வெள்ளை பட்டாணி தோசை & கத்திரிக்காய் டிபன் சாம்பார் - Peas Dosai & Brinjal Tiffin Sambar


வெள்ளை பட்டாணியில் வெரும் பீச் சுண்டல் அல்லது குருமா மட்டும் தான் செய்து சாப்பிடுவோம்…இப்படி வித்தியசமாக தோசை செய்து பாருங்கள்…மிகவும் அருமையாக இருக்கும்…

வெள்ளை பட்டாணியில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது…இதில் சக்கரையின் அளவு மிகவும் குறைவு….அதனால் சக்கரையின் அளவினை கட்டுப்படுத்துகின்றது….

இந்த பட்டாணியில் Cholesterolயினை குறைக்க உதவும் நார்சத்து(Soluble Fiber)  காணப்படுக்கின்றது…அதனால் Cholesterol அதிக  உள்ளவர்கள் இதனை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது…

அத்துடன் இதில் கல்சியம், இரும்பு சத்து, விட்டமின்ஸ் B-Complex அதிகம் இருக்கின்றது…மற்றும் மினரல்ஸ் Magnesium, Zinc, Copper, Maganese, Potassium அதிக அளவில் காணப்படுக்கின்றது….

இதில் அதிக அளவு Protein இருக்கின்றது….அனைவருக்கும் மிகவும் நல்லது…

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 4 – 5 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெள்ளை பட்டாணி – 1 கப்
·         பிரவுன் ரைஸ் / இட்லி அரிசி – 1/4 கப்
·         உப்பு தேவையான அளவு

செய்முறை :
·         வெள்ளை பட்டாணி + அரிசியினை தனி தனியாக குறைந்தது 4 – 5 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.


·         இந்த மாவுடன் உப்பு சேர்த்து கலந்து, உடனே தோசைகளாக சுடவும். சுவையான சத்தான தோசை ரெடி.

கவனிக்க : இந்த மாவினை புளிக்க வைக்க தேவையில்லை…அப்படியே தோசை சூடலாம்.

கத்திரிக்காய் டிபன் சாம்பார்

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கத்திரிக்காய் – 1/4 கிலோ
·         துவரம் பருப்பு – 1 கப்
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய் – 4
·         புளி கரைசல் சிறிதளவு

கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு தாளிக்க
·         கருவேப்பில்லை – 4 – 5 இலை
·         பெருங்காயம் சிறிதளவு

செய்முறை :
·         கத்திரிக்காய் + வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கி வைக்கவும். துவரம்பருப்பினை கழுவி கொள்ளவும்.


·         குக்கரில் துவரம்பருப்பு + காய்கள் + மஞ்சள் தூள் + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 – 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.


·         குக்கரினை திறந்து வேகவைத்த பொருட்களை சிறிது மசித்து கொள்ளவும்.


·         இத்துடன் புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து இதில் சேர்க்கவும்.


 ·         சுவையான எளிதில் செய்யகூடிய கத்திரிக்காய் டிபன் சாம்பார் ரெடி. இதனை இட்லி, தோசை, சாப்பத்தி, சாதம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

29 comments:

kousalya raj said...

உங்க தயவுல என் காலை டிபன் முடிந்தது....தோசையும் சாம்பாரும் சூப்பர்....அந்த கத்திரிக்காய் கட் பண்ணி வச்சிருக்கிற அழகு நல்லா இருக்கு...

சாருஸ்ரீராஜ் said...

பட்டாணி தோசை + இட்லி சாம்பார் சூப்பர். செய்து பார்கிறேன் கீதா.

Asiya Omar said...

சூப்பராக இருக்கு.ரொம்ப நாளாய் காணோமேன்னு பார்த்தேன்.

சசிகுமார் said...

எப்பவும் போல அருமை அக்கா. இருந்த பிரச்சினைகளுக்கிடையில் நீங்கள் கேட்டதை மறந்து விட்டேன்.
vandhemadharam@gmail.com தொடர்பு கொள்ளவும்.

Kurinji said...

Superb combination n looks yummy...

Unknown said...

சாம்பார் நன்றாக இருந்தது, மிகுந்த மகிழ்ச்சி, கத்திரிக்காயை இப்படியும் செய்ய முடிந்ததில் புதிய சுவை,

ஒரு கொஸ்துவின் அனுபவம் போல்

Padhu Sankar said...

I will try your peas dosa for sure

ADHI VENKAT said...

அருமையான ரெசிபி.

Priya Suresh said...

Pattani dosai superaa irruku Geetha, yenaku idly sambar'na uyir..

Menaga Sathia said...

பட்டாணியுடன் ஒட்ஸ் சேர்த்து அடை மாதிரி சுட்டிருக்கேன்.தோசையும் சாம்பாரும் நல்ல காம்பினேஷன்..இட்லி சாம்பார்ன்னா எனக்கு உயிர்...

Malar Gandhi said...

interesting dosai recipe...love that tiffin sambar so much.

தெய்வசுகந்தி said...

பட்டாணி தோசை வித்தியாசமா இருக்குது கீதா!

Kanchana Radhakrishnan said...

சூப்பராக இருக்கு Geetha.

THOPPITHOPPI said...

இதெல்லாம் இந்தமாதிரி படத்துல பாக்குரதோட சரி

Pushpa said...

Healthy and nutritious dosa,brinjal kuzhambu looks so yummy with the dosa.

Mahi said...

நல்லா இருக்கு கீதா!ப்ரோஸன் பட்டாணியே வாங்கிக்கறதால இந்த பட்டாணி இதுவரை நான் வாங்கினதில்ல.
தோசை-சாம்பார் எனக்கு பிடித்த காம்பினேஷன்! :P

vanathy said...

பார்க்கவே சூப்பரா இருக்கு. எனக்கு ஒரு ப்ளேட், கீதா.

Unknown said...

wow what a healthy dosa.. yummy

Chitra said...

Looks good. :-)

Krishnaveni said...

wow, lovely dish, superb

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கு நன்றி சௌசல்யா...

GEETHA ACHAL said...

நன்றி சாரு அக்கா..கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி ஆசியா அக்கா...ஆமாம் ஒரு மாதம் vacation என்பதால் அடிக்கடி வரமுடியவில்லை...

நன்றி சசி...

நன்றி குறிஞ்சி...

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி தவநெறி அண்ணா...செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மகிழ்ச்சி...

GEETHA ACHAL said...

நன்றி பது...கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி கோவை2தில்லி...

நன்றி ப்ரியா...

நன்றி மேனகா...பட்டாணியுடன் ஒட்ஸ் கண்டிப்பாக நன்றாக இருக்கும்...

GEETHA ACHAL said...

நன்றி மலர்...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி கஞ்சனா...

நன்றி தொப்பி...

நன்றி புஷ்பா...

GEETHA ACHAL said...

நன்றி மகி...

//ப்ரோஸன் பட்டாணியே வாங்கிக்கறதால இந்த பட்டாணி இதுவரை நான் வாங்கினதில்ல.
// பச்சை பட்டாணியில் அதிக அளவு சக்கரையின் அளவு இருக்கின்றது...அதனால் அதனை அதிகமாக நான் பயன்படுத்துவதில்லை...கண்டிப்பாக செய்து பாருங்க...நல்லா இருக்கும்...

GEETHA ACHAL said...

நன்றி வானதி...

நன்றி வித்யா..

நன்றி சித்ரா...

நன்றி கிருஷ்ணவேனி...

Nithu Bala said...

Arumayana recipe Geetha...think, I have missed out few of your delciious and healthy recipes..will catch up soon..

Anonymous said...

different dish

Related Posts Plugin for WordPress, Blogger...