கர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice


எப்பொழுதும் செய்யும் எலுமிச்சை சாதத்தினை விட இது சிறிது வித்தியசமாக இருக்கும். திருமதி. மகியின் குறிப்பினை பார்த்து செய்தது….மிகவும் சூப்பராக இருக்கும்நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வேகவைத்த பிரவுன் ரைஸ் – 2 கப்
·         எலுமிச்சை பழம் – 1
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

அரைத்து கொள்ள :
·         கொத்தமல்லி – 1/4 கட்டு
·         பச்சை மிளகாய் – 3
·         இஞ்சி சிறிய துண்டு

தாளிக்க :
·         எண்ணெய் – 2 தே.கரண்டி
·         கடுகு தாளிக்க
·         உளுத்தம்பருப்பு – 2 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·         அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும். (மைய அரைக்க கூடாது.)

·         எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பு + கருவேப்பில்லை போட்டு தாளித்து அத்துடன் அரைத்த கலவையினை போட்டு அரை நிமிடம் வதக்கவும்.

·         கடைசியில் எலுமிச்சை சாறு + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து  கலக்கவும்.

·         இந்த கலவையினை சாதத்துடன் சேர்த்து கிளறவும்.

·         சுவையான வித்தியசமான மெலன் ரைஸ் ரெடி. இதனை வறுவல், சிப்ஸ் போன்றவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
பொதுவாக கர்நாடகா ஸ்டைலில் எலுமிச்சை சாதத்தில் தேங்காய் சேர்ப்பாங்கநான் சேர்க்கவில்லை…..விரும்பினால் சேர்த்து கொள்ளவும். நான் பிரவுன் ரைஸில் செய்து இருக்கின்றேன்

35 comments:

Mrs.Menagasathia said...

வித்தியாசமா நல்லாயிருக்கு கீதா...

புவனேஸ்வரி ராமநாதன் said...

புதுக் குறிப்பு நல்லாயிருக்கு.

Padhu said...

Looks so tempting!!

LK said...

பகிர்வுக்கு நன்றி கீதா

Kurinji said...

recipe padikkum pothe sapidanum pola thonuthu.

Cool Lassi(e) said...

Nice lunch option! I made the authentic tamilnadu version 2 days ago. :)

Akila said...

brown ricesil, lemon rice... differenta iruku.... looks yummy dear....

Akila said...

brown ricesil, lemon rice... differenta iruku.... looks yummy dear....

Akila said...

brown ricesil, lemon rice... differenta iruku.... looks yummy dear....

Pushpa said...

Healthy and delicious lemon rice.

ஸாதிகா said...

அருமையான சிம்பிளான குறிப்பு

Kanchana Radhakrishnan said...

புதுக் குறிப்பு.பகிர்வுக்கு நன்றி கீதா.

Kanchana Radhakrishnan said...

புதுக் குறிப்பு.
பகிர்வுக்கு நன்றி கீதா.

Mahi said...

Thanks for trying the recipe geetha! Indeed, this is a perfect healthy version.:)

Divya Vikram said...

Brown rice makes it healthy!

கோவை2தில்லி said...

வித்தியாசமாக இருக்கு. செய்து பார்க்கிறேன்.

சசிகுமார் said...

பயனுள்ள டிப்ஸ்.

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு கீதா..

Vidhya said...

looks really good and tempting

Premalatha Aravindhan said...

Really delicious,love this version...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

லெமன் ரைஸ் நல்லா காரசாரமா இருக்கும் போல இருக்கே கீதா..:))

San said...

Karnataka lemon rice is yummylicious geetha ,very tempting .Like to have it with potato fry.

http://sanscurryhouse.blogspot.com

Pavithra said...

Geetha nanum ipadiye lemon rice seiven but for grinding i will not add coriander.. others all same.

Pavithra said...

Geetha unga search box work pannala just check it. By the way i am going to make black urad dhal podi today.

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி புவனா..

நன்றி பது...

நன்றி கார்த்திக்...

நன்றி குறிஞ்சி..

GEETHA ACHAL said...

நன்றி கூல்...

நன்றி அகிலா...

நன்றி புஷ்பா...

நன்றி ஸாதிகா அக்கா...

நன்றி கஞ்சனா...

நன்றி மகி...

GEETHA ACHAL said...

நன்றி திவ்யா...

நன்றி கோவை2தில்லி...

நன்றி சசி...

நன்றி சாரு அக்கா...

நன்றி வித்யா...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரேமலதா...

நன்றி தேன் அக்கா..

நன்றி சன்...

நன்றி பவித்ரா...கண்டிப்பாக செய்து பாருங்க..நல்ல இருக்கும்...

Devasena Hariharan said...

good one Geetha.

Anonymous said...

brown rice na enna

sofiya said...

very nice dishes,, pls update more non veg recipes

GEETHA ACHAL said...

நன்றி தேனசேனா..

நன்றி அனானி...பிரவுன் ரைஸ் என்பது உமி நீக்காத அரிசி...

நன்றி சோபியா...கண்டிப்பாக non-veg குறிப்புகள் போடுகிறேன்...

kri ash said...

all your receipes are yummy.

kri ash said...

today only i saw your blog,i have copied chutneys ,karnataka rice and so on. i thank you for sharing.

kri ash said...

karnataka rice came out well,it really tastes different,my dd's and hub liked it.THANK YOU

Related Posts Plugin for WordPress, Blogger...