பிறந்தநாள் கொண்டாட்டம்.....

இன்று என்னுடைய கணவருடைய பிறந்தநாள்…இந்த வருடம் கொண்டாட வேண்டும் என்று அக்ஷ்தா ஆசைப்பட்டாள்…


ஒரு வாரமாக இதே பேச்சு தான் அவளிடம்…யார் வந்தாலும் சரி…அல்லது போன் பேசினாலும் சரி… எங்க டாடிக்கு பர்த்தேடே என்று சொல்லி…நான் இதனை செய்ய போறேன்…என்று எல்லாம் விளக்கமும் கொடுக்க ஆரம்பித்துவிடுவாள்…இதனால எல்லோருக்கும் இவருடைய பிறந்தநாள் இன்று என்று தெரிந்து…எப்பொழுதும் இல்லாமல் இந்த வருடம் நிறைய பேர் வாழ்த்து தெரிவித்தாங்க…எல்லா அக்ஷ்தா குட்டியால் தான்…

அவளே கேக் இப்படி தான் இருக்க வேண்டும் என்று முன்னமே தெரிவித்துவிட்டாள்…Yellow கலர் கேக் with lots of cream இருக்க வேண்டும் என்று சொன்னால்…சக்லேட் கேக் வேண்டாம் என்றும் சொன்னாள்…..அதே மாதிரி Round cake  வேண்டாம் என்று எல்லாம் கண்டிஷன் போட்டாள்….அப்பறம் என்ன….அவளுடைய ஆசையிற்கு ஏற்றாற் போலவே நானும் அவளும் சென்ற கேக்கினை ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தோம்…


அப்பறம், நேற்று மதியம் வீட்டினை Decorate செய்ய வேண்டும் என்று சொன்னாள்…..அதுவும் அவளுடைய ரூமில் தான் செய்ய வேண்டும் என்று அவ கூற, சரி என்று சொல்லி அவளுடைய Craft Boxயில் இருந்த சில பொருட்களை வைத்து நானும் அவளும் ரூமை அவளுடைய விருப்பத்திற்கு ஏற்றாற் போல Decorate செய்தோம்…எதோ எங்களால் முடிந்தது…பிடித்து இருக்கா…


 Party Hat, Pinata, Blowers, Bubbles என்று எல்லாம் வாங்க வேண்டும் என்று சொல்லவே, முன்னமே வாங்கிவைத்தாச்சு.( Party Hatயினை போடவே கடைசியில் மறந்து போயச்சு….).… யார் பேசினாலும் அவருடைய பிறந்தநாள் பற்றியே பேசிகொண்டு இருப்பாள்…அவளுக்கு Disney யிற்கு போய் வந்தது இருந்து, பிறந்தநாளை இப்படி தான் கொண்டாட வேண்டும் என்று ஒரு எண்ணம்…சரி…குழந்தையின் ஆசையால் கொண்டாடிவிடுவோம் என்று பிறந்தநாளை கொண்டாடினோம்..…

கேக்கினை அக்ஷ்தாவும் , டாடியும் சேர்த்து வெட்டினாங்க…அவளுக்கு மிகவும் சந்தோசம்…கேக்கும் சூப்பர்ப்…எங்களுடைய Neighboursயிற்கு எல்லாம் கேக் கொடுத்தோம்…


அப்பறம், நானும் அவளும் சேர்த்து Blowers, Bubbles எல்லாம் ஊதினோம்… எல்லொருக்கும் இவருடைய பிறந்தநாள் இன்று என்று தெரிந்ததால், எங்களுடைய Neighbours எல்லாரும் இவருக்கு Flowers, Cake, Donuts என்று  gifts கொடுத்தாங்க… கூடவே அக்ஷ்தாகுட்டிக்கும் தான்…அவளுக்கு ஒரு Remote Car கொடுத்தாங்க….


கடைசியாக TinkerBell Pinataவில் நிறைய சக்லேட், அவளுக்காங்க நாங்க வாங்கி வைத்து இருந்த Toy Story பொம்மைகள் எல்லாம் பினாட்டாவின் உள்ளே போட்டு வைத்துவிட்டோம்…

அக்ஷ்தா சின்ன பொன்னு என்பதால், கயறினை இழுத்தால் சக்லேட் விழுவது போல் இருப்பதினை தேர்ந்து எடுத்தோம்..ஆனால் அவளே அதனை குச்சி வைத்து அடிப்பது தான் வேண்டும் என்று சொல்லவே…சரி…அவ ஆசைக்கு அதனை குச்சியினை வைத்து சிறிது நேரம் அடித்தாள்…அப்புறம் கயறினை பிடித்து இழுத்துவிட்டாள்…அதனுள் சக்லேட், பொம்மைகள் எல்லாம் பார்த்தில் மிகவும் மகிழ்ச்சி…What a great Day  என்று சொன்னாள்…அவளுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் தான்…குழந்தை நமக்காக பார்த்து பார்த்து செய்வதில் எவ்வளவு சந்தோசம்…அதற்கு ஈடு இணையே கிடையாது….

34 comments:

எல் கே said...

உங்கள் கணவருக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீதா,,,

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் குட்டியின் அப்பாக்கு...

rtoram said...

We wish your Sir, a very happy birthday.

Mahi said...

உங்களவருக்கு வாழ்த்துக்கள் கீதா!

அக்ஷதாவின் ஆர்வமும் டெகரேஷன்&அரேஞ்ச்மெண்ட்ஸும் அருமையா இருக்கு!

ஸ்வர்ணரேக்கா said...

குழந்தைகள் எப்போதும் நம் வாழ்வின் வண்ணம் சேர்ப்பவர்கள்...

உங்கள் அஷதாவும் அப்படி உங்களவரின் பிறந்தநாளை வண்ணமயமாக செய்துவிட்டாள்...

அன்புடன் மலிக்கா said...

குட்டி தேவதைக்கு இந்த சின்னம்மாவின் அன்பு முத்தங்கள். அதோடு மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும்..

என்றும் சுகமோடு
வாழட்டும் பல்லாண்டு..

'பரிவை' சே.குமார் said...

உங்கள் அன்புக் கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அப்பா பிறந்தநாளை கொண்டாடிய குட்டிக்கு இனிய வாழ்த்துக்கள்.

சிங்கக்குட்டி said...

உங்கள் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதா.

சில படங்கள் பார்க்க முடியவில்லை? சரி செய்யவும்.

நன்றி.

Unknown said...

thats very cute...

Ravi kumar Karunanithi said...

wish u happy b'day

Akila said...

First my belated wishes to your hubby.... and what you say in ur last para is true... nama kuzhanthaigalluku seirathil irukum santhoshatha vida, avunga namaku chinna chinna vishayam seiyum pothu unmayagave,antha santhoshathuku eedu enai kidayathu....

Menaga Sathia said...

தங்கள் கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! நல்லா எஞ்சாய் பண்ணிருக்கிங்க, சில படங்கள் தெரியவில்லை.....

Unknown said...

என்னுடைய வாழ்த்தை கண்டிப்பா சொல்லிடுங்க. அருமையா கொண்டாடி இருக்கீங்க.

vanathy said...

happy birthday to your husband. Your girl looks very cute.

ஸாதிகா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.படங்களும்,சொன்னவிதமும் அருமை.

Angel said...

wow.you little one is a thoughtful sweet angel.dad would've been very proud and happy innit.real happiness is in such celebrations .
all the pictures are nice,
wait a minute how come its sunny in u.s.its gloomy in england

தெய்வசுகந்தி said...

உங்க கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Priya said...

உங்க குட்டி செல்லத்திற்கு எனது வாழ்த்துக்கள், அவங்க அப்பாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்! அழகான நாளாக அமைந்ததில் மிக சந்தோஷம் கீதா!

Devasena Hariharan said...

so sweet, lucky daddy. Belated Birthday wishes to ur hubby.

Kanchana Radhakrishnan said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

so touching.belated wishes to your hubby and lots of love to the little one.

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்..

நன்றி அமுதா...

நன்றி ராம்...

நன்றி மகி...

நன்றி ஸ்வர்ணரேக்கா...

நன்றி மலிக்கா அக்கா...

GEETHA ACHAL said...

நன்றி குமார்....

நன்றி சிங்ககுட்டி...

நன்றி வித்யா...

நன்றி ரவி...

நன்றி அகிலா...

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி புதுகை தென்றல்...

நன்றி வானதி..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி ஏஞ்சலின்...இது காலையில் சுமார் 11 மணிக்கு எடுத்தது...அதனால் தான் அப்படி பளிச் என்று இருக்கின்றது...இங்கேயும் சீக்கிரமாக இருட்டிவிடுக்கின்றது...

நன்றி தெய்வசுகந்தி...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...

நன்றி தேவசேனா...

நன்றி கஞ்சனா...

நன்றி அனாமிகா...

சாருஸ்ரீராஜ் said...

belated b'day wishes.... atchu looks so cute

Asiya Omar said...

பிறந்த நாள் கொண்டாட்டம் அருமை.போட்டோஸ் சூப்பர்,வாழ்த்துக்கள்.இது எப்படி என் கண்ணில் படாமல் போனது.

sakthi said...

உங்களவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Priya Suresh said...

Belated birthday wishes to ur better half, kutty paapa azhaga irrukanga..

Vijiskitchencreations said...

akshtha is very cute and she is very brilliant Geetha.

vonvery my belated wishes to your hubby.
What is the menu, u did't post.

நிலாமதி said...

சாரி .........பிந்திய பிறந்த நாள்வாழ்த்துக்கள். உங்களையும் குடும்பத்தாரையும் கண்டத்தில் மகிழ்ச்சி .
நானும் பக்கத்து நாடு தான். குட்டி அழகோ அழகு. பாராடுக்களும் வாழ்த்துக்களும்.

Nithu Bala said...

Belated wishes to your Hubby..looks like you guys had a great time..

geetha said...

hai geetha achal i'm geetha from salem just now i saw your blogspot its simply nice first thing i note down your saravana bavan sambar because i like that sambar very much. thank you for that receipe

Unknown said...

fathima very sweet and careing loveable child

Related Posts Plugin for WordPress, Blogger...