காளிப்ளவர் ஒட்ஸ் கட்லட் - Cauliflower Oats Cutlets


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
காளிப்ளவர் – 1
ஒட்ஸ் – 1 கப்
எண்ணெய் சிறிதளவு
தக்காளி சாஸ் – 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         சீரகதூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

செய்முறை :
·         காளிப்ளவரினை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும். ஒட்ஸினை கொரகொரப்பாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

·         கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்துள்ள காளிப்ளவர் + தக்காளி சாஸ் + தூள் வகைகள் சேர்த்து 5 – 6 நிமிடங்கள் வதக்கவும்.

·         சிறிது நேரம் ஆறவைத்த பிறகு, இத்துடன் ஒட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

·         அவனை 400Fயில் மூற்சூடு செய்யவும். விரும்பிய வடிவத்தில் கட்லட்டுகள் செய்து அவனில் வைக்கும் ட்ரெயில் வைத்து சிறிது எண்ணெய் அதன் மீது ஸ்பேரே செய்யவும்.

·         ஒரு பக்கம் நன்றாக க்ரிஸ்பியாக வந்தவுடன், கட்லடுகளை திருப்பி போட்டு மேலும் சில நிமிடங்கள் வேகவிடவும்.

·         சுவையான சத்தான மாலை நேர ஸ்நாக் ரெடி.

கவனிக்க:
காளிப்ளவரினை விரும்பினால் பொடியாக நறுக்குவதற்கு பதிலாக  துறுவி கொள்ளவும்.

ஒட்ஸினை தவிர்த்து இத்துடன் உருளை கிழங்கு சேர்த்து செய்யலாம். தக்காளி சாஸிற்கு பதிலாக வேறு சாஸ் சேர்த்து கொள்ளலாம்.

அவனில் செய்யாமல் இதே மாதிரி தோசை கல்லிலும் செய்து சாப்பிடலாம்

21 comments:

எல் கே said...

good one thanks for sharing

Mahi said...

நல்ல ஐடியா கீதா! பார்க்கும்போதே நல்லா இருக்கு கட்லட்!:P

Chitra said...

ஓட்ஸ் வச்சு நீங்க ஒரு குக் புக் போடலாம்ங்க... சூப்பர் ரெசிபிங்க...

Kurinji said...

supera erukku mam! konjam anuppi vaiynga!

சசிகுமார் said...

அருமை அக்கா

Krishnaveni said...

looks great, if you don't mind, can you please tell me the oven temperature and app. time to set, because i want to try this recipe

ஸாதிகா said...

பார்க்க நன்றாக உள்ளது.

Unknown said...

what a healthy cutlet. Looks so yummy. Thanks for sharing.

Pushpa said...

Another yummy dish from you,yummy combo

குறையொன்றுமில்லை. said...

ஓட்சில் கட்லெட்டா. வித்தியாசமாதான் இருக்கு. செய்துட வேண்டியதுதான்.

சாருஸ்ரீராஜ் said...

கீதா கட்லட் சூப்பரா இருக்கு

Menaga Sathia said...

கட்லட் மிக அருமையாக இருக்கு...

Raks said...

Arumaiyana recipe,nalla combination geetha,a must try recipe!

vanathy said...

super & healthy cutlets.

Asiya Omar said...

கட்லெட் அருமை,அதுவும் ஓவனில் சூப்பர்.

ADHI VENKAT said...

சூப்பர்.

Kanchana Radhakrishnan said...

super recipe.

Nithu Bala said...

Healthy recipe..loved it..

Anonymous said...

Lovely cutlets Geetha...and that too n the oven s a super idea...Was it nice and crisp on the outside? Wat was the temperature???

Shobha
www.anubhavati.wordpress.com

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு...

இதற்கு 400Fயில் செய்தால் நன்றாக இருக்கும்...

shan said...

Hi geetha,
I tried the cauliflower oats cutlet. Came up very good. Thank u for the innovative recipe.
shan

Related Posts Plugin for WordPress, Blogger...