ட்ரை குலாப் ஜாமூன் - Dry Gulab Jamun

இது அக்ஷ்தா குட்டி செய்த ஜாமூன்…அவளுக்கு இது Glazed Munchkins மாதிரி இருக்கும் என்று சொல்லியதால் அவள் தான் இதனை செய்ய வேண்டும் என்று விரும்பி செய்த ஜாமூன்…

நீங்களும் செய்து பாருங்க…சூப்பராக இருக்கும்…எளிதில் செய்ய கூடிய பிசுபிசுப்பு இல்லாத ஜாமூன்…

சமைக்க தேவைப்படும் நேரம்: 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         குலாப் ஜாமூன் மிக்ஸ் – 1 Packet
·         நெய் – 1 தே.கரண்டி
·         எண்ணெய் – பொரிப்பதற்கு
·         சக்கரை – 1/4 கப்

சக்கரை பாகு செய்ய :
·         சக்கரை – 1 கப்
·         தண்ணீர் – 1 கப்
·         ஏலக்காய் – 2 பொடித்தது
·         எலுமிச்சை ஜுஸ் – 1/2 தே.கரண்டி

செய்முறை :
·         குலாப் ஜாமூன் மிக்ஸினை தேவையான அளவு பால் (அல்லது) தண்ணீர் + 1 தே.கரண்டி நெய் சேர்த்து மாவினை பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்…அழகாக இருக்கா…எல்லாம் அக்ஷ்தாவின் கைவண்ணம் தான்…

·         உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து , தனியாக வைத்து கொள்ளவும்.


·         சக்கரை பாகிற்கு, சக்கரை + தண்ணீர் + ஏலக்காய் சேர்த்து 5 – 6 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கடைசியாக எலுமிச்சை ஜுஸ் சேர்த்து கொள்ளவும்.

·         பொரித்து வைத்துள்ள ஜாமூனை சூடாக இருக்கும் சக்கரை பாகில் போடவும். இதனை 10 – 15 நிமிடங்கள் ஊறவிடவும்.

·         ஒரு தட்டில் 1/4 கப் சக்கரையினை கொட்டி, ஊறிய ஜாமூன் ஒவ்வொன்றாக எடுத்து சக்கரையில் புரட்டி வைக்கவும்….இதுவும் அக்ஷ்தாவின் வேலை தான்…

·         இந்த ஜாமூனை 1 மணி நேரம் வைத்துவிட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். சுவையான எளிதில் செய்ய கூடிய ட்ரை ஜாமூன் ரெடி.

கவனிக்க :
தண்ணீரீன் அளவினை அதிகமாக வைத்தால் ஜாமூன் பிசுபிசுப்பாக இருக்கும்.

அதே போல், எலுமிச்சை ஜுஸ் சேர்ப்பதால் திரும்பவும் சக்கரை பாகு கட்டியாகாமல் இருக்கும்.

கலர் இன்னும் darkஆக விரும்பினால், பொரித்த ஜாமூனை திரும்பவும் எண்ணெயில் போட்டு பொரித்தால் டார்க் கலராக சூப்பராக இருக்கும்.

சக்கரையில் புரட்டாமல், Sweetened Coconut Flakes / தேங்காய் துறுவலில்  கூட பயன்படுத்தலாம்.

இந்த ட்ரை ஜாமூன் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.

19 comments:

Pushpa said...

Superb dry jamuns,ungalluku deppavali valthukal...

சிநேகிதி said...

ரொம்ப நல்லா இருக்கு கீதா.. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Cool Lassi(e) said...

The dry jamun looks awesome. Nice idea to try it dry and with a generous coating of sugar!

தெய்வசுகந்தி said...

சூப்பர் ஜாமூன்!!!

Chitra said...

Very smart girl!

HAPPY DEEPAVALI to you all!

நிலாமதி said...

அக்ஸிகாவின் சமையல் அசத்தல் . உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

kavisiva said...

எங்களுக்காக ட்ரை ஜாமூன் செய்த அக்ஷதா குட்டிக்கு நன்றி :). ரொம்ப அழகா இருக்கு செல்லம்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஜாமூன் அருமை. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

asiya omar said...

soo nice.happy diwali.

Jaleela Kamal said...

ponnukku ippa vee samaiyal kaRRu kodutthaassaa?
ini ungkalukku jolli thaaan

ஸாதிகா said...

ட்ரை குலோப்ஜாமூன் பார்க்கவே அழகா இருக்கு .இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Priya said...

Wow kutty pappa kalakuranga, dry jamuns paakura pothy rendu yedukalamnu thonuthu, very tempting..

Devasena Hariharan said...

Nice dish for diwali.

கவிநயா said...

குட்டிப் பாப்பாவுக்கு சுத்திப் போடுங்க :) இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா...

நன்றி சிநேகிதி...

நன்றி கூல்....

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி சித்ரா...

GEETHA ACHAL said...

நன்றி நிலாமதி...

நன்றி கவிசிவா...

நன்றி புவனா...

நன்றி ஆசியா...

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா...

நன்றி ஸாதிகா....

நன்றி ப்ரியா...

நன்றி தேவசேனா...

நன்றி கவிநயா...

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு கீதா , இப்பவே குட்டிமாவுக்கு டிரெயினிஙா... வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

நன்றி சாரு அக்கா...குட்டிமாவிற்கு ட்ரெயினிங்க எல்லாம் இல்லை....அவளுக்கும் பொழுது போகனும் இல்லை...அதனால் தான் இப்படி எல்லாம்...

Related Posts Plugin for WordPress, Blogger...