கப்ஸிகம் பிரவுன் ரைஸ் - Capsicum Brown Rice

குடைமிளகாயில் அதிக அளவு விட்டமின்ஸ் மற்றும் நார்சத்து இருக்கின்றது…

இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியம்…பச்சைகலர் குடைமிளகாயினை விட சிவப்பு கலர் குடைமிளகாயில் அதிக அளவு சத்துகள் இருக்கின்றது…

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
     குடைமிளகாய் – 2
     வேகவைத்த பிரவுன் ரைஸ் – 2 கப்
     மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
     உப்பு தேவையான அளவு
முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு தாளிக்க
·         கடலைப்பருப்பு – 1 தே.கரண்டி

வறுத்து பொடித்து கொள்ள :
·         தனியா – 2 மேஜை கரண்டி
·         உளுத்தம்பருப்பு – 2 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 6
·         வேர்க்கடலை – 2 மேஜை கரண்டி

கடைசியில் சேர்க்க :
·         கொத்தமல்லி சிறிதளவு பொடியாக நறுக்கியது

செய்முறை :

குடைமிளகாயினை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

தனியா + உளுத்தம்பருப்பு + காய்ந்தமிளகாய் + வேர்க்கடலை ஒவ்வொன்றாக தனி தனியாக வறுத்து கொண்டு அனைத்து பொருட்களையும் சேர்த்து பொடித்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து, குடைமிளகாய் + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து முக்கால்பாகம் வதக்கி கொள்ளவும்.

பொடித்ததையும் குடைமிளகாயில் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.

கடைசியில் சாதம் + கொத்தமல்லியும் இத்துடன் சேர்த்து கிளறவும்.


சுவையான சத்தான கப்ஸிகம் சாதம் ரெடி.


இதனை சிப்ஸ், வறுவலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

17 comments:

எல் கே said...

முயற்சிக்கிறேன்

இப்னு அப்துல் ரஜாக் said...

very nice sister

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை.

Unknown said...

Hi Geetha,

Sorry i commented for Nithu on yours!!The capsicum rice looks very inviting..mihavum arumai...yummy...:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

'பரிவை' சே.குமார் said...

நல்ல குறிப்பு படத்துடன்...
பார்க்கலாம்... இந்த வாரம் முயற்சிப்போம்.

Unknown said...

yummy and delicious rice...luks very nice...

Kanchana Radhakrishnan said...

super geetha.

Raks said...

Tried this once long time before,forgotten after that,liked your version,sounds nice!

சசிகுமார் said...

Nice

Mrs.Mano Saminathan said...

வித்தியாசமான சாதம். குறிப்பும் நன்றாக இருக்கிறது கீதா! நான் பச்சரிசியில் இப்படி செய்வேன்.

Menaga Sathia said...

சாதம் பார்க்கவே சாப்பிடதோணுது...

தெய்வசுகந்தி said...

Looks Yummy!!!!!!

vanathy said...

super rice.

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்..

நன்றி ஒருவன்....

நன்றி புவனா...

நன்றி சமீனா..

நன்றி குமார்...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரேமலதா...

நன்றி கஞ்சனா...

நன்றி ராஜி...

நன்றி சசி...

நன்றி மனோ ஆன்டி

Nita said...

Hi Geetha,
Prepared this rice today and this turned out very tasty. Your blog has tasty and healthy recipes. Thanks.

Unknown said...

geetha aunty badusha seivathu eppadi mattum solunga aunty plz...plz...plz

Related Posts Plugin for WordPress, Blogger...