பாசிப்பருப்பு பாயசம் - Pasiparupu Payasam / Moong Dal


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பாசிப்பருப்பு – 1 கப்
         பொடித்த வெல்லம் – 1/4 கப்
         ஏலக்காய் – 2
கடைசியில் சேர்க்க :
·         நெய் – 1 மேஜை கரண்டி
·         முந்திரி, திராட்சை சிறிதளவு

செய்முறை :
·         பாசிப்பருப்பினை 3 கப் தண்ணீர் ஊற்றி பிரஸர் குக்கரில் போட்டு 3 - 4  விசில் வரும் வரை வேகவிடவும்.

·         குக்கரில் பிரஸர் அடங்கியது, அதனை திறந்து அத்துடன் பொடித்த வெல்லம் + ஏலக்காய் சேர்த்து நன்றாக வெல்லம் வாசம் போகும்வரை கொதிக்கவிடவும்.

·         கடைசியில் முந்திரி + திராட்சை சேர்த்து நெயில் வறுத்து இதில் சேர்க்கவும். சுவையான சத்தான பாயசம் ரெடி.

குறிப்பு :
இத்துடன் பால் சேர்த்து செய்தால் இன்னும் சுவையுடன் இருக்கும்.
ரொம்பவும் கெட்டியாக இல்லாமல் சிறிது தண்ணியாக இருந்தால் தான் இந்த பாயசம் சூப்பராக இருக்கும்

31 comments:

ADHI VENKAT said...

பிரமாதம்.

எல் கே said...

எனக்கு பிடிச்ச பாயசம்

இசக்கிமுத்து said...

படிச்சு முடிக்கிறப்ப எனக்கு வயிறு கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருக்கே......

Kurinji said...

So tempting n my fav Geetha, pls pass it.

சசிகுமார் said...

Nice Tips

சாருஸ்ரீராஜ் said...

கீதா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு கைப்பிடி அளவு நான் கடலை பருப்பு சேர்த்து கொள்வேன்.

Menaga Sathia said...

பாயாசத்திலேயே மிகவும் பிடித்தது இந்த பருப்பு பாயசம்தான்,நல்லாயிருக்கு கீதா....

சிங்கக்குட்டி said...

ம்ம்ம்...தமிழ் புத்தாண்டு தோறும் எங்க அம்மா செய்வாங்க :-)

அதெல்லாம் நம்ம ஊரோட போச்சு கீதா.

vanathy said...

super!

Chitra said...

My favorite paayaasam. I add little coconut milk to it. :-)

ஸாதிகா said...

கடலைப்பருப்பு பாயசமா?இல்லை முந்திரிப்பருப்பு பாயசமா?சூப்பர் கீதா ஆச்சல்.

பிரகாசம் said...

கந்த சஷ்டி, வைகுண்ட ஏகாதசி மற்றும் திருக்கார்த்திகை விரத நாட்களில் எங்கள் வீட்டில் இந்தப்பாயசம் கண்டிப்பாக இடம்பெறும். இத்துடன் உளுந்தம்பருப்பில் செய்யும் இனிப்புவடையும் சேர்ந்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

தெய்வசுகந்தி said...

yummy!!!!!!

Asiya Omar said...

arumai .

Krishnaveni said...

super payasam, my fav too, great

Pushpa said...

Yummy payasam,my fav any day.

Raks said...

I love this payasam,very flavourful and healthy too!

செ.சரவணக்குமார் said...

வீட்ல அம்மா செய்யிற ஸ்பெஷல் ஐட்டம் இது. வீட்டு ஞாபகம், அம்மா ஞாபகம் எல்லாம் வருது இந்தப் பதிவைப் படிக்கும்போது.

Kanchana Radhakrishnan said...

payasam yummy Geetha.

Mrs.Mano Saminathan said...

புகைப்படம் மிக அழகு கீதா! அருமையான சுவையான பாயசம்!

koini said...

tempingaa irukku geetha.Thanks.

GEETHA ACHAL said...

நன்றி கோவை2தில்லி...

நன்றி கார்த்திக்...

நன்றி இசக்கிமுத்து....

நன்றி குறிஞ்சி...

நன்றி சசி...

GEETHA ACHAL said...

நன்றி சாரு அக்கா...இதுவரை கடலைப்பருப்பு சேர்த்து செய்தது இல்லை...அடுத்த முறை செய்து பார்க்கிறேன்...

நன்றி மேனகா...

நன்றி சிங்ககுட்டி...ஆமாம் வீட்டில் விஷேச நாட்களில் இது கண்டிப்பாக இடம் பிடிக்கும்...

நன்றி வானதி...

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா...ஆஹா தேங்காய் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்..ரொம்ப அருமையாக இருக்கும்...நன்றி...

நன்றி ஸாதிகா அக்கா...இது கடலைப்பருப்பும் இல்லை முந்திரிப்பருப்பும் இல்லை...பாசிப்பருப்பு பாயசம்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பிரகாசம்...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி ஆசியா அக்கா..

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி புஷ்பா...

GEETHA ACHAL said...

நன்றி ராஜி...

நன்றி சரவணக்குமார்...இந்த பாயசம் பார்க்கும் பொழுது அம்மா ஞாபகம் வந்தில் மிகவும் மகிழ்ச்சி...அதுவும் எல்லோருக்குமே அம்மா செய்தால் சூப்பராக இருக்கும்....அதுவும் அம்மாவுடைய ஸ்பெஷல் என்றால் சொல்லவே வேண்டும்...எப்படி ஞாபகம் வராமல் இருக்கும்....

நன்றி கஞ்சனா..

நன்றி மனோ ஆன்டி...

நன்றி கொயினி...

Akila said...

my favorite payasam dear... love it...

Soumya said...

delicious payasam..my favorite...feel like having from that bowl

GEETHA ACHAL said...

நன்றி அகிலா...

நன்றி சௌமியா...

Anonymous said...

ennaku piditha payasam arumai

GEETHA ACHAL said...

நன்றி மகாவிஜய்...

Related Posts Plugin for WordPress, Blogger...