சோயா உருண்டை புட்டு - Meal Maker - Soya chunks Puttu


சோயா உருண்டைகள் ( Meal maker) ஒரு வெஜிடேரியன் உணவு…. இதில் அதிக அளவு புரோட்டின் இருக்கின்றது…முட்டை, பால், சிக்கனை விட இதில் அதிக அளவு புரோட்டின் காணப்படுக்கின்றது.

டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு..இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால், எடை குறைய உதவுக்கின்றது.

அதே போல சக்கரையின் அளவு, BP போன்றவையினை குறைக்க உதவுக்கின்றது.

சோயாவில் அதிக அளவு நார்சத்து காணப்படுக்கின்றது…இதில் சக்கரை இல்லை…இதில் Iron, Phosphorous, Copper, Magenese போன்ற மினரல்ஸ் காணப்படுக்கின்றது…

சோயா உருண்டைகள் அல்லது உதிர்த்த சோயா , TVP (Textured Veg. Protein) போன்றவை கிடைக்கின்றது… அனைவரும் சாப்பிட கூடிய சத்தான உணவு…கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்வது நல்லது….


சமைக்க தேவைப்படும் நேரம் : 25 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         சோயா உருண்டைகள் – 1 Packet
·         வெங்காயம் – 2
·         பூண்டு – 10 – 15 பல்
·         பச்சைமிளகாய் – 4 -5
·         இஞ்சி – சிறிய துண்டு
·         கருவேப்பில்லை – 5 இலை
·         கொத்தமல்லி - சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 2 தே.கரண்டி
·         கடுகு , சீரகம் – தாளிக்க

செய்முறை :
·         சோயா உருண்டைகளை தண்ணீரில் போட்டு வேகவைத்து கொண்டு அதனை மிக்ஸியில் போட்டு உதிர்த்து கொள்ளவும். (அல்லது) உதிர்த்த காய்ந்த சோயாவினை வாங்கி அதனை தண்ணீரில் வேகவைத்து கொள்ளவும்.


·         வெங்காயம் + பூண்டு + பச்சைமிளகாய் + இஞ்சி + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி வைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + சீரகம் தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.


·         வெங்காயம் வதங்கியவுடன் சோயா + தூள் வகைகள் சேர்த்து கிளறி சிறிது நேரம் நன்றாக வதக்கவும்.
·         கடைசியில் கொத்தமல்லி தூவ்வும். சுவையான சத்தான சோயா புட்டு ரெடி. இதனை சாதம், குழம்பு, சாப்பத்தி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


18 comments:

Srividhya Ravikumar said...

healthy puttu... nanum ithey pol soya chunks dry curry potu irukiren... parkavum...

எல் கே said...

thanks for the healthy food

ஸாதிகா said...

அட..சோயா உருண்டையிலும் புட்டா?சூப்பர்ப்.

Unknown said...

Hi Geetha,

Super puttu...:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

ஸ்வர்ணரேக்கா said...

ஹாய் கீதா..

நல்லா, வித்தியாசமா ஒரு டிஷ் சொல்லியிருக்கீங்க...

Anonymous said...

This is great. I am bored of eating the same soya chunck curry. Will try it today.

சாருஸ்ரீராஜ் said...

சோயா புட்டு சூப்பரா இருக்கு.....

சசிகுமார் said...

என் தளத்திற்கு வந்து ஆதரவு கொடுத்ததற்கு மிக்க நன்றி அக்கா.

Kurinji said...

healthy n yummy puttu...

Menaga Sathia said...

நல்லாயிருக்கு கீதா...நானும் இதுபோல் செய்திருக்கேன்,தே.துருவலுக்கு கேரட் துருவல் சேர்ப்பேன்.நல்லாயிருக்கும்.

பித்தனின் வாக்கு said...

நல்ல சத்தான உணவு டிரை பண்ணி விடுவேம். மிக்க நன்றி.

Pushpa said...

Nutritious and yummy puttu.

Mahi said...

nice n healthy dish!

Kanchana Radhakrishnan said...

healthy puttu.

Akila said...

healthy puttu dear....

Thenammai Lakshmanan said...

நல்லா பார்க்கவே காரசாரமா இருக்கு கீதா செய்து பார்க்கிறேன்..

vanathy said...

super recipe, Geetha

GEETHA ACHAL said...

அனைவருக்கும் மிகவும் நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...