல் எல்லா இடங்கள்ளிலும் இருக்கும். மார்க் தேவையில்லை தப்பு கொடுத்தா போதும்,
வேலம்ம்மாளும் பிரபல பள்ளி காலேஜில் இதுவும் ஒன்ர்று என் பையனுக்கு காலெஜ்க்கு விசாரிக்கும் போது மார்க் பற்றி கேட்கவே இல்லை 7 லட்சம் கொண்டு நேராவாங்க என்னவோ 7 ரூபாய் போல சர்வ சாதாரனாமாக சொன்னார்கள்.

Unknown said...

வேலம்மாள் இண்டர்நேஷனல் ஸ்கூல் பசங்க படிப்பிலும் படு சுட்டிகள்..

உங்கள் தயவில் டிஸ்னி வேல்டை சுற்றி பார்த்தாச்சு..

மகளுக்கு டிஸ்னியை பார்த்த சந்தோஷம் அனைத்து போட்டோவிலும் தெரிகிறதே..

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நன்றி கீதா எல்லாரையும் டிஸ்னி லாண்ட் க்கு அழைத்து சென்றதற்கு. அந்த ரெண்டு பேர் micky and cindrellava . cute akshu kutti.

வெங்கட் நாகராஜ் said...

அத்தனை படங்களும் அருமை. எங்களுக்கும் டிஸ்னி லேண்ட் சுற்றிக்காண்பித்ததற்கு நன்றி கீதா மேடம்.

Devasena Hariharan said...

nice photos.. ur kid is cute.

Those kids in chennai must be lucky, as not many of the parents would be able to afford such a trip from India.

Priya said...

Superb!

Pavithra Elangovan said...

Superb .. ur kuttie is so cute geetha.. hope u had wonderful time.

Menaga Sathia said...

super photos!!

saravanakumar sps said...

தலையங்கத்தை சரி செய்யவும்

Nithu Bala said...

nandraka ezhuthi irukeenka..video superb..

தெய்வசுகந்தி said...

super trip & photos!

ஹர்ஷினி அம்மா said...

படங்களும் உங்க விளக்கங்களும் சூப்பர் கீதா. குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த இடம் நமக்கும் தான்

ஆனா இந்த் கேரக்டரை பாக்க லைன்லே இப்பது தான் கொஞ்சம் கஸ்டம். :-)

Chitra said...

Remembered our trip to Disney World..... Thank you.

Nice photos and post. :-)
she is cute!

GEETHA ACHAL said...

நன்றி ஸ்ரீவித்யா...

நன்றி ஸாதிகா அக்கா...நாங்க விசாரித்ததில் அவங்க இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்கவில்லை...

அப்ப...இவ்வளவு பள்ளிகள் இருக்கின்றது...இப்படி இருந்தால் என்னத சொல்ல....

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்...

நன்றி புவனா..

நன்றி சசி...//தமிழ் நாட்டை கொள்ளை அடித்து கொண்டிருக்கும் பள்ளிகளில் இதுவும் ஒன்று// உண்மை தான்...

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா...ஆமா, firework என்றால் கண்டிப்பாக அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்...

என்ன கொடுமை பாருங்க...எல்லா காசு புடுங்குற காலமாகிவிட்டது...காசு இருந்தால் தான் படிக்கமுடியும் என்றால் எப்படி நிலைமை மாறிவிட்டது...

GEETHA ACHAL said...

நன்றி சிநேகிதி...ஆமாபா அவளுக்கு டிஸ்னியினை பார்த்ததில் மிகவும் சந்தோசம்...

GEETHA ACHAL said...

நன்றி வெங்கட்...

நன்றி தேவசேனா..ஆமாபா, பெற்றோர்களால் எப்படி தான் அவ்வளவு காசு கொடுத்து டூர் அனுப்பமுடியுதோ...தெரியவில்லை...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...

நன்றி பவித்ரா...

நன்றி மேனகா..

நன்றி சரவணா...

நன்றி நிது...

GEETHA ACHAL said...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி ஹர்ஷினி அம்மா...ஆமா, நீங்க சொல்வது போல Meet the charactersயிற்கு நிற்பது போல ஒரு கொடுமை ஒன்றுமே இல்லை...

நல்ல வேலை அக்ஷ்தா குட்டி அவளுக்கு பிடித்த Characters உடன் மட்டும் தான் போட்டோ எடுக்க ஆசைப்பட்டாள்...இல்லை என்றால் நாங்க நொந்தே போயிருப்போம்...

GEETHA ACHAL said...

நன்றி சாரு அக்கா...ஆமா கரெக்டாக கண்டுபிடித்துவிட்டிங்க....ரொம்ப நன்றி...

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா...

San said...

You took us to a virtual tour geetha,happy that akshitha enjoyed disney world .As you said i could hardly remember going for school trips n college tours .These days kids are being sent wherever they wanted to visit .Thanks for sharing the video dear .I had been to universal studio though ,rest is to explore still .

ஸாதிகா said...

புனித ஜான்ஸ் பள்ளியில் ஒரே காம்பவுண்டில் இண்டர்நேஷனல் பள்ளி(செண்ட்ரல் போர்ட் சிலபஸ்)மெட்ரிகுலேஷன் பள்ளி சிலபஸ் இரண்டு பள்ளிகள் உண்டு.உறவினர் பிள்ளைகள் அங்கு படிப்பதால் அடிக்கடி அங்கு சென்றுவருவேன்.அதே போல் வேலம்மாலிலும் இருக்கலாம்.

Kanchana Radhakrishnan said...

படங்கள் அருமை.

Geetha6 said...

அருமை!

Vijiskitchencreations said...

super superup. கீதா நாங்களும் செப்டம்பரில் டிஸ்னிலாண்ட் போய் வந்தோம். 2 நாள் மட்டுமே. என் குட்டிஸுக்கு ரொம்ப திருப்ப்தியா இருந்தது. ஆனல் இன்னும் நிறய்ய நாட்கள் இருந்தால் நன்றாக தான் இருக்கும். லீவு இல்ல என்பதினால் 2 நாட்கள்.
அடுத்தது ப்ளோரிடா என்று சொல்லிகொண்டு இருக்கிறாங்க.
உங்க ட்ரிப்+ படங்கள்+விளக்கங்கள் எல்லாம் அருமை.

Related Posts Plugin for WordPress, Blogger...